பிசிசிஐ Archives - Oruvan.com

‘ஆசிய கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு BCCI கடிதம்
ஆசிய கிண்ணத்தை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல்.

கடந்த மாதம் 28ஆம் திகதி துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றது. இந்த சூழலில் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற இந்திய அணி மறுத்துவிட்டது. இந்த சூழலில் கோப்பையை வழங்காமல் கையோடு கொண்டு சென்றார் நக்வி.

இது சர்ச்சையான சூழலில் தற்போது ஆசிய கிண்ணத்தை இந்திய அணியின் வசம் வழங்க வேண்டுமென ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது. இதை BCCI செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இணங்க மறுத்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) முறையிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் நவம்பர் 04 முதல் 07ஆம் திகதி வரையில் ICC ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ‘ஆசிய கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு BCCI கடிதம் appeared first on Oruvan.com.

தொடர் தோல்வி – கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ
இந்திய அணியின் அண்மைய தோல்விகளை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு 10 நிபந்தனைகளை விதித்து கெடுபிடியைக் கூட்டியுள்ளது. இந்த புதிய நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகளை வீரர்கள் கடைப்பிடிக்காமல் மீறினால் ஐபிஎல் போட்டிகளில் ஆடத் தடை முதல் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடவும் தடை விதிக்கப்படும் என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்குக் கிடைத்த தகவல்களின் படி, ‘பாலிசி டாகுமெண்ட் ஃபார் டீம் இந்தியா’ என்று இந்த ஆவணத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் அடங்கிய சுற்றறிக்கை வீரர்களுக்கு வியாழக்கிழமையன்று அனுப்பப்பட்டது. அந்த நிபந்தனைகளின் விவரம்:

மிக முக்கியமாக அணி நிர்வாகத்தின் நடைமுறை விதிகளை மதிக்காமல் வீரர்கள் நடந்து கொள்வதால் ஓய்வறையில் நல்ல சூழல் நிலவுவதில்லை என்பது பெரிய விவகாரமாக விவாதிக்கப்பட்டது.

மைதானத்துக்கு அணி வீரர்கள் செல்லும் பேருந்தில் வராமல் தனியாக வரும் போக்கும் பெரும் விவாதத்துக்குள்ளானது. அதேபோல் பயிற்சிக் காலக்கட்டங்களில் வீரர்கள், பயிற்சியாளர் குழுவுடன் நேரத்தை செலவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் விவாதிக்கப்பட்டு அதற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

தனியாக வருவதென்றால் தலைமைப் பயிற்சியாளர் அல்லது தலைமைத் தேர்வாளரிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

குடும்பத்தினருடன் வீரர் தனியாக வருவது என்பது அணியினருடன் பிணைப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

பயிற்சிக்கு வருவது முதல் பயிற்சி முடிந்து செல்வது வரை என அணி வீரர்கள் சேர்ந்துதான் இருக்க வேண்டும்.

அதேபோல் எந்தத் தொடராக இருந்தாலும் குடும்பத்தினர், அதாவது மனைவி, குழந்தைகள் வீரருடன் 14 நாட்கள் இருக்கலாம். அதுவும் இந்த 14 நாட்கள் முதல் 2 வாரங்கள் கிடையாது.

குடும்பத்தினரோ அல்லது பார்வையாளராக யாராக இருந்தாலும் வீரர் அறையில் தங்கலாம். ஆனால், மற்ற செலவுகளை வீரர்தான் செய்து கொள்ள வேண்டும்.

பயணங்களின்போது வீரர்கள் தங்கள் சொந்த ஊழியர்களை அழைத்து வருவதை மட்டுப்படுத்த வேண்டும். அதாவது, தனிப்பட்ட முகாமையாளர், சமையல்காரர், உதவியாளர், பாதுகாவலர் என்று யாரை அழைத்து வருவதாக இருந்தாலும், முன்கூட்டியே அனுமதியின் பேரில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும்.

பயணத்தின்போது சொந்த வர்த்தக விளம்பர படப்பிடிப்புகளில் நடிக்க ஒப்புக் கொள்ளக் கூடாது என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கிரிக்கெட்டில் வீரர்கள் ஆடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுக் கிரிக்கெட்டை தவிர்த்தால் சர்வதேசப் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். அதோடு உள்நாட்டுக் கிரிக்கெட்டை தவிர்த்தால் மத்திய வீரர்கள் ஒப்பந்தத்திலும் அது தாக்கம் செலுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நிபந்தனைகளை வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மீறினால் தடைகள் உள்ளிட்ட தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

The post தொடர் தோல்வி – கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ appeared first on Oruvan.com.

டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா?
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் அடிக்கடி டெஸ்ட் தொடர்களில் விளையாடும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதி போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தொடர் முழுவதும் அதிகளவாக ரசிகர்கள் கூடியிருந்ததுடன், இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடராக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தற்போது, ​​இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருவருக்கொருவர் இரண்டு முறை விளையாடுகின்றன.

ஆனால் டெஸ்ட் போட்டியை இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பது குறித்த பேச்சுவார்த்தை பலனளித்தால், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்கு இரண்டு முறை விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, கிரிக்கெட் அவுஸ்திரேலியா தலைவர் மைக் பெய்ர்ட் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டின் தலைவர் ரிச்சர்ட் தாம்ப்சன் ஆகியோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை இந்த திட்டம் ஏற்கப்படும் பட்சத்தில், தற்போது வரை திட்டமிடப்பட்டு இருக்கும் கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெறும் வரை செயல்பாட்டுக்கு வராது என கூறப்படுகின்றது.

அந்த வகையில், 2027ஆம் ஆண்டு வரை பல்வேறு நாடுகள் விளையாடும் கிரிக்கெட் தொடர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இதேஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டியின் 150வது ஆண்டு நிறைவை கொண்டாடும் போட்டி நடைபெற இருக்கிறது.

உலகில் முன்னணியில் உள்ள அணிகள் அடிக்கடி டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்தர பட்டியலில் தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றலம் என கூறப்படுகின்றது.

அதேபோல், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இரண்டாம்கட்ட பட்டியலில் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற திட்டத்தை கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்தது.

இத்தகைய திட்டம், எங்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் என்று சிறிய நாடுகளை சேர்ந்த அணிகள் முறையிட்டதால், இந்த திட்டம் பேச்சுவார்த்தை கட்டத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

The post டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா? appeared first on Oruvan.com.