பாலஸ்தீனர்கள் Archives - Oruvan.com

பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு – ஐ.நா டிரம்புக்கு கண்டனம்
பாலஸ்தீனர்களுக்குச் சொந்த நாடு பெறும் உரிமை உள்ளதாக சிங்கப்பூர் தனது நீண்டநாள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாலஸ்தீனர்கள் தங்களுக்கு என சொந்த நாடு ஒன்றைப் பெறும் உரிமை உள்ளதாக கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை கருத்தும் சுட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக தொடரும் போருக்கு ஒட்டுமொத்தமான, நியாயமான, நிலைத்திருக்க கூடியதாக ஒரு தீர்வு ஏற்பட வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் உருவாவதுதான் ஒரே தீர்வு எனவும் குறித்த அறிக்கையில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாலஸ்தீன அமைப்பின் நிர்வாக, மறுசீரமைப்புத் திறனை மேம்படுத்த சிங்கப்பூர் தனது தொழில்நுட்ப உதவித் திட்டத்தின்கீழ் அந்த அமைப்புடன் செயல்படும் எனவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை மற்ற நாடுகளில் மறுகுடியமர்த்தி, அந்தப் பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து அதை பிரான்சில் உள்ள ரிவியேரா போன்ற கடற்கரை சொகுசுத் தளமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

டிரம்பின் இந்தக் கூற்று உலகத் தலைவர்களிடம் இருந்து கண்டனக் குரல்களை வரவழைத்தது. இது குறித்துப் பேசிய ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இனப் பேரழிவைத் தவிர்க்குமாறும் பிரச்சினைத் தீர்ப்பதாக எண்ணி நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்றும் டிரம்பை கேட்டுக்கொண்டார்.

“இரு நாட்டு கொள்கையை நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

The post பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு – ஐ.நா டிரம்புக்கு கண்டனம் appeared first on Oruvan.com.

எல்லை திறக்க இஸ்ரேல் மறுப்பு : பல்லாயிரம் பாலஸ்தீனர்கள் தவிப்பு
எல்லைகள் திறக்கப்படாததால் வடக்கு காஸாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் செய்வதறியாது சாலைகளில் குவிந்துள்ளனர்.

எல்லை திறப்பு உத்தரவுக்காக காஸாவின் மத்திய வட்டாரத்தில் மக்கள் கடல் காத்துக்கொண்டு நிற்பதாக சர்வதேச ஊடககங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

போர்நிறுத்த உடன்பாட்டை ஹமாஸ் மீறிவிட்டதாகக் கூறி காஸா நகரங்களுக்கு இடையிலான எல்லைகளைத் திறக்க இஸ்ரேல் மறுத்து வருவதால் அந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு காஸா நோக்கிச் செல்லும் சாலைகளை அடைத்துக்கொண்டு அவர்கள் காத்துக் கிடப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.

அவர்களில் பலர் வாகனங்களில் தொற்றியவாறு அனுமதிக்காகக் காத்துக் கிடக்கின்றனர்.

காஸா நகரத்துக்கும் வடக்குப் பகுதிக்கும் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்லத் தயாரான மக்கள் அனுமதி கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளதாக காஸா நகருக்குத் திரும்பத் துடிக்கும் ஆண் ஒருவர் கூறினார்.

“எங்களது சொந்த வீடுகளுக்குத் திரும்புவதற்காகத்தானே உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்டது?” என்று அவர் ஆத்திரத்துடன் கேட்டார்.

“சொந்த ஊருக்குத் திரும்பக் காத்திருக்கும் பலருக்கும் தங்களது வீடு இன்னும் அப்படியே உள்ளதா என்று தெரியாது.

“எப்படி இருந்தாலும் பரவாயில்லை, குடிசை போட்டாவது பிழைத்துக்கொள்கிறோம் என்று பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்துக்கொண்டு உள்ளனர்,” என்று தாமர் அல்-புராய் என்னும் அந்த ஆடவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

The post எல்லை திறக்க இஸ்ரேல் மறுப்பு : பல்லாயிரம் பாலஸ்தீனர்கள் தவிப்பு appeared first on Oruvan.com.