பாலஸ்தீனம் Archives - Oruvan.com

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸின் அட்டூ ழியத்துக்கான வெகுமதி : ஐ.நாவில் ட்ரம்ப் சீற்றம்
” பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.

தொடர்ந்து மோதலைத் தூண்டுவது போல, இந்த அமைப்பில் சிலர் ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முற்படுகிறார்கள்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும். இது அக்டோபர் 7 உட்பட இந்த பயங்கரமான அட்டூழியங்களுக்கான வெகுமதியாக இருக்கும்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியை விரும்புபவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய குரல் கொடுக்க வேண்டும் ” எனவும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அண்மையில் அறிவித்த நிலையில் டிரம்ப் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

The post பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸின் அட்டூ ழியத்துக்கான வெகுமதி : ஐ.நாவில் ட்ரம்ப் சீற்றம் appeared first on Oruvan.com.

இஸ்ரேலுக்கு பின்னடைவு – பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன
பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன.

பிரான்சைத் தவிர, பெல்ஜியம், லக்சம்பர்க், மோல்டா, மொனாக்கோ, அன்டோரா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன.

முன்னதாக, அவுஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருந்தன.

நேரம் வந்துவிட்டதால் நாங்கள் இங்கு கூடியுள்ளோம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எங்கள் குறிக்கோள் என்று மக்ரோன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச சமூகத்தில் 80 சதவீதம் பேர் இப்போது பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர்.

இது காசாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது கடுமையான இராஜதந்திர அழுத்தத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பல நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அறிவித்ததால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அச்சுறுத்தலை முன்வைத்துள்ளார்.

ஜோர்டான் நதிக்கு மேற்கே இனி ஒரு பாலஸ்தீன நாடு இருக்காது என்றும், பாலஸ்தீன அரசை உருவாக்க அழைப்பு விடுப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு சமம் என்றும் நெதன்யாகு தெளிவுபடுத்தினார்.

ஹமாஸை அழிப்பதன் மூலம் போர் இலக்கு அடையப்படும் என்றும் அவர் கூறினார். ஈரானிய அச்சு அழிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் நட்பு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்ததால் நெதன்யாகு ஆத்திரமடைந்துள்ளார்.

இப்போது ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பாதையை எடுக்கத் தொடங்கியுள்ளன.

காசாவில் இஸ்ரேலின் கொடூரமும் படுகொலையும் ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான பொதுமக்களின் உணர்வை எழுப்பியுள்ளது.

The post இஸ்ரேலுக்கு பின்னடைவு – பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன appeared first on Oruvan.com.

காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.

காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் வரை பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2 வருடங்களாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாண்யானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இதனால் 14,000 குழந்தைகள் அடுத்த சில நாட்களில் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா தெரிவித்தது.

மேலும் காசாவை முழுமையாக கைப்பற்ற போவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்தார்.

இதனை கண்டித்து கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் வெளியில் இருந்து எந்த அழுத்தத்தையும் ஏற்க போவதில்லை என நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

The post காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம் appeared first on Oruvan.com.