பாகிஸ்தான் Archives - Oruvan.com

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானால் பாகிஸ்தான் செல்வேன் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், தான் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது நேர்மறையான திசையில் நகர்வதாகக் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் சிறப்பானது எனப் பாராட்டிய ட்ரம்ப், ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் இஸ்லாமாபாத் செல்லத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.

இறுதியாக 2006ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் (George W. Bush) பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் உறுதியானால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் திகழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானால் பாகிஸ்தான் செல்வேன் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு appeared first on Oruvan.com.

மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இதில் இதுவரை 10 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

அதன் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

‘பி’ பிரிவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைய உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-ஓமன் அணிகள் மோதுகின்றன.

இதனையடுத்து சூப்பர்4 சுற்று 20-ம் திகதி தொடங்குகிறது. சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இருந்து தகுதி பெற்ற 2 அணிகள் மோதுகின்றன. அதனையடுத்து 21-ம் திகதி நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ள 2 அணிகள் மோதுகின்றன.

அதன்படி 21-ம் திகதி நடைபெற உள்ள சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சூப்பர்4 சுற்றில் வெற்றி அடையப் போவது யார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

The post மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான் appeared first on Oruvan.com.

இந்தியா, பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது: அமெரிக்கா கருத்து
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றுவது பிராந்தியத்திற்கும், உலகிற்கும் ஒரு நல்ல செய்தி. இது நன்மை பயக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்கும்.

இரு நாடுகளுடனும் எங்கள் உறவு முன்பு போலவே உள்ளது, அது நல்லது என்று நான் கூறுவேன். அனைவரையும் அறிந்த, அனைவரிடமும் பேசும் ஒரு அதிபர் இருப்பதனால் ஏற்பட்ட நன்மை இதுதான். இதன் மூலமாக நாம் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முடியும். எனவே நமது ராஜதந்திரிகள் இரு நாடுகளிடமும் நல்ல உறவை பராமரிக்க உறுதிபூண்டுள்ளனர்” என்றார்

மேலும், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் நடந்த மோதல், மிகவும் பயங்கரமான ஒன்றாக வளர்ந்திருக்கும். துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடி அக்கறை காட்டி தாக்குதல்களை நிறுத்தினர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேரழிவைத் தடுப்பதில் அமெரிக்காவின் உயர்மட்டத் தலைவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்” என்றார்

அமெரிக்காவின் மத்தியஸ்தம் இல்லாமல் இரு தரப்பு ராணுவங்களுக்கு இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், அமெரிக்கா மீண்டும் தங்களே போர் நிறுத்தத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது.

The post இந்தியா, பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது: அமெரிக்கா கருத்து appeared first on Oruvan.com.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது – ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா குற்றச்சாட்டு
வெறித்தனத்திலும் பயங்கரவாதத்திலும் மூழ்கியுள்ள ஒரு நாடு பாகிஸ்தான் என்றும் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு என்றும் ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியது.

15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு அவையின் தற்போதைய தலைவராக பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐநா பாதுகாப்பு அவையில் நடைபெற்ற, ‘சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற திறந்தவெளி கருத்தரங்கில், கூட்டத்துக்கு தலைமை வகித்து பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் பேசினார்.

அப்போது அவர், ஜம்மு காஷ்மீர் குறித்தும், சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது குறித்தும் பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஐநாவுக்கான இந்திய நிரந்தர தூதர் பர்வதநேனி ஹரிஷ், “நாம் தற்போது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுகிறோம். இதற்கு அனைவரும் ஏற்கத்தக்க, அங்கீகரிக்கத்தக்க அடிப்படை விதிகள் தேவை. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை மிகவும் முக்கியம்.

இந்தியா என்றால், முன்னேற்றம், செழிப்பு, வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு என்ற செய்தியை உலகம் பெற்றிருக்கிறது. ஒரு முதிர்ந்த ஜனநாயகமாகவும், வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வழங்கும் ஒரு நாடாகவும் இந்தியா தன்னை முன்னிறுத்துகிறது. மறுபுறம் இதற்கு நேர்மாறான தோற்றத்தை பாகிஸ்தான் கொண்டிருக்கிறது. வெறித்தனம், பயங்கரவாதம் ஆகியவற்றில் மூழ்கியுள்ள ஒரு நாடு பாகிஸ்தான். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு அது. சமீபத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம், இதுவரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் பெற்றுள்ள கடன் 2.1 பில்லியன் டாலர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பாவின் முன்னணி அமைப்பு. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாகவும், சர்வதேச உறவுகளை மதிக்காத நாடாகவும் பாகிஸ்தான் உள்ளது. அதற்கான கடுமையான விலை அதற்கு விதிக்கப்பட வேண்டும்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேரை கொலை செய்த அமைப்பு தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட். இந்த தாக்குதலை கண்டித்து ஏப்ரல் 25 அன்று, ஐநா பாதுகாப்பு அவை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான், பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது.

ஐநா பாதுகாப்பு அவை அறிக்கையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை பொறுப்பேற்க வைத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியது அவசியம் என அறிக்கை கூறியது.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் அளவிடப்பட்ட ஒரு நடவடிக்கை. மோதலை தீவிரப்படுத்தாத இயற்கையான தன்மையை கொண்ட நடவடிக்கை அது. அந்த நடவடிக்கை தனது இலக்கை அடைந்ததும், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் ராணுவ நடவடிக்கையை இந்தியா நிறுத்தியது” என தெரிவித்தார்.

The post பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது – ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு மோடி அனுமதி
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.

அண்மையில் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக இந்தியப் பிரதமர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

அதன்படி, எப்போது, ​​எங்கு தாக்குதல்களை நடத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை இந்தியப் பிரதமர் வழங்கியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உள் அறிக்கைகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று புது டில்லியில் நடைபெற்ற சிறப்பு தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் இந்த அனுமதியை வழங்கினார்.

இதில் இந்திய இராணுவத் தளபதிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயத்தை பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அதாவுல்லாவின் எக்ஸ் தள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் எந்தவொரு இராணுவ நடடிக்கைக்கு உறுதியுடனும் தீர்க்கமாகவும் பதிலளிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

The post பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு மோடி அனுமதி appeared first on Oruvan.com.

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் மிரட்டல்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டால், அது முழு அளவிலான போரை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிஃப் அப்பாசி எச்சரித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்கள் இரத்து செய்யப்பட்டு, உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் தனது வான்வெளி மற்றும் வாகா எல்லையை இந்திய விமான நிறுவனங்களுக்கு மூடி, இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அமைச்சரின் ஆத்திரமூட்டும் கருத்துக்கள் வெளிவந்தன.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படவில்லை, அவை நாட்டின் பல பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்றும், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நமது நீர் தடைபட்டால், இந்தியா முழு வீச்சில் போருக்குத் தயாராகும்.” நம்மிடம் ஏராளமான போர்முனைகளும் ஏவுகணைகளும் உள்ளன, அவை வெறும் காட்சிக்காக அல்ல. நாட்டில் நாம் அணு ஆயுதங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது.

கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பாகிஸ்தானின் ஆயுதக் கிடங்குகள் இந்தியாவை மட்டுமே குறிவைக்கின்றன,’ என்று பாகிஸ்தான் அமைச்சர் எச்சரித்தார்.

இதற்கிடையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இராஜதந்திர உறவுகள் மோசமடைந்து வருவதால், முக்கியமான சூழ்நிலைகளைச் சமாளிக்க இராணுவம் தயாராக உள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி காஷ்மீருக்குச் சென்று நிலைமையை மதிப்பாய்வு செய்துள்ளார்.

இந்திய விமானப்படை போர் விமானங்களைப் பயன்படுத்தி ஒரு வான்வழிப் பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது. ‘அக்ரம்’ என்று பெயரிடப்பட்ட வருடாந்திர விமானப் பயிற்சியில் ரஃபேல் மற்றும் சுகோய்-30 போர் விமானங்கள் பங்கேற்றன.

சிக்கலான சூழ்நிலைகளில் தரைவழித் தாக்குதல் மற்றும் மின்னணுப் போரில் இராணுவத்தின் திறன்களை இந்த வான் பயிற்சி சோதித்துப் பார்த்தது மற்றும் நிரூபித்தது.

மீடியோர், ரேம்பேஜ் மற்றும் ரோக்ஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல்களும் வான் பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்தன. கூடுதலாக, இந்திய கடற்படை அரேபிய கடலில் ஒரு முக்கியமான ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியது.

கடற்படையின் புதிய வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத்திலிருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

தரையில் இருந்து வான்வழி நோக்கி ஏவக்கூடிய நடுத்தர தூர தரையிலிருந்து வான்வழி ஏவுகணை (MRSAM) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை 70 கிலோமீட்டர் தொலைவில் எதிரி விமானங்கள் அல்லது ஏவுகணைகளை அழிக்கும் திறன் கொண்டது.

The post இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் மிரட்டல் appeared first on Oruvan.com.

சீன – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு – இருநாட்டு உறவை பலப்படுத்த ஆலோசனை
(செய்தி – கோ.திவ்யா)

சீனாவின் ஹார்பின் நகரில் நடந்து வரும் 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி சீனா சென்றுள்ளார்.

சீனா விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக நேற்று முன்தினம் (04) சீனா சென்றார்.

ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வருமாறு தனது நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு சீனா விடுத்த அழைப்பின் பிரகாரம் பாகிஸ்தான் ஜனாதிபதி இந்த அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நேற்று புதனக்கிழமை தலைநகர் பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை சந்தித்தும் அவர் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் தீவிரமாக ஆலோசித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post சீன – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு – இருநாட்டு உறவை பலப்படுத்த ஆலோசனை appeared first on Oruvan.com.

தலிபான்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – 15 பேர் பலி
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் நேற்று இரவு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் உள்ள தலிபான் மறைவிடங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், ஒரு முகாமை தகர்த்து சில கிளர்ச்சியாளர்களைக் கொன்றதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் ஆழமாகச் சென்றனவா அல்லது அவை எவ்வாறு சரியாக ஏவப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நேற்றிரவு (24) லமன் உட்பட ஏழு கிராமங்கள் இந்தத் தாக்குதல்களுக்கு இலக்காகியதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்களால் இந்தத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதல்களால் பர்மாலில் உள்ள முர்க் பஜார் கிராமம் பெரும் அழிவை சந்தித்துள்ளதாகவும் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

வான்வழித் தாக்குதல்கள் கடுமையான சேதத்தையும் பொதுமக்களுக்கு பரவலான அழிவையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பர்மால், பக்திகா மீதான வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதாக தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் சபதம் செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினுமு், இந்த வான்வழித் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இருப்பினும், ஆப்கானிஸ்தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளதுடன், அவற்றை “கோழைத்தனமான செயல்” என்று முத்திரை குத்தியுள்ளது.

தாலிபான்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்த அண்டை நாட்டின் மண்ணைப் பயன்படுத்துவதாக இஸ்லாமாபாத் அடிக்கடி கூறுகிறது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கிறது.

மார்ச் 2024க்குப் பிறகு இதுபோன்ற இரண்டாவது தாக்குதல்கள் இவை. முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்குள் எல்லைப் பகுதிகளில் உளவுத்துறை அடிப்படையிலான தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தானின் சிறப்புப் பிரதிநிதி முகமது சாதிக் காபூலுக்குச் சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post தலிபான்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – 15 பேர் பலி appeared first on Oruvan.com.