பழனி திகாம்பரம் Archives - Oruvan.com

10 பேர்ச்சஸ் காணிரை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும்
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதியே அதிகம் கதைத்திருந்தார். எனவே, பண்டாரவளையில் அசல் காணி உரித்து வழங்கப்படும் என நம்பி இருந்தேன். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. கடசாதி ஆவணமே கையளிக்கப்பட்டுள்ளது.

2015 இல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பமானது. ஒரிஜினல் டீட் வழங்கப்பட்டது. இது பொய்யென ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். ஆனால் அவர்களின் ஆட்சியின்போது அவர் அதனையே வழங்கினார்.

நல்லாட்சி காலத்தில் எல்லோருக்கும் காணி உரிமை வழங்க முடியாமல்போனது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தற்போதைய ஜனாதிபதி ஆட்சியின்கீழ் எமது மக்களுக்கு காணி உரிமை வழங்க முடியும். 10 பேர்ச்சஸை வழங்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன். பணடாரளையில் கட்டப்படும் வீடுகளுக்கும் விரைவில் அசல் உரித்து வழங்கப்படும்.

நல்லாட்சி காலத்திலேயே மலையக பகுதிகளில் அதிகளவான வீடுகள் கட்டப்பட்டன. அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றால் நல்லது. ஆனால் கம்பனிகள் இன்னும் பதிலை வழங்கவில்லை. எனினும், வருட இறுதிக்குள் சம்பள உயர்வு கிடைக்குமென ஜனாதபதி கூறுகின்றார். இதனை நான் நம்பவில்லை.

தோட்டங்களை மக்களுக்கு பிரித்து கொடுத்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். இந்திய வீட்டுத் திட்டத்தை விரைவில் நிறைவு செய்யுமாறு கோருகின்றேன். எமது மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணிவை வழங்கினால், அவர்களால் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள முடியும். அதுவே சிறந்த திட்டம்.

நாம் களவெடுக்கவில்லை. மக்களுக்கும் இது தெரியும். எனவே, அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். சில அமைச்சர்கள் பொய்யுரைப்பதுதான் பிரச்சினை.” – என்றார் திகாம்பரம்.

The post 10 பேர்ச்சஸ் காணிரை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும் appeared first on Oruvan.com.

மலையக மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? பத்து பேர்ச் காணியை வழங்குங்கள் – திகாம்பரம்
மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மையாலுமே அக்கறை இருந்தால் 10 பேர்ச் காணியை உடன் வழங்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

‘அனைத்து உள்ளுராட்சிசபைகளையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் எதிரணியில் இருந்தபோது தாம் செய்வதாகக் கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி செய்யவில்லை. வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

மலையகத் தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள்மீது இந்த அரசாங்கத்தக்கு உண்மையாகவே கரிசணை இருக்குமானால் உடனடியாக 10 பேர்ச் காணியை வழங்க வேண்டும். அதனை வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என 6 மாதங்களாக கூறிவருகின்றனர். ஆனால் எதுவும் நடப்பதாக தெரியவில்லை. ஆனாலும் மலையக மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.” – என்றார்.

(க.கிஷாந்தன்)

The post மலையக மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? பத்து பேர்ச் காணியை வழங்குங்கள் – திகாம்பரம் appeared first on Oruvan.com.