பலாலி Archives - Oruvan.com

காங்கேசன்துறை துறைமுகம் திறக்கும் பொருளாதாரக் கதவுகள்; பலாலி விமான நிலையம் எழுப்பும் கேள்விகள்?
யாழ்ப்பாணத்தின் வடக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 65 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மானிய உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டம், வடக்கு மாகாணத்தின் பொருளாதார எதிர்காலத்தில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எனினும், ஒப்பந்தம் இன்னமும் அமைச்சரவை அனுமதிக்காகக் காத்திருப்பதும் பல ஆண்டுகளாகத் தாமதமடைந்த அபிவிருத்திப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படாமையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் இன்று நேற்று உருவானதல்ல. 2018ஆம் ஆண்டு இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 2020ஆம் ஆண்டு திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை. பின்னர் கடனுதவியை மானியமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது முழுமையான மானிய அடிப்படையில் திட்டத்தை முன்னெடுப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு முக்கியமான கேள்வி ஒன்றுள்ளது. பல ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டு, ஆலோசனைகள் நடத்தப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றும் ஏன் நிர்மாணப் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை? தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, ஆரம்பகட்ட வடிவமைப்புகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட பணிகளுக்காக ஆலோசகர்களுக்கு 196.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2024ஆம் ஆண்டு இறுதிவரை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இத்தகைய தாமதங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிர்வாகக் கட்டமைப்புகள் குறித்தும் தெளிவு அவசியமாகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்தின் முக்கியத்துவம் வெறுமனே ஒரு உட்கட்டமைப்புத் திட்டத்துடன் மட்டுப்படுத்தப்படுவதில்லை. தற்போது இந்தியாவிலிருந்து வடக்கு மாகாணத்திற்குக் கொண்டுவரப்படும் பெரும்பாலான பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து, சுமார் 400 கிலோமீற்றர் தூரம் ஏ9 வீதியூடாக மீண்டும் வடக்கிற்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை சுமார் 56 கடல் மைல் தொலைவிலேயே அமைந்துள்ளது. எனவே, நேரடி சரக்குப் போக்குவரத்து வசதி உருவாக்கப்படுமானால், போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும் வடக்கு மக்களுக்கான பொருட்களின் விலைகளில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதன் பயன் வர்த்தகர்களுடன் முடிவடையக் கூடாது. வடக்கின் மீன்பிடி, விவசாயம், பால் உற்பத்தி மற்றும் பனைசார் கைத்தொழில்கள் இந்தியச் சந்தைகளுடன் நேரடியாக இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். மாதமொன்றுக்கு 2,000 முதல் 5,000 டொன் வரையான சரக்குகளைக் கையாளக்கூடிய சாத்தியம் இருப்பதாக முன்னைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு துறைமுக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், வர்த்தக நடவடிக்கைகளுக்கான உரிய வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். யாழ்ப்பாண வர்த்தகர்கள் 350 முதல் 500 மெற்றிக் டொன் வரையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியைக் கோரியிருப்பதும் இந்தத் தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

ஆனால், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக நிலவும் நம்பிக்கைக்கு இணையாகப் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் நிலைமை கேள்விகளை எழுப்புகிறது. துறைமுகத் திட்டத்திற்கு இந்தியாவின் 65 மில்லியன் டொலர் மானியம் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், பலாலி விமான நிலைய விரிவாக்கம் காணி சுவீகரிப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட வரையறை தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. 2027 ஜூலைக்குள் பயணிகள் முனைய விரிவாக்கத்தை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் பணிகளின் முன்னேற்றம் மந்தமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, விமான நிலைய விரிவாக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளில் சில பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலும் ஏனையவை தனியார் உரிமையாளர்களிடமும் உள்ளன. மயிலிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. சுமார் 3,000 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில், மக்களின் காணி உரிமைகள் தொடர்பான தெளிவான விளக்கமும் வெளிப்படையான அணுகுமுறையும் அவசியமாகின்றது.

அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் புறக்கணித்துச் செயற்படுத்தப்படும் கட்டுமானப் பணிகளாக இருக்க முடியாது. அதேநேரம், அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் பல ஆண்டுகள் மக்களை எதிர்பார்ப்பில் வைத்திருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பலாலி விமான நிலையத்தை விரிவாக்குவதற்கான திட்டங்கள் தொடர்பில் காணி உரிமையாளர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அவர்களது சம்மதம், உரிய இழப்பீடு மற்றும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் வெளிப்படையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

காங்கேசன்துறை துறைமுகம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமைச்சரவை அனுமதிகளைப் பெற்று ஒப்பந்தத்தை விரைவில் இறுதிப்படுத்துவது அவசியம். அதேபோன்று, பலாலி விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பிலும் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டையும் நடைமுறைச் சாத்தியமான கால அட்டவணையையும் முன்வைக்க வேண்டும்.

வடக்கு மக்களுக்கு அவசியமானது வெறுமனே புதிய துறைமுகங்களோ விமான நிலையங்களோ அல்ல. அவர்களது உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு, பொருட்களுக்கு நியாயமான விலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வர்த்தகத்திற்கு இலகுவான போக்குவரத்து மற்றும் மக்களின் காணி உரிமைகளுக்கான உத்தரவாதம் ஆகியவையே உண்மையான அபிவிருத்தியின் அளவுகோல்கள்.

காங்கேசன்துறை துறைமுகம் வடக்கின் பொருளாதாரத்திற்குப் புதிய வாசலைத் திறக்கக்கூடும். ஆனால் அந்த வாசல் உண்மையில் மக்களுக்கான வாய்ப்புகளாக மாறுவது அரசாங்கத்தின் திட்டமிடல், வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. வாக்குறுதிகளைக் கடந்து, திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது!

The post காங்கேசன்துறை துறைமுகம் திறக்கும் பொருளாதாரக் கதவுகள்; பலாலி விமான நிலையம் எழுப்பும் கேள்விகள்? appeared first on Oruvan.com.

பலாலியில் முக்கிய சந்திப்பு: யாழ். கட்டளைத் தளபதியைச் சந்தித்தார் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.சில்வா மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை பலாலியில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை பொதுமக்களின் பாவனைக்காக விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், வடமாகாண மாணவர்களிடையே தேசிய மாணவர் படையணியின் செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் ஆளுநர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு கட்டளைத் தளபதி பாராட்டுத் தெரிவித்தார்.

மாணவர்களிடையே சிறுவயதிலிருந்தே ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்க இந்த முன்னெடுப்பு உதவும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இச்சந்திப்பில் இரு தரப்பு உயரதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post பலாலியில் முக்கிய சந்திப்பு: யாழ். கட்டளைத் தளபதியைச் சந்தித்தார் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் appeared first on Oruvan.com.