நோர்வே நாடாளுமன்றம் Archives - Oruvan.com

இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது.

நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைவாக இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கவுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இந்த விவாதத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்கள், நல்லாட்சிக்கான நகர்வுகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான உறுதிப்பாடுகள் குறித்த முன்னேற்றங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.

அத்துடன், இன மற்றும் மத அடிப்படையில் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் உரிமைகள், நாட்டின் தற்போதைய மனித உரிமை நிலைமை, இராணுவமயமாக்கல் தொடர்பான கவலைகள் மற்றும் பொறுப்புக்கூறல் சமரசம் ஆகிய விடயங்கள் குறித்தும் பேசப்படவுள்ளது.

இந்த விவாதம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம், “ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச உரையாடலை உருவாக்குவதே இந்த விவாதத்தின் நோக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய அரசியல் சூழலில் சர்வதேச சமூகத்தின் பார்வை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இந்த நாடாளுமன்ற விவாதம் பார்க்கப்படுகிறது.

The post இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் appeared first on Oruvan.com.

இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றில் நாளை விவாதம்
இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது.

இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே நாடாளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாக விவாதிக்கப்படவுள்ளது.

நோர்வே தொழிற் கட்சியை சேர்ந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சி குணரத்னம் இவ்விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளித்து உரையாற்றவுள்ளார்.

தேர்தலை அடுத்து இலங்கையின் செயற்பாடுகள் முக்கியமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து இங்கு கேள்வி எழுப்பப்படுமென கருதப்படுகிறது.

நல்லாட்சி, ஜனநாயக மறுசீரமைப்பு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம், இன மத சிறுபான்மை மக்களை பாதிக்கும் விடயங்கள், இராணுவ மயமாக்கல், பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து இவ்விடையீட்டு விவாதத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

சர்வதேச சமூகத்துக்கு எடுத்தியம்பும் பொருட்டும் ஜனநாயகப் பெருமானங்கள், மனித உரிமைகள், நீண்ட கால ஸ்திரத் தன்மை உட்பட பல விடயங்கள் இவ்விவாதத்தில் இடம்பெறுமென அம்சி குணரத்னம் தெரிவித்தார்.

நோர்வே பாராளுமன்றத்தில் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவமான விடயங்கள் இடையீட்டு விவாதமாக மேற்கொள்ளப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றில் நாளை விவாதம் appeared first on Oruvan.com.