நெடுந்தீவு Archives - Oruvan.com

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு
நெடுந்தீவில் 2015 ஆம் ஆண்டு 105 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்திறனை எட்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையம் துவக்கத்தில் திட்டமிடப்பட்ட நாளாந்த கொள்ளளவை எட்டாத நிலையில், தற்போது சுமார் 60 கன மீட்டர் அளவிலேயே குடிநீர் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளையடுத்து அவசரகாலப் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடிப்படைச் செயல்பாடுகள் மீளமைக்கப்பட்டுள்ளன.

தற்போது நிலையத்தின் செயல்திறனை நிலைப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் முழுத் திறனில் இயங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், நெடுந்தீவின் நீண்டகால குடிநீர் தேவைக்கு நிரந்தரத் தீர்வாக, 300 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட புதிய கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் விரிவாக்கத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படுகிறது.

திட்டத்தின் முன்னேற்றம் குறித்து வடக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்ததாவது, விரிவான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், சாத்தியக்கூறு ஆய்வுகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பு மதிப்பீடுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த புதிய நிலையம் நெடுந்தீவின் முழுமையான குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய நிலையத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முன்னெடுப்பு, தற்காலிகப் பழுதுபார்ப்புகளைத் தாண்டி, நெடுந்தீவில் நிலையான மற்றும் நீண்டகால நீர் மேலாண்மை அமைப்பை உருவாக்கும் முக்கியமான படியாக அமையும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

The post நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு appeared first on Oruvan.com.

தீவுப்பகுதிகளில் இடர் கொடுப்பனவு நிறுத்தம்
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட பின்தங்கிய தீவுப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளை வகைப்படுத்தியதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ இது குறித்துத் தெரிவிக்கையில், மாகாண சபைகளினால் முன்வைக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த வகைப்படுத்தலில் சிக்கல்கள் இருப்பதை அமைச்சு கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகைப்படுத்தல் செயல்பாட்டில் எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்டறிந்து அதனைச் சரி செய்ய ஒரு விசேட குழு நியமிக்கப்படவுள்ளது.

அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களுக்கு மீண்டும் கொடுப்பனவுகளை வழங்கத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என செயலாளர் உறுதியளித்துள்ளார்.

The post தீவுப்பகுதிகளில் இடர் கொடுப்பனவு நிறுத்தம் appeared first on Oruvan.com.

நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன்
நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கியதுடன் வேறு சில விடயங்கள் நீண்ட கால அடிப்படையில் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்தார்.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், மத்திய அரசின் திணைக்களத் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

நெடுந்தீவு துறைமுகம், கடல்போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டினர்.

வடதாரகை படகின் மின்விசிறிகள் இயங்காமையால் மிகவும் இன்னல்படுவதாக மக்கள் தெரிவித்த நிலையில் அதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், வடதாரகைப் படகின் மின்பிறப்பாக்கியில் திருத்தவேலை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் அதற்கான உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இயன்றவரையில் விரைவாக சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகப் பதிலளித்தார். நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் காணாமல்போயுள்ள நிலையில், தற்காலிகமாக எழுதாரகைப் படகின் நங்கூரத்தை நெடுந்தாரகைப் படகுக்கு பயன்படுத்துவதற்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆளுநர் இணக்கம் தெரிவித்தார்.

நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைப்பதற்கான திட்டங்கள் கடற்படையினரிடம் இருப்பதாகவும் அது தொடர்பில் தன்னுடன் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆளுநர், வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்தே அதனை புனரமைப்புச் செய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நெடுந்தீவில் சுற்றுலாத்துறையை நீண்டகால நோக்கில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகார சபை ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதன்போது நெடுந்தீவின் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.

நெடுந்தீவு கடற்றொழில் சமாசத்துக்குச் சொந்தமான அலையரசி படகு திருத்த வேலை காரணமாக பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இந்தப் படகு திருத்தத்துக்கான நிதி ஐ.ஓ.எம். நிறுவனம் வழங்கவிருந்த நிலையில் நிர்வாகச் சிக்கல் காரணமாக அந்த நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டதாக பிரதேச செயலர் குறிப்பிட்டார் நிர்வாகச் சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கை வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக விரைவில் முன்னெடுக்கப்படும் என்று இதன்போது பிரதம செயலாளர் குறிப்பிட்டார்.

நெடுந்தீவு கடற்கரையோரத்தைச் சூழ தடுப்பணை அமைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும், பெருமளவு நிதி ஒதுக்கீடு இதற்குத் தேவை என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. படகுச் சேவையின் நேரத்தை கருத்தில் கொண்டு நெடுந்தீவிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சின் செயலர் இங்கு குறிப்பிட்டார்.

நெடுந்தீவில் வீதி விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்த பிரச்சினைக்கு ஆளுநர் உடனடியாகத் தீர்வை வழங்கினார். மேலும், நெடுந்தீவில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தை திருத்தியமைத்து தருமாறு மக்கள் கோரினர்.

இதேவேளை, நெடுந்தீவில் 150 வகையான மருத்துவ மூலிகைகள் காணப்படுவதாக கண்டறிந்துள்ளதாக வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார். அதை மக்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களுக்கு அதன் ஊடாக வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

The post நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன் appeared first on Oruvan.com.