நிறைவு Archives - Oruvan.com

மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் – விஜய்
மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் என தெரிவித்து மக்களிடம் வாக்கு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், வாக்கு கோரி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

“ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?

நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் காணும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று மக்களே அறிவர். மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்? திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்? ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது.

இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.

நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும்,அளக்கமுடியாத ஆழ்கடல் – விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று.நேர்மையின் நெருப்புக்கோளம் – மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் – ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று.

இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்? பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்? மக்களே… மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.

எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.

இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது.

அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி. பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.” என்று கூறி தவெகவுக்கு வாக்கு கோரியுள்ளார்.

The post மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் – விஜய் appeared first on Oruvan.com.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் – இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று காலை வேளையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன்படி, தேவாலயங்களில் மணி ஒலி எழுப்புதல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், மெழுகுவர்த்தி அல்லது தேங்காய் எண்ணெய் விளக்கேற்றுதல் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகள் இன்று காலை இடம்பெறவுள்ளன.

இதேவேளை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக அந்த தேவாலயத்தைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இன்று காலை 7.00 மணி முதல் ஆராதனைகள் நிறைவடையும் வரை தேவாலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

மேலும், கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் விசேட ஆராதனை நடைபெறவுள்ளது.

இதனிடையே, ஆயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘பிரார்த்தனை நடைபவனி’ இன்று மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்தில் ஆரம்பமாகி, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் உயர்தர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்தனர், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ISIS உடன் தொடர்புடைய உள்ளூர் பயங்கரவாதக் குழுவினால் நடத்தப்பட்ட இத்தாக்குதல், கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

The post உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் – இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு appeared first on Oruvan.com.