நிசாம் காரியப்பர் Archives - Oruvan.com

மொசாடிற்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவாக செயற்படுகின்றது அரசாங்கம் – ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இஸ்ரேலின் மொசாட் மற்றும் அமெரிக்கா என்பனவற்றிற்கு ஆதரவாக செயற்படுவதாக ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

ஈரான் மக்களும் ஈரான் தலைவர்களும் இன்று உலகம் முழுவதும் முஸ்லிம் தாயை தலை நிமிர செய்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த தலைவர்களுக்கும் அந்த மக்களுக்கும் தலை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது உயிரையும் தியாகம் செய்வதற்கு தயாராக அவர்கள் மனித சங்கலியாக வந்திருந்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது சுயமரியாதைக்காகவும் தங்களது நாட்டுக்காகவும் ஈரான் மக்கள் வெளிப்படுத்திய தியாகத்தை காணும் போது வெட்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களாக இருந்தும் இந்த அநீதிக்கு எதிராக எந்தவித குரலும் கொடுக்கவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விடயம். இந்த குற்ற உணர்வு தங்களை வாட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் ஈரானிய மக்களுக்காக நோன்பு நோற்கவில்லை எனவும் உலமாக்கள் எதனையும் செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவை மகிழ்வித்து தங்களது சுயமரியாதையை இழக்கும் முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவினால் ஒருநாள் கைவிடப்படும் என எச்சரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் வாய்மொழி மூலம் ஈரானுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தாலும் ரகசியமாக மொசாட்டுக்கும் அமெரிக்காவிற்கும் உதவி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தில் 10 – 13 முஸ்லிம்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும் அமெரிக்காவையும் மொசாட்டையும் கண்டிக்க முடியாது இருப்பதாக நிசாம் காரியப்பர் குற்றம் சுமத்தியுள்ளார்.

The post மொசாடிற்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவாக செயற்படுகின்றது அரசாங்கம்  – ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி – நிசாம் காரியப்பர் கூறுவதென்ன?
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்நிலை நியமனக் குழுவில் தான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது இவ்விடயத்தை ரவீ செனவிரத்ன தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூழ்ச்சியாளரை நாம் அடையாளம் கண்டுள்ளோம்” என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை உறுதிப்படுத்தும் போது ரவி செனவிரத்ன தெரிவித்ததாக நிசாம் காரியப்பர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் பல சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியமை தொடர்பில் தற்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வவுணதீவு தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் ரவீ செனவிரத்ன இதன்போது தெளிவுபடுத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி – நிசாம் காரியப்பர் கூறுவதென்ன? appeared first on Oruvan.com.

தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் சாணக்கியன்
1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வழிமொழிந்தார்.

இந்த தனிநபர் சட்டமூலம் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி வர்த்தமானியினூடாக வெளியிடப்பட்டது.

தாமதமான மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை இந்தச் சட்டமூலம் நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் சாணக்கியன் appeared first on Oruvan.com.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் வெற்றிகளை பெறலாம் – நிசாம் காரியப்பர்
முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருப்பதானது தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகவே கருதுகிறோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு காணி சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பாரதூர தன்மைகள் மற்றும் அதனால் ஏற்படவுள்ள பாதக விளைவுகள் தொடர்பாக தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒற்றுமையுடன் குரல் கொடுத்ததன் விளைவாகவே குறித்த சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருக்கிறது. இது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு கிடைத்திருக்கின்ற பாரிய வெற்றியாகும்.

மேலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்கள் எதிர்காலத்திலும் தங்களுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு ஒன்றாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது என்றும் நிசாம் காரியப்பர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

The post வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் வெற்றிகளை பெறலாம் – நிசாம் காரியப்பர் appeared first on Oruvan.com.

நிசாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருந்த நிசாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (18) காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் கூடிய ஐந்து உறுப்பினர்களை கொண்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகின.

இதன்படி மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post நிசாம் காரியப்பர்  நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் appeared first on Oruvan.com.