நாம் தமிழர் Archives - Oruvan.com

வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி
வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வீரப்பன் மகள் வித்யா ராணி முதலில் பாமகவில் இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைர் பொறுப்பு வழங்கப்பட்டது.

பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் 4 ஆம் இடம் பெற்றார்.

தொடர்ந்து கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்த வித்யா ராணிக்கு, தற்போது நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 207 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வித்யா வீரப்பன், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் என்பவரையும் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி appeared first on Oruvan.com.

தமிழகத்தின் முக்கிய தொகுதியில் இன்று இடை தேர்தல் ; திமுக, நாம் தமிழர் போட்டி
தமிழகத்தின் முக்கிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் இன்று புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுவதுடன், வாக்குப்பதிவு  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப் பதிவு தொடங்கியதும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாா் குடும்பத்தினருடன் சென்று வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி.சீதாலெட்சிமியும் காலையிலேயே தமது வாக்கை பதிவுசெய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவால் இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெற்று வருகிறது.

திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி என இருமுனைப் போட்டி நிலவும் இந்த தொகுதியில் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 13 அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், 31 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 46 போ் களத்தில் உள்ளனா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா். அவர்களுக்கு வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஒன்பது வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் அடங்கிய நகரம் சாா்ந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் நெசவாளா்கள், தொழிலாளா்கள், வியாபாரிகள், அரசு ஊழியா்கள் பரவலாக உள்ளனா். செங்குந்த முதலியாா், கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனா். முஸ்லிம், கிறிஸ்தவா், பட்டியல் வகுப்பினா் மற்றும் வட மாநிலங்களைச் சோ்ந்த கணிசமான வாக்காளா்கள் இந்த தொகுதியில் உள்ளனா்.

திமுக ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இடைத்தோ்தல் என்பதும், பிரதான எதிா்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும்கட்சியான பாஜக ஆகிய பிரதான கட்சிகள் தோ்தலில் போட்டியிடாத நிலையிலும், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தை பெறவேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், கடந்த தோ்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பெற்ற 1,10,156 வாக்குகளைவிட கூடுதலாக பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2023 இடைத்தோ்தலில் அமைச்சா்கள் அனைவரும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றினா். ஆனால் இந்தத் தோ்தலில் அமைச்சா் சு.முத்துசாமியை தவிர வேறு அமைச்சா்கள் பிரசாரத்திற்கு வரவில்லை.

கடந்த 2023 இடைத்தோ்தலில் பேசப்பட்ட வாக்குக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம், வாக்காளா்களை அடைத்து வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில், தோ்தல் பரபரப்பு இல்லாமல் ஈரோடு நகரம் எப்போதும்போல இயல்பாக உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு கிழக்கு தொகுதி 3 முறை தோ்தலை சந்தித்துள்ளது. 2023 இல் நடந்த தோ்தலில் 77 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில், இந்தத் தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்தத் தோ்தல் ஆளும்கட்சிக்கு பெருமை சோ்க்கும் தோ்தலா அல்லது நாம் தமிழா் கட்சியின் வளா்ச்சியை பறைசாற்றும் தோ்தலா என்பது வரும் 8 ஆம் திகதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.

The post தமிழகத்தின் முக்கிய தொகுதியில் இன்று இடை தேர்தல் ; திமுக, நாம் தமிழர் போட்டி appeared first on Oruvan.com.