நாமல் ராஜபக்ஷ Archives - Oruvan.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – உண்மையான குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், பாரபட்சமான நடவடிக்கை மற்றும் தவறான பழி சுமத்தல் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்களுக்கு நிதியளித்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் பாதுகாக்கப்படுவதாகவும், இச் சந்தர்ப்பத்தில் ஏனையவர்கள் இலக்கு வைக்கப்படுவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்ட போதும், ஒரு தனிப்பட்ட கொலை வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், விசாரணைகளை நடத்துபவர்களின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதல்களுடன் ராஜபக்ஷ குடும்பத்தைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை நாமல் ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

இந்த நிலையில், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு அதிகாரிகளிடம், நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

The post உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – உண்மையான குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் appeared first on Oruvan.com.

எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ
எரிசக்தி அமைச்சர் மீது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கோரும் வரை காத்திருக்காமல் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை அரசாங்க அமைச்சர்களே தற்போது ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், இந்தத் தவறுகளால் ஏற்படும் நஷ்டத்தை பொதுமக்களே சுமக்க வேண்டியுள்ளது. இது மிகவும் அநீதியானது.

தாம் ஆட்சிக்கு வரும்போது ஊழல்வாதிகள் எவரும் தம்மிடம் இல்லை எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி, தற்போது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்களைப் பாதுகாக்கிறது.

தற்போதைய அரசாங்கம் அனுபவம் மற்றும் முதிர்ச்சி இல்லாத காரணத்தினால் பல தீர்மானங்களை எடுக்கத் தவறியுள்ளதாகவும், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களை (துறைமுகம், விமான நிலையம், எரிசக்தித் திட்டங்கள்) எதிர்த்தமையே இன்று அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்குக் காரணம்.

நாட்டின் புலனாய்வுத்துறை பலவீனமடைந்துள்ளதாகவும், மதத் தலைவர்கள் மற்றும் கலாசார விழுமியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ராஜபக்ஷக்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் (லம்போகினி, உகண்டா பணம் போன்றவை) வெறும் பொய்கள் என்பது தற்போது நிரூபணமாகி வருவதாகவும், கொள்கலன் கடத்தல் போன்ற விவகாரங்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

The post எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ appeared first on Oruvan.com.

89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை: ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்கிறோம் – நாமல் தெரிவிப்பு
தமிழக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால வீசாக்களை வழங்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் வசிக்கும் சுமார் 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து, கௌரவம் மற்றும் பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முயற்சியை வரவேற்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக அகதி முகாம்களில் வாழும் மக்களுக்கு இது ஒரு நம்பிக்கையை அளிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இந்த நடவடிக்கை வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட அரசியல் நகர்வாகவோ அல்லது தேர்தல் கால அரசியலாக்கப்படும் ஒரு முயற்சியாகவோ இருக்கக்கூடாது என அவர் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களிலும் தேர்தல் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதிகளில் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழக முகாம்களில் இருந்த இலங்கையர்கள் சுயமாகத் தமது தாயகத்திற்குத் திரும்புவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது தாயகம் திரும்ப விரும்புவோருக்குச் சில தடைகள் ஏற்படுத்தப்படுவதாக வரும் தகவல்கள் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அவர்களை மீண்டும் உள்வாங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்த 89,000 இலங்கையர்களும் எமது மக்கள். அவர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் கௌரவத்திற்கு நாமே பொறுப்பு” எனத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, இவர்கள் இந்திய முகாம்களில் தொடர்ந்து கஷ்டப்படத் தேவையில்லை என்றும், உரிமையுள்ள பிரஜைகளாக இலங்கையில் வாழ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த உணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையை இலங்கை, இந்தியா மற்றும் தமிழக அரசாங்கங்கள் அரசியலாக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நிரந்தரத் தீர்வை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

The post 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை: ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்கிறோம் – நாமல் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

நிவாரணம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பு இல்லை
அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தாலும், தற்போது வரை எந்தவொரு நிவாரணங்களோ, இழப்பீடுகளையோ வழங்க முன்வரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செயல்முறைகள் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் உள்ள அதிகாரிகள், பிரதேச செயலகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராம சேவகர்களுக்கு எழுத்துப்பூர்வமாக முறையாகத் தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இழப்பீடு வழங்குவது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். ஆனாலும் மாவட்ட அபிவிருத்தி குழுக்களில் அது தொடர்பில் முரணான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளd.

மேலும், “இறப்பு சான்றிதழ்களை வழங்க விழாக்களை நடத்தியது வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சரியான நேரத்தில் நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

The post நிவாரணம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பு இல்லை appeared first on Oruvan.com.

அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துகொள்வோம்
‘பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றால் போல் சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துகொள்வோம்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (31) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,’ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு சகல எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றால் போல் சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துகொள்வோம்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை பழிவாங்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகிறது. குறிப்பாக ராஜபக்ஷக்களை எந்த வகையில் நெருக்கடிக்குள்ளாக்கலாம் என்பதற்கு அரசாங்கம் அதிக காலத்தை செலவிடுகிறது.

எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் நிரூபிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அப்போது தான் எமக்கு அடுத்த தேர்தல்களில் எவ்வித குற்றச்சாட்டுக்களுமில்லாமல் முன்னிலையாகலாம்’ என்றார்.

The post அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துகொள்வோம் appeared first on Oruvan.com.

88-89 கொலை வெறி மீண்டும் தொடங்கியுள்ளது – இளைஞர்களுக்கு அறிந்துக்கொள்ள சந்தர்ப்பம்
1988 மற்றும் 1989 பயங்கரவாத சகாப்தத்தைக் காணாத இளைஞர்கள் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய புரிதலைப் பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது கொலை அலை அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் முன்னிலையில் தந்தையர்களைக் கொல்லும் கலாச்சாரம் மீண்டும் தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எமது கட்சியின் வேட்பாளர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு வேட்பாளர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அவர்களுக்கு சொந்த தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இது போன்று மக்களைக் கொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது? இந்தக் குற்றங்களுக்கு வேறு யாரையாவது பழிவாங்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

அன்று நாங்கள் புனித தந்த தாது நினைவுச்சின்னத்தை வணங்கச் சென்றபோது சிரித்தவர்கள் இன்று அந்த நினைவுச்சின்னத்தை வணங்குகிறார்கள் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஜே.வி.பி அரசாங்கத்தில் மிகச் சிறந்த இளைஞர்கள் குழு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ஜே.வி.பி. அந்த இளம் அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி பொய்களையும் அவதூறுகளை பரப்புகிறது.

மஹிந்த ராஜபக்ஷ போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். இன்றும், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மேலும் குறைக்கப்படும் என்று ஒரு கடிதம் வந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படுவதாக அவர்கள் கூறியிருந்தாலும், நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பே குறைக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் எப்போதும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. ஈஸ்டர் தாக்குதலுக்கும் அரசாங்கம் நீதியை வழங்கவில்லை.

ஈஸ்டர் தாக்குதல்கள் நடந்தபோது அதிகாரத்தில் இருந்த அதிகாரிகள் இப்போது இந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் உள்ளனர். அவர்கள் மக்களைக் கைது செய்து குற்றவாளிகளாக்கப் போகிறார்கள். இன்று, அரசாங்கம் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயரைப் பாதுகாக்க பொலிஸாரையும் சிஐடியையும் பயன்படுத்துகிறது. கடந்த காலத்தில், ஒரு சிறை ஆணையர் கொலை செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னால் துப்பாக்கிச் சூடு நடந்தது. சம்பந்தப்பட்ட பெண் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.” என்றார்.

The post 88-89 கொலை வெறி மீண்டும் தொடங்கியுள்ளது – இளைஞர்களுக்கு அறிந்துக்கொள்ள சந்தர்ப்பம் appeared first on Oruvan.com.

வரலாற்றிலேயே அதிக பொய்களை கூறிய தலைவர் அநுரகுமார
தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் அமைச்சர் ஒரு கருத்தை தெரிவிக்க, விமானப்படை வேறு கருத்தை கூறுகிறது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது தெளிவாக புலப்படுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி வரலாற்றில் அதிக பொய்களை கூறிய தலைவராக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமது தலைவர்கள் அன்று ஆட்சி அதிகாரத்தை பெற்றது நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய சேவைகளை செய்த பின்னரே. ஆனால் இந்த அரசாங்கம் மக்களிடையே பொய்களை பரப்பியே ஆட்சியை பிடித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தின் போது அதற்கு எதிராக ஜே.வி.பி விமர்சனம் செய்தது. அப்போது விமர்சித்தவர்கள் இன்று மாத்தறை கூட்டங்களுக்கு வருவது அவர்கள் எதிர்த்த அதே அதிவேக நெடுஞ்சாலை வழியாகத்தான். அரசாங்கத்தின் புனைவு தன்மையை தெளிவாக காட்டும் ஒரு சம்பவமே இது.

முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு தலைமைத்துவம் வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. யுத்தத்தின் போது ஏதேனும் நடந்திருந்தால், அதற்கு தலைமை தாங்கியவரிடம் கேட்க வேண்டும். ஆனால் இன்று தலைவர் சொன்னதை செய்த இராணுவ வீரர்களை தாக்கும் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

நாங்கள் புலம்பவில்லை. எங்களுக்கு பணி செய்யும் அனுபவம் உள்ளது. சவால்களை எதிர்கொள்ள முடியும். அதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். விரைவில் மக்களின் அரசாங்கத்தை உருவாக்குவோம். அதுவரை மக்களுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகள் மூலம் பலமான அணியை உருவாக்குவதே எங்கள் முயற்சியாகும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

The post வரலாற்றிலேயே அதிக பொய்களை கூறிய தலைவர் அநுரகுமார appeared first on Oruvan.com.

2029 இல் அரியணையேறுவோம்
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அதிகளவான சபைகளை எம்மால் கைப்பற்ற முடியும். 2018 உள்ளாட்சிசபைத் தேர்தலில் வென்றதுபோல இம்முறையும் சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்.” எனவும் நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். எமது ஆட்சியில் கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனவே, கிராமிய மக்கள் கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் எமக்கு வழங்குவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த அரசாங்கம் ஆறுமாத கால பதவியை நிறைவு செய்துள்ளது. எனினும், எவ்விதமான புதிய திட்டங்களும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை என நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.

The post 2029 இல் அரியணையேறுவோம் appeared first on Oruvan.com.