நாடாளுமன்றம் Archives - Oruvan.com

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: ரூ. 500 பில்லியனுக்குரிய குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு
2025.12.18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள பாராளுமன்றம் 2025.12.19ஆம் திகதியும் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

டிசம்பர் 18ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு அன்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.

இதனைத் தொடர்ந்து மோசமான காலநிலையின் தாக்கத்தால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் பி.ப 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன், அன்றையதினம் ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்படவுள்ளது.

The post நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: ரூ. 500 பில்லியனுக்குரிய குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு appeared first on Oruvan.com.

பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும்
நாடாளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய, பெப்ரவரி 05ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக (4 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணி வரை அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழங்குவிதிகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. பி.ப 3.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரம் அரசாங்கத்தினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 06ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 வரை புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான இரு வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்திவைப்பு வேளையின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் 2025 பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் சபாநாயகருக்குக் கிடைக்கப் பெறின், குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை 2025.02.06ஆம் திகதிக்கு நியமிக்கப்பட்ட அலுவல்களுடன் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

The post பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் appeared first on Oruvan.com.

நிசாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருந்த நிசாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (18) காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் கூடிய ஐந்து உறுப்பினர்களை கொண்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகின.

இதன்படி மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க உள்ளிட்டவர்கள் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post நிசாம் காரியப்பர்  நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் appeared first on Oruvan.com.

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளையும் அடுத்த வாரத்தில் இருந்து விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்த அவர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் பிரகாரம் பாதுகாப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதிகளின் சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் பொதுமக்களின் பணம் செலவிடப்படுவதாகவும், அந்த தொகை 1448 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்தார்.

“இன்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 228 இராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நான்கு இராணுவ அதிகாரிகளும் 60 பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாவலர்களாக உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 188 ஆயுதப் படை வீரர்களும், 22 பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 57 பொலிஸாரும் 60 இராணுவத்தினரும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஹேமா பிரேமதாசவிற்கு10 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, ​​அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த பதினொன்றரை மாதங்களில் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக 1448 மில்லியன் ரூபாவை செலவிட்டது தொடர்பான தகவலை வெளிப்படுத்தினார்.

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு மூன்று முகவர் நிலையங்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளன. ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன இவ்வாறு பாதுகாப்பு வழங்கியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக கடந்த பதினொன்றரை மாதங்களில் மாத்திரம் ஆயுதப் படைகளினால் 328 மில்லியன் ரூபாவும், பொலிஸ் திணைக்களம் 327 மில்லியன் ரூபாவையும் செலவிட வேண்டியுள்ளது.

ஜனாதிபதி செயலகம் சார்பில் 55 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன்படி 11 மாதங்களுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு 710 மில்லியன் ரூபா பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 207 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆயுதப் படை சார்பில் ஆறு மில்லியன் ரூபாவும், பொலிஸ் திணைக்களம் சார்பில் 185 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி செயலகத்தினால் 16 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக ஆயுதப்படையினர் 258 மில்லியன் ரூபாவும், பொலிஸ் திணைக்களம் 39 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி செயலகம் 10 மில்லியன் ரூபாவும் என மொத்தம் 307 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முப்படையினர் சார்பில்19 மில்லியன் ரூபாவும், பொலிஸ் திணைக்களம் 60 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மூன்று மில்லியன் ரூபா என இந்த மூன்று மாதங்களுக்கு 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த பதினொன்றரை மாதங்களுக்குள் மக்களின் பணமான 1448 மில்லியன் ரூபாவை அரசாங்கம் இந்த ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக செலவிட்டுள்ளது. இது மிகவும் கடினமான சூழ்நிலை” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

The post முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை appeared first on Oruvan.com.