நளிந்த ஜயதிஸ்ஸ Archives - Oruvan.com

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் – இலங்கை விளக்கம்
இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகாமையில் இருந்த ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இரண்டு நாடுகளுக்கு இடையே போர்ச் சூழல் நிலவும் போது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் அது குறித்து மூன்றாம் நாடு ஒன்றிற்கு அறிவிப்பதில்லை. அவ்வாறு அறிவிப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

கடற்படைக்கு எவ்வாறு குறிப்பிட்ட தகவல் கிடைத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பகுதியில் சடலங்கள் மற்றும் சில உயிர்காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மையத்திற்கு செய்தி கிடைத்தது.

அங்கு 32 பேர் உயிருடன் இருந்தனர், மேலும் சிலர் காணாமல் போயிருந்தனர். சில சடலங்களை நாம் மீட்டிருந்தோம். செய்தி துல்லியமாக எங்கிருந்து வந்தது என்பதை என்னால் சரியாகக் கூற முடியாது” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளார்.

The post ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் – இலங்கை விளக்கம் appeared first on Oruvan.com.

யாழ். பாதுகாப்பு படை தலைமையகம் குறித்து போலியான தகவல் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது யாழ். பாதுகாப்பு படை தலைமையகம் அகற்றப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு,

“ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தை அகற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சால் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

அது தொடர்பில் அடிப்படையற்ற போலியான தகவல்களே சமூகவலைத்தளங்களில் பரப்பட்டுவருகின்றன.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இவ்வாறு போலியான தகவல்களை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது.” -என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

The post யாழ். பாதுகாப்பு படை தலைமையகம் குறித்து போலியான தகவல் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on Oruvan.com.

கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படாது: அரசு திட்டவட்டம்
“ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படமாட்டாது. வங்குரோத்து அரசியலின் வெளிப்படாகவே கல்வியைக்கூட எதிரணி அரசியல் ஆயதமாக்கியுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“ கல்வி மறுசீரமைப்பின் முக்கியத்துவம் பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டுவருகின்றன. எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி உறுதியளிக்கப்பட்டது.

துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையிலேயே மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டோம்.

முதற்கட்டமாக தரம் ஒன்று மற்றும் 6 இல் கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள இருந்தோம். எனினும், தரம் ஆறு ஆங்கில பாடதிட்டத்தில் இடம்பெற்ற ஒரு குளறுபடியை அடிப்படையாகக் கொண்டு எதிரணிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றன.

எதிரணி கூறுவதுபோல் கல்வியை நாம் ஆபாசமாக்கவில்லை.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பேரிடரிலும் அரசியல் நடத்த முற்பட்ட எதிரணி தற்போது கல்வியிலும் நடத்துகின்றது. இது வங்குரோத்து அரசியலின் வெளிப்படாகும். கல்வியையும் அரசியல் ஆயுதமாக்குவதற்கு முற்பட்டனர்.

கல்வி மறுசீரமைப்பை மக்கள் வரவேற்றுள்ளனர். அதனை வலியுறுத்தி போராட ஆரம்பித்துள்ளனர். குறைபாடு இருந்தால் நிவர்த்தி செய்வோம். கல்வி மறுசீரமைப்பை கைவிடபடாது.

சமூகத்தில் தோற்றுவிக்கப்பட்ட குழப்பத்தால் மக்கள் மத்தியில் ஐயம் ஏற்பட்டது. அதனால்தான் தரம் ஆறு திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.” – என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.

The post கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படாது: அரசு திட்டவட்டம் appeared first on Oruvan.com.

ஒரு பில்லியன் இழப்பீடு கோரும் நளிந்த
யூடியூப் செயற்பாட்டாளர் ஒருவருக்கு எதிராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒரு பில்லியன் ரூபாவை நட்ட ஈடாக கோரி சட்டத்தரணி ஊடாக சம்மன் அனுப்பியுள்ளார்.

மருந்து வகையொன்றை நாட்டிற்கு கொண்டு வந்த விடயம் தொடர்பில் தனது பெயரை தொடர்புபடுத்தி யூடியுப் அலைவரிசையொன்றின் ஊடாக போலி தகவல்களை பரப்பி பொதுமக்களை அச்சத்துக்கு உட்படுத்தும் வகையில் அந்த யூடியூப் செயற்பாட்டாளர் செயற்பட்டதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்ச்சைக்குரிய மருந்து உள்ளிட்ட 10 வகையான மருந்துகள் தொட்ரபில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் குறித்த செயற்பாட்டாளர் அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலி தகவல்களை வெளியிட்டுள்ளதாக சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நட்ட ஈடு கோரிக்கைக்கு எதிராக செயற்பாட்டால் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வழக்கு தாக்கல் செய்யப்படுமெனவும் சம்மன் ஊடாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒரு பில்லியன் இழப்பீடு கோரும் நளிந்த appeared first on Oruvan.com.

ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டு: அரசு முற்றாக நிராகரிப்பு
“ ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அரசாங்கம் செயல்படவில்லை.” என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (26) தெரிவித்தார்.

“ சில ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் திட்டமிட்ட அடிப்படையில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புகின்றன. இவற்றுக்கு எதிராக சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.” எனவும் அமைச்சர் கூறினார்.

போலியான செய்திகளால் நாட்டின் சுகாதாரம்மீதான நம்பிக்கை சீர்குலையக்கூடும்.

அதேபோல தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இப்படியான செயலுக்கு எதிராக சாதாரண சட்டத்தை செயல்படுத்துவது அடக்குமுறை அல்ல எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.

The post ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டு: அரசு முற்றாக நிராகரிப்பு appeared first on Oruvan.com.

இலங்கை நிச்சயம் மீண்டெழும்
“ இலங்கையால் நிச்சயம் மீண்டெழ முடியும். அதற்கான தலைமைத்துவத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கும்.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கம்மீது நம்பிக்கை இருப்பதாலேயே சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறான உதவிகள்மூலம் இருந்த நிலையைவிடவும் சிறந்த நிலைக்கு வரமுடியும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, ஊடக அடக்குமுறை தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

The post இலங்கை நிச்சயம் மீண்டெழும் appeared first on Oruvan.com.

2026 பட்ஜட்: மக்களுக்கு நிவாரணம்: வரி அதிகரிப்பு இல்லை
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது. இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2026 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த வரவு- செலவுத் திட்டம் எவ்வாறு அமையும் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது நேற்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“ வரி அதிகரிப்பு இடம்பெறாது என்பதை ஜனாதிபதி அறிவித்துவிட்டார். இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். அது எவ்வாறு இடம்பெறும் என்பது பற்றி ஜனாதிபதி தமது உரையில் தெளிவுபடுத்துவார். உற்பத்தி பொருளாதாரம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.

The post 2026 பட்ஜட்: மக்களுக்கு நிவாரணம்: வரி அதிகரிப்பு இல்லை appeared first on Oruvan.com.

ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யோம்
ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யப்போவதில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும் அரசியல் இருப்புக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வாறான செயற்பாடுகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை. அதுபோல், அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எவரையும் அனுமதிக்கவும் மாட்டோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார். ஜெனிவா தீர்மானத்துடன் நாங்கள் உடன்படவில்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் மாற்றங்களைச் செய்யமாட்டோம்.

கடந்த காலங்களில் இலங்கையின் நீதித்துறையுடைய சுயாதீனம் தொடர்பில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் சந்தேகங்கள் இருந்தன. ஆனால், தற்போது நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில், நீதித்துறையில் சுயாதீனம் எவ்வளவு தூரம் மேம்பட்டுள்ளது என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளோம். ஆதலால், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்குச் சர்வதேசம் தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு.” – என்றும் அவர் கூறியுள்ளார்.

The post ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யோம் appeared first on Oruvan.com.

151 வது உலக அஞ்சல் தின நிகழ்வு பதுளையில் நடைபெற்றது
தற்போதைய அரசாங்கம் அஞ்சல் சேவையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி வருவதாகவும், 152வது அஞ்சல் தினத்தை அதன் இலக்குகளை அடைந்த அஞ்சல் தினமாகக் கொண்டாட வேண்டும் என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் மகிழ்ச்சி, நம்பிக்கைகள் மற்றும் அன்பை வழங்கும் அஞ்சல் சேவையைக் கொண்டாடும் உலக அஞ்சல் தினம் (09)  இன்றாகும்.

அஞ்சல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட   இந்த தேசிய நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் பதுளை அஞ்சல் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டு 151வது உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது, மேலும் இது  எமது நாட்டில் 56வது தேசிய அஞ்சல் தின நிகழ்வாக அமைகிறது.

அஞ்சல் சேவை நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சேவை என்றும், தற்போதைய அரசாங்கம் அஞ்சல் சேவையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி வருவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார். அஞ்சல் சேவை, மற்ற துறைகளைப் போலல்லாமல், சேவைகளை வழங்குவதன் மூலம் வருமானத்தையும் ஈட்டுகிறது என்றும், இது தனித்துவமானது என்றும் மனிதவள மேம்பாடு, கட்டிட மேம்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பம் மூலம் சேவைகளை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  அமைச்சர் தெரிவித்தார்.

அஞ்சல் சேவை குறித்து மக்களிடையே நேர்மறையான சிந்தனையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார கூறினார். உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த சேவைகள் நடைபெறுவதாகவும், அஞ்சல் சேவையை நாட்டிற்கு சுமையாக இல்லாத சேவையாக மாற்ற வேண்டும் என்றும், அனைத்து ஊழியர்களும் அஞ்சல் சேவையின் நோக்கங்களை அடைவதற்கு உறுதிபூண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

151வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு அஞ்சல் துறையின் முத்திரை பணியகத்தால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரையானது வெளியீடு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் வெளியிடப்பட்டது. அமைச்சர் அஞ்சல் தின நினைவு முத்திரைகளை வழங்கினார் மற்றும் திறமையாக செயற்பட்ட துணை அஞ்சல் அலுவலகங்கள், திறமையாக செயற்பட்ட அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகங்கள், மற்றும் மாவட்ட நிர்வாக மேற்பார்வையாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கணக்கு அலுவலகங்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசுச் சான்றிதழ்களை வழங்கினார்.

ஊவா மாகாண துணை அஞ்சல் அலுவலகம் சிறப்பாக செயற்பட்ட துணை அஞ்சல் அலுவலகமாக தெரிவுசெய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அஞ்சல் சேவை வருவாயின் வளர்ச்சிக்கு பங்களித்த அஞ்சல் அலுவலகங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது, அஞ்சல் துறையுடன் இணைந்து பணியாற்றும் தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு அவர்களின் சேவை செயல்திறனுக்காக விருதுகள் வழங்கப்பட்டன, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பொது சேவை போட்டிகளில் வெற்றி பெற்ற அஞ்சல் துறை வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது, துணை அஞ்சல் அலுவலகங்களுக்கு டேப் (Tab) இயந்திரங்கள் வழங்கப்பட்டன, உலக அஞ்சல் தினத்தன்று பள்ளி குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் தொடர்பான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, மேலும் அஞ்சல் சேவையின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பல அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அலுவலகங்களும் பாராட்டப்பட்டன.

இலங்கையில் அஞ்சல் சேவை 227 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தால் எடுக்கப்பட்ட தரவுகளின் படி, உலகில் 193 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ஆம் தேதி இந்த நாளைக் கொண்டாடுகின்றன.

1874 ஆம் ஆண்டு, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் அக்டோபர் 9 ஆம் தேதி யுனிவர்சல் போஸ்டல் யூனியன் என்ற அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன, அதன்படி, அந்த நாள் 1969 இல் உலக அஞ்சல் தினம் என்று பெயரிடப்பட்டது.

இந்த தேசிய நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர், வழக்கறிஞர் கபில ஜெயசேகர, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார, பதுளை மாநகர சபை மேயர் நந்தன ஹபுகொட, துணை மேயர் சுஜீவ பீரிஸ், பதுளை பிரதேச சபைத் தலைவர் பாலித அதுலசிறி ஜெயவர்தன, பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத், பதுளை மாகாண ஆளுநரின் செயலாளர் ஆர்.எச். சி. பிரியந்தி, தபால் மா அதிபர் ருவன் சத்குமார, பிரதி தபால் மா அதிபர் (செயல்பாடுகள்) பிரேமச்சந்திர ஹேரத், பிரதி தபால் மா அதிபர்கள், அனைத்து தபால் தொழில் தரங்களை பிரதிநிதிப்டுத்தும் அஞ்சல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post 151 வது உலக அஞ்சல் தின நிகழ்வு பதுளையில் நடைபெற்றது appeared first on Oruvan.com.

ஊழல், மோசடி விசாரணைகளை குழப்புவதே எதிரணியின் நோக்கம்
“இலங்கையில் ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைக் குழப்புவதே அவர்களின் நோக்கமாகும்.”

– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவரால் பதிலளிக்கப்பட்டுள்ளது. செயற்பாட்டு ரீதியில் அவர் அவரது நடவடிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

எனவே, இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு இது குறித்த சட்டம் தொடர்பில் அனுபவம் இருப்பதாக நம்புகின்றோம்.

அதற்கமைய நாடாளுமன்றத்தில் அரசமைப்பு சபையின் ஊடாக இடம்பெற்ற தேர்வு மோசடியானது என்றால், அந்த நியமனத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்.

அதுவே சரியான அணுகலாகும். அதனை விடுத்து ஆங்காங்கு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை.

ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் மீது அவதூறு பரப்புவதன் ஊடாக, கம்மன்பில போன்றோரின் தேவை என்ன என்பது தெளிவாகின்றது. இலஞ்ச, ஊழல் குறித்த விசாரணைகளைக் குழப்புவதே இவர்களின் நோக்கமாகும்.” – என்றார்.

The post ஊழல், மோசடி விசாரணைகளை குழப்புவதே எதிரணியின் நோக்கம் appeared first on Oruvan.com.