நல்லூர் Archives - Oruvan.com

நல்லூர் சந்நிதியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மாம்பழ திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக மாம்பழ திருவிழா நடைபெற்றது.

நாரதர் சிவபெருமானுக்கும் , உமாதேவியாருக்கும் ஒரு மாம்பழத்தை கொடுத்தார்.

அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க, முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும், பிள்ளையாருக்கும், முருகனுக்கும் கூறினார்கள்.

உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றி வர சென்ற போது , பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றி வந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை உடை அனைத்தையும் துறந்து பழனி மலையில் போய் அமர்ந்தார். எனும் புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.

இன்றைய மாம்பழ திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய தினம் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா நாளை புதன்கிழமை மாலையும், தேர்த்திருவிழா நாளை மறுதினம் வியாழக்கிழமை  காலை 7 மணிக்கும் மறுநாள் காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நல்லூர் சந்நிதியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மாம்பழ திருவிழா appeared first on Oruvan.com.

நல்லூரில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவான நேற்றைய தினம் சனிக்கிழமை ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில் , பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும், தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடாத்த முற்பட்ட நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர்

இதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை மீட்ட , நோயாளர் காவு வண்டியில் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தன

ஆலய சூழலில் மாத்திரமே பொலிஸாரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ள நிலையில், நல்லூர் பின் வீதியில் உள்ள திருவிழா கால கடை தெருக்களில், வன்முறை கும்பல்கள், மாவா உள்ளிட்ட போதைப்பொருட்களை பாவிக்கும் போதைப்பொருள் பாவனையாளர்கள் கடைத்தெருவுக்கு வரும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதும் அதிகரித்துள்ளதாகவும் அது தொடர்பிலும் பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post நல்லூரில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் appeared first on Oruvan.com.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (21.08.2025) காலை இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு appeared first on Oruvan.com.

நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் – பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை
நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது.

அதேவேளை , குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று முன்தினம் புதன்கிழமை மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் – பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை appeared first on Oruvan.com.