நலிந்த ஜயதிஸ்ஸ Archives - Oruvan.com

மருந்து தரப் பரிசோதனை குறித்து விசேட கலந்துரையாடல்
மருந்துகளின் தரப் பரிசோதனை நடவடிக்கைகளை உரிய தரத்துடன் முன்னெடுத்துச் செல்லும் செயல்முறையை விரிவுபடுத்துவது தொடர்பில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மருந்துகளின் தரத்தைப் பேணும் செயல்முறையை விரிவுபடுத்தும் போது, மருந்து தரப் பரிசோதனை நடவடிக்கைகளை முறையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்வது குறித்து இந்தக் கலந்துரையாடலில் முதன்மையாகக் கவனம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வுகூடங்களில் மருந்து தரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுதல், அச்செயல்முறைகளில் மேம்படுத்தப்பட வேண்டிய அளவுகளை அதிகரித்தல் மற்றும் வழங்கப்படும் மருந்து தரப் பரிசோதனை அறிக்கைகள் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு எழும் பிரச்சினைகள் மற்றும் கண்காணிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரப் பரிசோதனை ஆய்வுகூடத்தின் ஊடாக மருந்து தரப் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சில மட்டுப்பாடுகள் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இந்நடவடிக்கைகளை மேலும் முறையான மற்றும் விரிவான வேலைத்திட்டமாக மேம்படுத்துவதற்கு ஒரு வேலைத்திட்டம் அவசியம் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அங்கு சுட்டிக்காட்டினார்.

அதற்குச் சிறிது காலம் எடுக்கும் என்பதால், அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஊடாக அந்த நடவடிக்கைகளை ஒரு வகையில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், மருந்து விநியோகச் செயல்முறைக்குத் தடையேற்படாத வகையில், பிரச்சினைக்குரிய மருந்துகளுக்கு இவ்வேலைத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

The post மருந்து தரப் பரிசோதனை குறித்து விசேட கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

அரச சேவையில் நிலவும் 7, 456 வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்
அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி, அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் முறையைத் மீளாய்வு செய்து, அவசியமான முன்னுரிமைகள் மற்றும் காலப்பகுதியை அடையாளம் கண்டு, அதனுடன் இணைந்ததாக அத்தியாவசிய தேவைக்கு இணங்க, மேற்கொள்ளப்பட வேண்டிய ஆட்சேர்ப்புக்களை அடையாளங் கண்டு, அதன்படி, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவிற்கு அந்தந்த அமைச்சுக்களின் கீழ் காணப்படும் வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்காக அந்தந்த அமைச்சுக்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்திற்கு கொண்டு வந்து பின்வரும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன் போது தெளிவுபடுத்தினார்.

பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3000, பாதுகாப்பு அமைச்சில் 09, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் 179, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் 132, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 161, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 3,519, மேல் மாகாண சபையில் 34, கிழக்கு மாகாண சபையில் 05, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 வெற்றிடங்கள் என மொத்தமாக 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

The post அரச சேவையில் நிலவும் 7, 456 வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் appeared first on Oruvan.com.

நாட்டின் மருந்து உற்பத்தி திறன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் துரிதமாக அதிகரிக்கும் – சுகாதார அமைச்சர்
பல்வேறு காரணிகளால் இந்நாட்டில் மக்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் (SPMC) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மருந்து வழங்குனர் பற்றாக்குறை, மற்றும் உலகளாவிய பிரச்சினை விநியோக வலையமைப்பின் சீர்குலைவு போன்ற காரணங்களால் அரசாங்க மருத்துவமனை அமைப்பினால் தொடர்ந்து மருந்து விநியோகம் செய்ய முடியவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மருந்து உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான மூலப்பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்த அமைச்சர், அதை சரிசெய்து உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான திட்டங்களை தயாரிப்பது குறித்து அதிகாரிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

மேலும், ஒவ்வொரு நகரத்தையும் உள்ளடக்கும் வகையில் அரச மருந்தகச் சங்கிலியின் கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் நன்கொடையான இந்த நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையை அடைவதற்காக, நிறுவனத்தின் பணிகளை மிகவும் முறையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைமுறைப்படுத்துவதற்காக, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் அமைச்சர் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

போதைப்பொருள் உற்பத்தி, மூலப்பொருட்கள், மருந்து ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் விநியோக நிகழ்ச்சித்திட்டம், ஆய்வக வசதிகள், மற்றும் சந்தைப்படுத்தல், அத்துடன் நிறுவனத்தின் மனித வள மேம்பாடு ஆகியவற்றில் அமைச்சர் தனது கவனத்தை செலுத்தினார்.

இலங்கை அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபன வளாகத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

The post நாட்டின் மருந்து உற்பத்தி திறன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் துரிதமாக அதிகரிக்கும் – சுகாதார அமைச்சர் appeared first on Oruvan.com.

கச்சத்தீவை மீட்க திமுக தீர்மானம் நிறைவேற்றம் – இலங்கை அரசாங்கம் வழங்கிய பதில்
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் பிரேரணை ஒன்றை முன்வைத்தால் அது தொடர்பில் விவாதிக்க தயார் என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மீனவப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமாயின் கச்சத்தீவு இந்தியாவினால் கையகப்படுத்தப்பட வேண்டும் என அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சி இந்த தீர்மானத்தை செயற்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,

இந்திய அரசியல் கட்சியொன்று இந்தப் பிரேரணையை நிறைவேற்றியுள்ள போதிலும், இந்திய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் இலங்கைக்கு எந்தவொரு யோசனையையும் சமர்ப்பிக்கவில்லை.

எனினும், இந்திய மத்திய அரசு அப்படி ஒரு பிரேரணையை முன்வைத்தால், அது குறித்து விவாதிக்கத் தயார்” என தெரிவித்துள்ளார்.

The post கச்சத்தீவை மீட்க திமுக தீர்மானம் நிறைவேற்றம் – இலங்கை அரசாங்கம் வழங்கிய பதில் appeared first on Oruvan.com.