நந்தலால் வீரசிங்க Archives - Oruvan.com

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது போல, கிராமங்களில் உள்ள மக்களுக்கு பொருத்தமான உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவி்த்தார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மத்திய வங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் நேற்று (1) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மையப்படுத்தி மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

“டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் குறிப்பாக நமது நாட்டில் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகளுக்கு பெரும்பாலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த காலங்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. Online Banking, QR Code ஆகியவற்றை பயன்படுத்தி செலுத்தி வந்த நிலையில், தற்போது அரசாங்கத்தின் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை GovPay ஊடாகவும் செலுத்த முடிகிறது. இதே முறையில் வரி செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதன் பயன்பாடு மிகக் குறைவு. குறிப்பாக மேல் மாகாணத்திற்கு வெளியே செல்லும்போது, பெரும்பாலானவர்கள் இன்னும் நாணயத்தாள்களை கொண்டே பரிவர்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதைத்தான் அவர்கள் எளிது என நினைக்கின்றனர். ஆனால் நீங்கள் உண்மையிலேயே யோசித்துப் பார்த்தால், ஒரு வர்த்தகர் மற்றும் நுகர்வோருக்கு, இந்தப் பணத்தைப் பயன்படுத்துவது உண்மையில் கூடுதல் நேரத்தை கடத்துகிறது. குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வங்கி அமைப்பு மற்றும் நிதி நிறுவனங்கள் சிறப்புப் பங்காற்றுகின்றன. இது போன்ற இடங்களுக்கு வந்து அதை ஊக்குவிப்பதைத் தவிர, இது கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.

அப்போதுதான் இதில் நம்பிக்கை ஏற்படும். இதன் மூலமாக வரி பிரச்சினையில் சிக்கிக்கொள்வோம் என்ற தேவையற்ற பயம் உள்ளது. அப்படி எதுவும் இல்லை. வரி பிரச்சினையில் சிக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்படுமானால் பணத்தை எவ்வாறு கையாண்டாலும் அதில் சிக்கிக் கொள்வீர்கள்”

The post டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து மத்திய வங்கி ஆளுநர் விளக்கம் appeared first on Oruvan.com.

பதவி விலகும் திட்டமெதுவும் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்
மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், தான் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஓய்வு பெறுவதோடு மத்திய வங்கியின் ஆளுநரும் பதவி விலகுவார் என்ற செய்திக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

நிதி மற்றும் திறைசேரி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார், மேலும் அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் மாற்று நிர்வாக இயக்குநர் பதவியை ஏற்க உள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியில் இலங்கை உள்ளிட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்த மகிந்த சிறிவர்தன திட்டமிடப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மாற்று நிர்வாக இயக்குநராக, அந்த வங்கியின் இயக்குநர்கள் குழுவில் சில நாடுகளின் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட உள்ளார்.

The post பதவி விலகும் திட்டமெதுவும் இல்லை – மத்திய வங்கி ஆளுநர் appeared first on Oruvan.com.

“சிறந்த பட்ஜெட்“ – நாட்டிற்கு நன்மை பயக்கும்
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டம் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சிலர் இதை ஐ.எம்.எப.(IMF) வரவு – செலவுத் திட்டம் என்று அழைக்கிறார்கள்,. ஆனால் இது அப்படியானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று (18) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு – செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இலக்குகளைப் பார்க்கும்போது, ​​இந்த முறை நாம் அவற்றை அடையும் அதிக நம்பிக்கையுடன் இருக்க முடியும். எதிர்பார்க்கப்படும் வருவாய் இலக்கு ரூ.5 டிரில்லியனாகும்.

அரசாங்கப் பத்திரங்கள் மீதான குறுகிய கால அழுத்தங்களை கருத்திற்கொண்டு செயல்படுவது முக்கியம். எமது பணவியல் கொள்கைக்கு ஏற்ப நிலையான வட்டி விகிதங்களை பராமரிக்க உதவும்.

பல ஆண்டுகளாக ஐஎம்எப் உடனான கலந்துரையாடல்களில் பங்கேற்ற ஒருவர் என்ற வகையில், இந்த முறை ஒரு நாடாக ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி சரியான பாதையில் செல்ல வெளிப்புற பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் மாறவில்லை என்பதை என்னால் கூற முடியும்.

நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், பொருளாதாரக் கொள்கைகளின் திசை மாறவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது கருத்துப்படி, அது அவசியம். சர்வதேச நாணய நிதியத்தின் ஒட்டுமொத்த பேரியல் பொருளாதார நிலைப்படுத்தல் திட்டத்தின் அளவுருக்களுக்குள் செயல்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதால், இதை ஒரு நேர்மறையான அறிகுறியாக நான் பார்க்கிறேன்.

இது ஐ.எம்.எப் பட்ஜெட் அல்ல. ஆனால் நாட்டிற்கு இது ஒரு நல்ல பட்ஜெட்.” எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறினார்.

The post “சிறந்த பட்ஜெட்“ – நாட்டிற்கு நன்மை பயக்கும் appeared first on Oruvan.com.