த.வெ.க. தலைவர் விஜய் Archives - Oruvan.com

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
புதுச்சேரியில் விஜய் தலைமையில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி புதுச்சேரி பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

எதிர்வரும் ஒன்பதாம் திகதி நடக்கவுள்ள இந்த மாநாட்டிற்கு என தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதுச்சேரி பொலிஸார் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.

இதன்படி, தமிழக வெற்றிக் கழகம் வழங்கு கியூஆர் கோட் உடன் கூடிய நுழைவுச்சீட்டு வரும் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதி அட்டை இல்லாத எவருக்கும் கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்த முடியாது எனவும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர காலங்களில் வெளியேறும் வழி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாநாட்டின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றிலும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், உயர் நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி புதுச்சேரி மாநாட்டிற்கு இவ்வாறு அனுமதி மறுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு appeared first on Oruvan.com.

தவெக உறுப்பினர்கள் தற்குறிகள் கிடையாது – விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களை தற்குறி என்கிறார்கள், அவர்கள் தற்குறிகள் கிடையாது, தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் அருகே நேற்று காலை நடந்த மக்களுடன் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் குறிப்பிட்ட அளவான ஆதரவாளர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மேலும், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்தும் பேசிய விஜய், தான் ஆட்சிக்கு வந்த பின்னர்  அனைவருக்கும் நிரந்தரமான வீடு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மோட்டார் சைக்கிள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும், அதற்குண்டான பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும், அரச வைத்தியசாலைகளுக்கு பொது மக்கள் அச்சமின்றி செல்லும் நிலைமைமை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை எப்படி செயல்படுத்த உள்ளோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக தெரிவிப்போம் என விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.

The post தவெக உறுப்பினர்கள் தற்குறிகள் கிடையாது – விஜய் appeared first on Oruvan.com.

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாக இடம்பெற்று வருகின்றது. இதில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.

கரூர் சம்பவத்திற்கு பின்னர்  நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த பொதுக் குழு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன்போது பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு தரப்பினர்களும், விஜய் மீதும் அவரின் கட்சியின் மீதும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபா நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்த விஜய் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  கரூர் சம்பவத்திற்கு பின்னர்  அரசில் செயற்பாடுகளுக்கு விஜயம் முழுக்குப் போட்டிருந்த நிலையில், தற்போது தீவிரம் காட்டியுள்ளார்.

இதன் ஒருபகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் appeared first on Oruvan.com.

விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே தொலைபேசி உரையாடல் – கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையில் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலை இரு தரப்பினரும் உறுதி செய்துள்ளனர்.

கடந்த ஆறாம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த கலந்துரையாடல் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, திமுக அரசை வீழ்த்த ஒரு கூட்டணியை அமைக்கலாம் என்ற யோசனையை எடப்பாடி பழனிசாமி முன்வைத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதற்கு விஜய் நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை என அதிமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து, பின்னர் தனது பிரசாரத்தை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக விஜய் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவும், ஜனவரி மாதத்திற்குப் பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுப்பதாகவும் விஜய் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதை தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

மேலும், இந்த உரையாடலின் விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

The post விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே தொலைபேசி உரையாடல் – கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை appeared first on Oruvan.com.

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படுமா?
கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘வய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்குகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது.

இதுதொடர்பாக முறைபாடு எழுந்த நிலையில், விஜயின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படுமா? appeared first on Oruvan.com.

விஜய் பாஜகவின் கருவி – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
கரூர் பெருந்துயரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருந்துவதாக தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகவிஜய் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசியதாகவம், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என விஜய் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து தொல்.திருமாவளவன் பேசுகையில்,

10 மணி நேரமாக அவரை காணும் பேராவலோடு பொது மக்ள் காத்திருந்தவர்கள்.

அடியெடுத்து வைக்க கூட இடமில்லாமல் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, தற்காத்துக்கொள்ள முயன்ற நிலையில்தான் இந்த பேரவலம் நடந்தேறியது என்ற உண்மையை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.

கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடராகும்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பழிசுமத்தி விஜய் பேசியிருப்பது அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

உயிர்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே விஜய் நோக்கமாக கொண்டிருக்கிறார். சங்பரிவார்களின் சதிவலையில் சிக்கி உழல்வதையே விஜயின் காணொளி உறுதிபடுத்துகிறது.

தி.மு.க.வுக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்பவர்களின் கோரப்பிடியில் விஜய் சிக்கியுள்ளார். தமிழ்நாட்டை குறி வைத்து வெளிப்படையாகவே தங்களது சித்து விளையாட்டை பாஜக தொடங்கி விட்டது.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பாஜகவின் கருவி தான் என்பது உறுதியாவதாக தொல்.திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளார்.

The post விஜய் பாஜகவின் கருவி – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை – விஜய்
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மாறாக மக்களுக்காக அறிஞர் அண்ணா உண்மையாக உழைத்தார் எனவும் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா, மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர், இருமொழிக் கொள்கையை தமிழகத்திற்குத் தந்தவர், தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர்.

சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர், சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர், குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர், கொள்கை வழி நின்றவர், கனிவின் திருவுருவம்.

இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர்.

தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.

‘மக்களிடம் செல்’ என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி, 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்.” என விஜய் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

The post பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை – விஜய் appeared first on Oruvan.com.

“மை டிவிகே”உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் விஜய்
புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை சந்திக்க தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக இறங்கி உள்ளது.

அந்த கட்சி சார்பில் ‘மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார்.

சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் செயலியை அறிமுகம் செய்துள்ளார். செயலியை தொடங்கி வைத்தப்பின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பரப்புரை முன்னெடுப்பையும் விஜய் இன்று தொடங்கிறார். குடும்பம் குடும்பமாக பொதுமக்களை தவெகவின் உறுப்பினர்களாக இணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு என திமுக உறுப்பினர் சேர்க்கை நடத்தும் நிலையில் தவெகவும் உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post “மை டிவிகே”உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் விஜய் appeared first on Oruvan.com.

ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார்.

விஜய் நடித்து வந்த ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். பொதுக்குழு, செயற்குழு, கோவையில் பூத்கமிட்டி மாநாடு ஆகியவை த.வெ.க. சார்பில் அடுத்தடுத்து நடந்து முடிந்தது. கோவை பூத் கமிட்டி மாநாட்டை தொடர்ந்து கோவையில் விஜய் ரோடுஷோ நடத்தினார். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அடுத்ததாக மதுரையில் நடந்த ரோடுஷோவிலும் ஏராளமானோர் திரண்டு வந்து விஜய்யை உற்சாகப்படுத்தினர்.

234 தொகுதிகளிலும் அடுத்ததாக 10,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அடுத்த கட்டமாக விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டு உள்ளார்.

சுற்றுப் பயணம் குறித்து கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட சுற்றுப் பயணத்தை வருகிற ஆகஸ்டு மாதம் டெல்டா மாவட்டத்தில் இருந்து விஜய் தொடங்க இருக்கிறார். நாகப்பட்டினத்தில் முதல் சுற்றுப் பயணத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் ஏற்கனவே இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினத்தில் மக்கள் இயக்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து அவரது அரசியல் சுற்றுப் பயணமும் நாகப்பட்டினத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பல கட்டங்களாக பிரசார சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாராகி வருகிறது. விஜய் சுற்றுப்பயணத்திற்காக பிரச்சார வேன் தயார் செய்யப்பட்டு உள்ளது. பிரசாரத்தின் போது முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ மூலமும் மக்களை சந்திக்க இருக்கிறார்.

முதற்கட்ட சுற்றுப் பயணம் டெல்டா மாவட்டத்திலும் அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்திலும் அதற்கடுத்ததாக தென்மாவட்டங்களிலும் விஜய் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி பலமாக இருந்து வருகிறது.

இருகட்சிகளும் பணபலத்துடனும், பதவி பலத்துடனும் 2026 தேர்தலை சந்திக்க இருக்கிற நிலையில் விஜய் தனது முகத்தை மூலதனமாக கொண்டு மக்களை சந்திக்க இருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

The post ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய் appeared first on Oruvan.com.