தோட்டத் தொழிலாளர் Archives - Oruvan.com

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ரூ.2500 அவசியம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழ்நிலையில் நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை நிர்ணயிப்பது அநீதி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலையக மக்களுக்கு காகிதங்களை வழங்கிக்கொண்டிருக்காமல், காணி உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் தனது பாதீட்டு உரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சிறிதுங்க ஜயசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

The post தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ரூ.2500 அவசியம் appeared first on Oruvan.com.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காமைக்கு முதலாளிகள் கூறும் காரணங்களை ‘ஏற்கும் அரசாங்கம்’
இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கடுமையாக உழைத்து வரும் நாட்டின் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதி தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, பெருந்தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு பிரதி அமைச்சர், சம்பளத்தை அதிகரிக்க முடியாமைக்கு முதலாளிகள் கூறும் காரணங்களை நியாயப்படுத்த முயன்றுள்ளார்.

“உலகச் சந்தையில் இலங்கை தேயிலையின் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், தேயிலைக்கு சரியான விலை கிடைப்பதில்லை எனவும், அதேபோல் உற்பத்திக்காக அதிக செலவு மேற்கொள்ளப்படுவதாகவும், அதனைவிட தொழிலாளர்களுக்கு ஏனைய நலன் திட்டங்களுக்கு அவர்கள் அதிகமான பணத்தை செலவு செய்வதாகவும் கூறியிருந்தார்கள். அவர்கள் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனக் கூறவில்லை. அவர்கள் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாமைக்கான காரணங்களை தெளிவுபடுத்தியிருந்தார்கள்.” என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடக சந்திப்பை நடத்தி குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மக்களுக்கு பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை தீங்கு விளைவிக்கும் என உலக வங்கி கூறிய அதே நாளில், பிரதி அமைச்சர் பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த வருடத்திற்கான பாதீட்டில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு ஏற்ப, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,700 ஆக உயர்த்தும் திட்டம் குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக, தற்போதைய அரசாங்கம் செப்டெம்பர் 9 ஆம் திகதி தோட்டங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியது.

“பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்த நிதி நடவடிக்கைகளால் பெருமளவில் உந்தப்பட்ட, அதிக மறைமுக வரிகள் மற்றும் பொதுத்துறையில் உண்மைச் சம்பளக் குறைப்பு , குடும்பங்களை மோசமாகப் பாதித்துள்ளன” என அதே நாளில் வெளியிடப்பட்ட இலங்கை குறித்த உலக வங்கியின் அண்மைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட சம்பளத்தை நிர்ணயிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

“உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட சம்பள அதிகரிப்பிற்கு அரசாங்கம் இதன்போது இணக்கம் தெரிவித்தது. அதற்கான திட்ட வரைபை தமக்கு கையளிக்குமாறு அரசாங்கம் கூறியது. திட்ட வரைபை அடுத்த வாரம் அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம். தொழிலாளர்களுக்கு அதிகளவு பணத்தை உழைக்கக்கூடிய வகையிலான திட்ட வரைபை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும்.”

இந்த விடயம் தொடர்பாக ஒரு மாதத்தில் மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படும் எனக் கூறிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கடந்த காலங்களில் பலமுறை கூறியது போல், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூ.1,700 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கும் என மீண்டும் ஒருமுறை ஊடக சந்திப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தார்.

வர்த்தமானி

உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வு கோரி பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,700 ஆக உயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தொழில் திணைக்களத்தால் வெளியிட்டது.

மே 21, 2024 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், நாளாந்த குறைந்தபட்ச ஊதியம் 1,350 ரூபாய், உற்பத்தித்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவு 350 ரூபாய் என்ற அடிப்படையில் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்மொழியப்பட்ட ரூ.1,700 நாளாந்த ஊதியத்தை வழங்க அரசாங்கம் தலையிடும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பையோ அல்லது தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதியையோ அரசாங்கம் இதுவரை செயல்படுத்தத் தவறியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் போதுமானதாக இருந்த ரூ.1,700 என்ற நாளாந்த ஊதியம் இன்றைய பொருளாதார சூழலில் போதுமானதாக இருக்காது என மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

The post தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காமைக்கு முதலாளிகள் கூறும் காரணங்களை ‘ஏற்கும் அரசாங்கம்’ appeared first on Oruvan.com.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் காணி: 1700 சம்பளம் குறித்து கம்பனிகளுடன் பேச்சு
“தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பள அதிகரிப்பு தொடர்பாக அதிகபட்சமான முயற்சிகளை மேற்கொள்வோம். ” – என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அதேபோல் தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி தோட்டங்களின் ஒரு பகுதியை அப்பகுதியினருக்கு வழங்குவோம். தோட்ட வேலைகளை செய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் காணி வழங்கப்படும். கம்பனிகளுக்கு தேயிலை வழங்க வேண்டும் என்ற பிணைப்பு அவ்வண்ணமே பேணப்படும். அதற்கான ஒப்பந்தம் கைசாத்திடப்படும். தோட்டத்தை பராமரித்து சொந்த காணிகளாக பேணி தேயிலை பெற்றுக்கொடுத்து நல்ல வருமானத்தை ஈட்டுங்கள்.

இத்திட்டம் சில தோட்டங்களில் ஆரம்பகட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். தோட்டங்களிலும் லயன்களிலும் கட்டப்பட்ட நிலையில் இருக்கின்றவர்களை நாம் விடுவிக்க வேண்டும். இவ்வாறு கட்டப்பட்டிருக்கும் சமூகத்தினரை சுயாதீனமாக பிரஜைகளாக மாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

மிக விரைவில் அதற்காக ஆரம்ப திட்டங்களை சில தோட்டங்களில் செயற்படுத்தி கம்பனிகளுடன் இணைந்ததாக இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.

அத்தோடு விட்டுவிடாமல் இந்த துறையில் இருக்கின்றவர்களின் பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களாக அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அதற்கான தொழில்நுட்பத்தையும், கடன் உதவிகளையும் நாங்கள் வழங்குவோம். அதனால் எவரும் இந்நாட்டு பொருளாதாரத்தின் பிரதிபலன்களை நுகராதவர்களாக இருக்க முடியாது. மிக விரைவில் கிரகரி வாவிக்கு கேபிள் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.” – என்றார்.

The post தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் காணி: 1700 சம்பளம் குறித்து கம்பனிகளுடன் பேச்சு appeared first on Oruvan.com.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்க தோட்டங்கள் மற்றும் தனியார் தோட்டங்களில் தொழில் செய்கின்றனர். தனியார் தோட்டங்களில் நஷ்டமடைந்துள்ள நிறுவனங்களும் உள்ளன. இலாபம் ஈட்டும் நிறுவனங்களும் உள்ளன. ஒவ்வொரு தோட்ட நிர்வாகங்களுடனும் முதலில் தனித்தனியே பேச்சு நடத்துமாறு பெருந்தோட்டத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அவர்களின் கருத்துகளைப் பெற்ற பின்னர் பொதுக்கலந்துரையாடலுக்கு செல்ல முடியும். நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.

The post தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு appeared first on Oruvan.com.