தோட்டத் தொழிலாளர்கள் Archives - Oruvan.com

சவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்
கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ (Dithva) புயலினால் ஏற்பட்ட கடும் மண்சரிவு காரணமாக, பசறை பிரதேசத்தில் பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகள் முற்றிலும் சிதைந்து போயின. அதன் விளைவாக, யூரி தோட்டத் தொழிற்சாலைப் பிரிவைச் சேர்ந்த சில குடும்பங்கள், கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்துள்ளன.

இந்தத் துயரமான சூழ்நிலையின் உச்சமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மரணமடைந்த ஒருவரின் சடலம், முறையான இடவசதியின்றி ஒரு தற்காலிகக் கூடாரத்தில் வைக்கப்பட்டு, நேற்று (28) அங்கேயே இறுதி கிரியைகளும் நடைபெற்றன.

இச்சம்பவம், மலையக மக்களின் அடிப்படை மனித உரிமைகளே அங்கு எவ்விதம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன என்பதற்கு ஒரு வேதனையான சான்றாகும்.

நிரந்தர வீடற்ற, காணி உரிமையற்ற நிலையில் வாழ்ந்து வரும் மலையக மக்கள், இன்றும் பல்வேறு சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தங்கள் வியர்வையையும் உழைப்பையும் அர்ப்பணித்த இச்சமூகத்திற்கு, இன்றுவரை நிலையான குடியிருப்பும் காணி உரிமையும் வழங்கப்படாதது மிகுந்த கவலையளிக்கிறது.

இருநூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாற்றைக் கொண்ட மலையக மக்கள், இன்னும் எத்தனை காலம்தான் இவ்வாறான தற்காலிக வாழ்வில் தத்தளிக்க வேண்டும்? அவர்களுக்கு நிரந்தர காணி உரிமையையும், கௌரவமான வாழ்வாதாரத்தையும் பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“தேசம் செழிக்க உழைக்கும் கைகளுக்கு – நிலையான காணியும், மனிதத்தன்மையுடனான வாழ்வும் கிடைக்க வேண்டும்” என்பதே இவர்களது முக்கிய கோரிக்கையாகும்.

The post சவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் appeared first on Oruvan.com.

தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு
பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட லெதண்டி தோட்ட தொழிலாளர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சம்பள உயர்வு எவ்வித போராட்டமோ வேலைநிறுத்தமோ இன்றி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, ஜனாதிபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இதனை முன்னிட்டு, சிறி செல்வவிநாயகர் ஆலயம் ஆலயத்தில் இன்று காலை விசேட பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொழிலாளர்கள் பொங்கல் சமர்ப்பித்து, ஜனாதிபதியின் நீண்ட ஆயுளும் நல்லாட்சியும் நிலைக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் பல போராட்டங்களும் எதிர்ப்புகளும் நடைபெற்ற பின்னரே குறைந்தளவிலான சம்பள உயர்வுகள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

“நல்லாட்சி காலத்தில் 50 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறப்பட்டாலும், அது கூட முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால் தற்போது எந்தவித போராட்டமுமின்றி 400 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பது எங்களுக்கு பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது,” என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தேயிலை கொழுந்துகளை பறித்து கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் கரங்களை நேரில் தொட்டு அவர்களின் வாழ்வாதார நிலையை கேட்டறிந்த ஜனாதிபதியை இதற்கு முன் தாங்கள் கண்டதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அந்த சந்திப்பு தொடர்பான காட்சிகளை காணொளியில் பார்த்தபோது தாங்கள் மனம் நெகிழ்ந்ததாகவும் தெரிவித்தனர்.

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பள உயர்வு, தொழிலாளர்களிடையே புதிய நம்பிக்கையையும் எதிர்கால நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

The post தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Oruvan.com.