தேசிய மக்கள் சக்தி Archives - Oruvan.com

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஐந்நூறு சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுடன் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் தேயிலை தொழிற்துறையை முன்னேற்றுவதாக குறிப்பிட்டு சர்வதேச நாடுகளில் விளம்பரங்கள் வெளியிடுவதற்காக மாத்திரம் 1965 இலட்சம் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலக வங்கியிடம் மாத்திரம் 48.9 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 60 வேலைத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. இந்த திட்டங்களுக்காக ,முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மனைவி, லக்ஷ்மன் செனவிரத்னவின் மகன் மற்றும் சாலிய திசாநாயக்கவின் மனைவி ஆகியோரே பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தரமான தேயிலையை உற்பத்தி செய்யும் விதம், தேயிலை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் உரையாற்றிய அமைச்சர், இலங்கை தேயிலை நாமத்தை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்காக அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்றும் அழைப்பு விடுத்தார்.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இலங்கை தேயிலை சபை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக சேனாரத்ன,இரத்தினபுரி பிரதேச செயலாளர் கே.எஸ். நிசாந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

The post சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை appeared first on Oruvan.com.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி எவ்வாறு மலர்ந்தது? ஹர்ஷண ராஜகருணா விளக்கம்
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா, “எமது கட்சியில் ஏற்பட்ட பிளவுகளே தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவந்தன” என தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், “அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்போம்” என்றும் உறுதியாகக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எந்தவொன்றையும் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக ‘செய்ய மாட்டோம்’ என அறிவித்தவைகளைத்தான் செய்து வருகிறது.

பொருட்களின் விலை அச்சுறுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளன. மக்கள் நாளைய வாழ்வை எப்படி சமாளிப்பது எனவே தெரியாத நிலை. அதில் கூட, அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி மக்கள்மீது இன்னும் சுமைகளை திணித்து வருகிறது.

இதன் விளைவாக, இந்த அரசாங்கம் ஒரே ஒரு தவணைக்காலத்திற்கே ஆட்சி செய்யும்.

அநுர குமார திசாநாயக்க அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறியிருந்தாலும், அவரது ‘மீட்டர்’ இயக்கம் இல்லை. ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில், அளித்த வாக்குறுதிகளில் நூற்றுக்கு 5 வீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது” என விமர்சித்தார்.

The post தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி எவ்வாறு மலர்ந்தது? ஹர்ஷண ராஜகருணா விளக்கம் appeared first on Oruvan.com.

நோர்வூட் பிரதேச சபை விவகாரம் – தேசிய மக்கள் சக்திக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன.

குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தி அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் ஆட்சியமைக்கும் என்ற அடிப்படையில் இந்தப் புரிந்துணர்வு எட்டப்பட்டது.

குறிப்பாக நுவரெலியா மாநகர சபை, வலப்பனை, அங்குராகெத்த, தலவாக்கலை,ஹட்டன் டிக்கோயா நகரசபை, கொத்மலை ஆகிய இடங்களில்  தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதாகவும், நுவரெலியா பிரதேச சபை,கொட்டகலை பிரதேச சபை, அக்கரப்பத்தன பிரதேச சபை, நோர்வுட் பிரதேச சபை ஆகிய இடங்களில் இ.தொ.கா ஆட்சி அமைப்பாகவும்  புரிந்துணர்வு எட்டப்பட்டது.

இந்த நிலையில், நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. அதிக ஆசனங்களை பெற்றிருந்தும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏனைய தரப்புடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

நோர்வூட் பிரதேச சபையில் போட்டியிட்ட  ஏனைய கட்சிகளை விட அதிகமான வாக்குகளை பெற்று இ.தொ.கா முதலிடத்தை பெற்றதனால், மக்கள் ஆணையை தேசிய மக்கள் சக்தி மதிப்பதாகவும், மக்கள் ஆணையை நிலைநாட்டுவதற்கான தேவையான  நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் இக்கலந்துரையாடலின் போது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தனர்.

மேலும், விரைவில் நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. ஆட்சியமைக்கும்.‘‘ என்று இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

The post நோர்வூட் பிரதேச சபை விவகாரம் – தேசிய மக்கள் சக்திக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை appeared first on Oruvan.com.

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டனரா?
வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியிலிருந்து வெலிகம பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

The post தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டனரா? appeared first on Oruvan.com.

தலவாக்கலை லிந்துலை நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம் – இ.தொ.கா ஆதரவு
தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்று மாலை 3.30 மணியளவில் தலவாக்கலை லிந்துலை நகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மலிதுவ லியனகே உபாலி, திறந்த வாக்கெடுப்பு மூலம் நகர சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ரொசான் இராஜசேகர் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக மலிதுவ லியனகே உபாலி, மலையக மக்கள் முன்னணி சார்பாக தாளமுத்து சுதாகர் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

திறந்த வாக்கெடுப்பிற்கு 6 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இரகசிய வாக்கெடுப்பிற்கு 5 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தது. இதில் ஆறு வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட மலிதுவ லியனகே உபாலி தெரிவு செய்யப்பட்டார்.

எதிராக போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் தாளமுத்து சுதாகர் 05 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் நடுநிலை வகித்தார்.

உப தலைவர் தெரிவு செய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ரொசான் இராஜசேகர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக பஹல விதானகே இஷார அனுருத்த மஞ்சநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ரொசான் இராஜசேகர் 06 வாக்குகளை பெற்று உப தலைவராக தெரிவானர். இவருக்கு எதிராக போட்டியிட்ட பஹல விதானகே இஷார அனுருத்த மஞ்சநாயக்க 05 வாக்குகளே வாக்குகளே பெற்றுக்கொண்டார்.

1. தலவாக்கலை லிந்துலை நகர 12 உறுப்பினர்களை கொண்டது.

• தேசிய மக்கள் சக்தி – 04

• ஐக்கிய மக்கள் சக்தி – 02

• மலையக மக்கள் முன்னணி – 03

• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02

• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 01

The post தலவாக்கலை லிந்துலை நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம் – இ.தொ.கா ஆதரவு appeared first on Oruvan.com.

கொழும்பு மாநகர சபையை ஆளப் போவது யார்? பிரதி மேயர் பதவி சண் குகவரதனுக்கு வழங்குமாறு அழுத்தம்
அண்மையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், ஆளும் தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியுள்ளது.

எனினும் இதில் 116 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் மாத்திரம் தான் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாநகர சபையையின் நிலையும் அவ்வாறே அமைந்துள்ளது. உள்ளூராட்சிமன்றங்களில் மிக முக்கிய சபையாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையை ஆட்சி செய்வதற்காக போதிய பெரும்பான்மைய எந்த கட்சிகளும் பெற்றிக்கவில்லை.

கொழும்பு மாநகசபையில் ஆட்சியமைப்பதற்கு அவசியமான 59 உறுப்பினர்கள் அல்லது அதற்கு அதிகமான உறுப்பினர்களை எந்த அரசியல் கட்சிகளும் தனித்து பெற்றுக்கொள்ளவில்லை.

தேர்தல் முடிவுகளின் படி, தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் 48 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட சுயேட்சைக் குழுக்கள் அனைத்தும் 69 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஆளும் கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 48 பேரில் 12 பேர் தமிழர்கள் எனவும், ஏனைய கட்சிகள் சார்பிலும் கொழும்பு மாநகர சபைக்கு அதிகளவான தமிழர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன.

எனினும், கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்றும் திறனை எதிர்க்கட்சி இழந்துள்ளதாகவும், ஆளும் தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பல சுயேச்சைக் குழுக்களும் சிறிய கட்சிகளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் முதல் முறையாக, கொழும்பு மேயர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேராத ஒரு பெண் வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிரதி மேயர் பதவி தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்ற சண் குகவரதனுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் ஆளும் கட்சிக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொழும்பு மாநகர சபையில் நீண்ட காலமாக வழங்கி வரும் திறமையான சேவையைத் தொடர, எதிர்க்கட்சியில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியுடன் இணக்கமாகச் செயல்பட்டு ஆட்சியை நிலைநாட்ட ஐக்கிய தேசியக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

“மக்களுக்கு பொய் சொல்லாமல் செயல்படும் ஒரு அரசாங்கத்தை வழங்குவதற்காக, எதிர்க்கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, அந்தக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது.”

கொழும்பு மாநகர சபையில் நீண்ட காலமாக அதிகாரத்தை வகித்து வந்த அதே வேளையில், இதன் மூலம் வழங்கிய திறமையான மற்றும் சிறந்த சேவையைத் தொடர எங்கள் கட்சி பாடுபடுகிறது என்றார்.

The post கொழும்பு மாநகர சபையை ஆளப் போவது யார்? பிரதி மேயர் பதவி சண் குகவரதனுக்கு வழங்குமாறு அழுத்தம் appeared first on Oruvan.com.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கி இரட்டிப்பாக அதிகரிப்பு
யாழ். மாவட்டத்தில் மூன்று பிரதான தமிழ்த் தேசியக் கட்சி களின் வாக்குகள் ஏறத்தாழ இரு மடங்கினால் அதிகரிக்க, ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் வீழ்ச்சிகண்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 17 சபைகளிலும் உள்ள 409 உறுப்பினர்களில் 135 இடங்களை தமிழ் அரசுக் கட்சி வென்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களில் இது 33 சதவீதமாகும்.

இதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் 81 உறுப்பினர்களை பெற்றுள்ளதோடு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி 79 உறுப்பினர்களை பெற்று 3 வது இடத்தை எட்டியுள்ளது.

இதேபோன்று வாக்கு எண்ணிக் கையில் 2024 ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி 27,986 வாக்குகளை எடுத்த தமிழ்க் காங்கிரஸ் 26,605 வாக்குகள் அதிகரித்து 54,591 வாக்குகளை இம்முறை பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் 22,513 வாக்கு களை மட்டுமே பெற்ற ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி 22,058 வாக்குகள் அதிகரித்து 44,571 வாக்குளை பெற்றுள்ளது.

இவ்வாறே 63,327 வாக்குகளை பெற்ற தமிழ் அரசுக் கட்சி 117,616 வாக்குகளைப் பெற்று சாதனை வெற்றியை நிலை நாட்டி அதிகப்படி யாக பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் 80,830 வாக்குகளைப் பெற்ற அநுரா அரசின் தேசிய மக்கள் சக்தியானது, இம்முறை 13,663 வாக்குகள் பின்னடைவச் சந் தித்து 67,167 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டது.

The post தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கி இரட்டிப்பாக அதிகரிப்பு appeared first on Oruvan.com.

ஜனாதிபதியாக வர வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பிரதமர் கூறும் ஆலோசனை
எமது மக்கள் அலையை கண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக வர நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகவே, ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்த சிந்தனையை திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் இன்று (1) காலி முகத்திடலில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,

காலி முகத்திடல் இம்முறை மே தின கூட்டத்தால் பெருமையடைந்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துடன் மே தின கூட்டத்தை நடத்துவோம் என்று கடந்த முறை மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

ஏனைய அரசியல் கட்சிகளின் மே தின கூட்டத்துக்கும் எமது மே தின கூட்டத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகிறது. பாரிய போராட்டத்துக்கு மத்தியில் ஆட்சியை கைப்பற்றினோம். போராட்டத்தை கொண்டாடும் வகையில் இம்முறை மே தின கூட்டம் அமைந்துள்ளது. எமது மக்கள் அலையை கண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆகவே ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்த சிந்தனையை திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.

உழைக்கும் வர்க்கத்தினர் எமது வெற்றியின் பிரதான பங்காளர்கள் என்பதை ஒருபோதும் மறக்க போவதில்லை. மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாகவே செயற்படுவோம். எதிர்கால குறித்து அரசாங்கத்திடம் பாரிய திட்டங்கள் உள்ளன. சிறந்த நாட்டையே நாங்கள் எதிர்கால தலைமுறையினரிடம் ஒப்படைப்போம் என்றார்.

The post ஜனாதிபதியாக வர வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பிரதமர் கூறும் ஆலோசனை appeared first on Oruvan.com.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது எனவும், நாட்டின் வரலாற்றை மாற்றிய இரண்டு தேர்தல்களில் வெற்றிபெற்றது போன்று உள்ளுராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது இந்த நாட்டின் வரலாற்றை மாற்றிய ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகள் மூலம், அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் உள்ளது எனவும், எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலிலும் நாம் வெற்றிபெறுவோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டில் 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவிருந்தது எனவும், ஆனால் ரணில் விக்ரசிங்க உள்ளுராட்சிமன்ற தேர்தலை முடக்குவதற்கு பல வேலைகளை செய்தார் எனவும், இறுதியில் நாம் ஆட்சிக்குவந்த பின்னரே தேர்தலை நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை பாதுகாத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாம் மக்களின் பணத்தினை கொள்ளையடிப்பவர்கள் அல்ல எனவும், நாம் மக்களின் பணத்தினை பாதுகாப்பவர்கள் எனவும், ஒரு அரசாங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றநாள் முதல் ஜனாதிபதி அநுர அவர்கள் அதற்கு முன்னுதாரணமாக உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்த்தரப்பினர் தமது இயலாமையை மறைக்க எம்மை கொள்ளையர்கள் என்று கூறுகிறார்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

The post தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது appeared first on Oruvan.com.

தேசிய மக்கள் சக்தி அடித்தளம் பலவீனமடைந்துவிட்டது – ஜே.வி.பி. தான் நாட்டை ஆட்சி செய்கிறது
தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்று செயல்படும் விதத்தில் அவர்களின் பிரபலமான அடித்தளம் கணிசமாக பலவீனமடைவதை காண்பதாக பேராசியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

இன்று தேசிய மக்கள் சக்தியின் வேகம் குறைக்கப்பட்டு, ஜே.வி.பி எழுச்சி பெற்றுள்ளதாகக் கூறும் அவர்,ஜே.வி.பி.யே தற்போது நாட்டை ஆட்சி செய்வதாக அவர் கூறியுள்ளார்.

அவர் தனது இணைய சேனலில் வெளியிடப்பட்ட காணொளியில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

”இந்த அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தேசிய மக்கள் சக்திகளின் தொலைநோக்குப் பார்வை தொடர்பான விவாதத்தில் திலீப விதாரண மிக முக்கிய பங்கு வகித்தவர்.

”மறுமலர்ச்சி என்ற கருத்தை கருத்தியல் ரீதியாக உருவாக்குவதில் திலீப் மிக முக்கிய பங்கு வகித்தவர். அவர் அரசாங்கத்தின் மீது மிகுந்த விசுவாசத்தையும் கொண்டிருந்தார்.

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பதவியை அவர் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் வகித்து வந்த தீலிபின் இராஜினாமாவை, ஒரு சிறிய சம்பவமாகக் கருத முடியாது.

அது மட்டுமல்லாமல், பொதுவாக தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் மக்கள், குறிப்பாக ஜேவிபியைச் சேர்ந்தவர்கள், திலீப் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

எனவே, இந்த பின்னணியில் அவரது இராஜினாமா ஒரு சிறிய அபாயகரமான விடயமாக கருதப்படலாம்.

இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக நடத்துவது உயர்மட்டத் தலைமையே.தேசிய மக்கள் சக்தி என்று ஒரு நிர்வாக சபை இருக்கிறது. ஆனால், அது ஏதோ ஒரு வகையில் செயலிழந்து விட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசு செயல்படும் விதத்தால் அவர்களது அடித்தளம் வெகுவாக பலவீனமடைந்துள்ளது. இந்தத் தீங்கான நிலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பைப் பாதிக்கும் விடயம் என்று நினைக்கிறேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

The post தேசிய மக்கள் சக்தி அடித்தளம் பலவீனமடைந்துவிட்டது – ஜே.வி.பி. தான் நாட்டை ஆட்சி செய்கிறது appeared first on Oruvan.com.