திருக்குமார் நடேசன் Archives - Oruvan.com

பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சை – சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடும் சிஐடி
பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) தகவல் வெளிப்படுத்தல் அறிக்கையையில் இடம்பெற்றுள்ள இலங்கையர் குழுவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக குற்றப் புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, தேவையான ஆவணங்களை விரைவில் கொண்டு வருவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதன் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலை தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பண்டோரா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி, பல இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கையில் உள்ள அனைத்து தகவல்களும் பெறப்பட்டு உரிய முறையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என குற்றப் புலனாய்வு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.

இதில் சட்டவிரோதமாக சொத்து குவித்திருந்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பல தரப்பட்ட பிரபலங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த ஆவணத்தை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்டிருந்தது. 117 நாடுகளிலிருந்து, 150க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின்கணவர் திருக்குமார் நடேசனின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சை – சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடும் சிஐடி appeared first on Oruvan.com.