திருகோணமலை Archives - Oruvan.com

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாகக் கூறி கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திருகோணமலை, கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், வணக்கத்துக்குரிய சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும் வணக்கத்துக்குரிய நந்த தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

The post திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீளவும் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பத்து சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீளவும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் – இராதா எம்.பி விடுக்கும் கோரிக்கை
திருகோணமலை சம்பவத்தை அரசாங்கம் முறையாக கையாள வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்பு இலங்கையில் இனவாதம் மதவாதம் என்பன இல்லாமல் அனைவரையும் சமனாக மதிக்கின்ற அதே நேரம் அனைவருக்கும் சட்டமும் நீதியும் பொதுவானது என்ற வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தது.

ஆனால் திடீரென திருகோணமலையில் ஒரு இரவில் புத்தர் சிலைவைப்பு, அதற்கு பொலிசாரின் எதிர்ப்பு, தடியடி, சிலை அகற்றல், மீண்டும் அதே பொலிசாரின் பாதுகாப்புடன் சிலையை பிரதிஸ்டை செய்தமை என்பன ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த விடயத்தில் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இன்று பலரும் முன்வைக்கின்றார்கள். இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது.

தற்போது இது சர்வதேச விடயமாக மாறியுள்ளது. எனவே அரசாங்கம் இதற்கான முறையான தீர்வை வழங்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதனை விடுத்து இனவாதிகளுக்கு செவி சாய்த்து நீங்களும் கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தைப் போல ஒரு இனவாத அரசாங்கமாக மாறிவிட வேண்டாம்.

தவறு எங்கு நடந்தாலும் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனவே, இந்த விடயத்தை அரசாங்கம் சரியாக கையாளாவிட்டால் சர்வதேச ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படலாம். இதன் மூலம் தற்பொழுது மிகவும் வேகமாக வளர்ந்த வருகின்ற உல்லாசத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார்.

(செய்தி – நுவரெலியா எஸ்.தியாகு)

The post தமிழர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் – இராதா எம்.பி விடுக்கும் கோரிக்கை appeared first on Oruvan.com.

திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்திற்கு முல்லைத்தீவு தவிசாளர் கண்டனம்
திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.கோலகேஸ்வரன் (17.11.05) இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய வரலாற்று பின்னணிகளை கொண்ட நிலமாக திருகோணமலை காணப்படுகின்றது.

காலத்திற்கு காலம் ஆட்சியில் ஏறுகின்ற அரசாங்கம் திருகோணமலையினை சிங்கள பௌத்த பூமியாக மாற்றுகின்ற வேலைத்திட்டத்தினைத்தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

திருகோணமலையினை ஒரு பௌத்த சிங்கள பிரதேசமாக வெளிப்படுத்துவன் மூலம் வடக்கினையும் கிழக்கினையும் பிரிப்பதும் தமிழர்களின் தாயகம் இல்லை என்ற வேலைத்திட்டத்தினை உருவாக்குகின்ற ஒரு வேலைத்திட்டத்தினை தொடர்ச்சியாக ஆட்சிபீடத்தில் ஏறுகின்ற அரசுகள் இதே கொள்கையினை கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.

அவ்வாறுதான் நேற்று எதுவித அனுமதியும் பெறாமல் புத்தர் சிலை அமைக்கப்பட்டது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் பொதுபாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தமைக்கு இணங்க அந்த சிலை அப்புறப்படுத்தப்பட்டது.

இன்று மீண்டும் அந்த சிலை அந்த பிரதேசத்தில் புத்தர் சிலைநிறுவப்பட்டுள்ளது உண்மையில் இன்று ஆட்சியில் உள்ள அரசாங்கமும் இனவாத போக்கினைத்தான் கடைப்பிடிக்கின்றார்களா?இனவாத அரசியலைத்தான் முன்னெடுக்கின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.

உண்மையில் சிங்கள பௌத்தர்கள் இல்லாத ஒரு பிரதேசத்தில் அடாவடித்தனத்தின் அடிப்படையில் சிங்கள பௌத்த குருமார்கள் புடைசூழ பௌத்தத்தினை கேவலப்படுத்தும் அடிப்படையில் ஒரு புத்தர் சிலை அரச இயந்திரத்தின் பாதுகாப்புடன் நிறுவப்பட்டிருக்கின்றது என்பது இந்த தேசத்தில் மிகமோசமான இனவாத சூழ்நிலையினை வெளிப்படுத்தி இருக்கின்றது.

இந்த தேசம் தொடர்ச்சியாக அபிவிருத்தியினை நோக்கி நகரமுடியாமல் இருக்கின்ற மூல காரணம் காக்கிச்சட்டை அணிந்த பௌத்த சிங்கள மதத்தலைவர்களின் மகாவம்ச மனநிலை என்பது தொடர்ச்சியாக நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது.

திருகோணமலையில் இடம்பெற்ற இந்தசம்பவம் இரண்டு இனங்களுக்கிடையில் அல்லது மதங்களுக்கிடையில் ஒரு முரண் நிலையினை உருவாக்கும் சம்பவம் எனவே அரசாங்கம் இந்த விடையத்தில் கவனம் செலுத்தி முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த சின்றம் அப்புறப்படுத்தப்பட்டு பிரதேசம் சமதான சூழ்நிலையினை உருவாக்கும் பிரதேசமாக மாற்றி அமைக்கப்படவேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்திற்கு முல்லைத்தீவு தவிசாளர் கண்டனம் appeared first on Oruvan.com.

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் – ரிஷாட் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலையில் பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் தலையிடுமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், முஸ்லிம் பெண்கள் பணியில் இருக்கும்போது ஹிஜாப் அணிவதைத் தவிர்க்குமாறு விடுத்துள்ள உத்தரவுகள் குறித்து அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், அவர் இதனை குறிப்பிட்டு கவலை தெரிவித்துள்ளார்.

இது அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரம் மற்றும் கலாச்சார அடையாளத்திற்கான உரிமைகளை மீறும் செயற்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்து சுகாதாரத் துறையில் பணியாற்றி வருவதாகவும், புதிய உத்தரவு நியாயமற்றது மற்றும் வேதனையானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வரம்புகளுக்குள் மத உடையை அனுமதிக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு அமைச்சரை அவர் கோரியுள்ளார்.

மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து இந்த மேல்முறையீட்டுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஒரு தொந்தரவான முன்னுதாரணத்தை அமையக்கூடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எச்சரித்துள்ளார்.

The post முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் – ரிஷாட் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை appeared first on Oruvan.com.

மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ‘ஒரு மயான பூமி’ அல்ல
கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ‘ஒரு மயான பூமி’ என்ற கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் உரிமையாளர்களின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய மேலும் ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென சட்ட வைத்திய அதிகாரி நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ஜூலை 20 அன்று மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளைக் கண்டுபிடித்தது.

ஜூலை 30 ஆம் திகதிக்குள் அந்த இடத்தின் வரலாறு குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவிட்ட மூதூர் நீதிபதி, அகழ்வாய்வு குறித்த அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

நேற்றைய தினம் (ஜூலை 30) வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மனித புதைகுழி இருந்ததா அல்லது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியா என்பதை துல்லியமாக உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித எலும்புகள் நீண்டகாலத்திற்கு உட்பட்டவையாக இருப்பதாக திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி நிர்மால் பொறுக்கம தனது அறிக்கையில் மூதூர் நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

அந்த எச்சங்களுக்குரிய நபர்களின் மரணம், காயங்களினூடாக ஏற்பட்டதா அல்லது இயற்கை மரணமா அல்லது ஏதாவது குற்றவியல் சம்பவத்துடன் தொடர்புபட்டவையா? என்பதை  தீர்மானிக்க மேலும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றும் பணியை மேற்கொள்ளும் பிரித்தானியாவைச் சேர்ந்த MAG நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நீதிமன்றத்திற்கு நிபுணர் அறிக்கையை வழங்குவதற்காக சட்ட வைத்திய அதிகாரி கள ஆய்வு நடத்தியுள்ளதாகவும், அந்த இடத்தில் பல மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை கண்டுள்ளதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இரண்டு நிபுணர் அறிக்கைகளின் அடிப்படையில், அரச பகுப்பாய்வுத் திணைக்களம், திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், தொல்பொருள் திணைக்களம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரை, அந்த இடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் கூடுமாறு நீதவான எச். எம். தஸ்னீம் பௌசான்  உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற ஊடகவியலாளர் குறிப்பிடுகின்றார்.

57 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரியூட்டியும் கொலை செய்யப்பட்ட, இலங்கை இராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்படும், ஜூலை 7, 1990 சம்பூர் படுகொலையின் நினைவாக பாதிக்கப்பட்ட கிராம மக்களால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ‘ஒரு மயான பூமி’ அல்ல appeared first on Oruvan.com.

திருகோணமலையில் 3071 ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராகும் அரசாங்கம்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, திருகோணமலை உட்பட பல பகுதிகளில் 3071 ஏக்கர் நிலத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் போராட்ட இயக்க நிர்வாக உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் கொழும்பின் அளவிலான 620 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இந்தியாவின் பொருளாதார மண்டலமாக நியமிக்கப்பட்டுள்ளதாக முதலிகே மேலும் கூறியுள்ளார்.

திருகோணமலையிலிருந்து மன்னார் வரையிலான அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுதல் ஆகியவை முன்மொழியப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலிகே பின்வரும், நில ஒதுக்கீடுகளை இதன்போது மேற்கோள் காட்டியுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாகம்:

851 ஏக்கர், இதில் 62 எண்ணெய் தொட்டிகள் ஏற்கனவே இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

சம்பூர் மின் உற்பத்தி நிலைய பரப்பளவு: 831 ஏக்கர்.

சம்பூர் பொருளாதார மண்டலம்: 900 ஏக்கருக்கு அதிகம்.

குச்சவெளி சுரங்கத்திற்காக 100 ஏக்கர்.

முத்துநகர்: மொத்தம் 900 ஏக்கர், இதில் 800 ஏக்கர் சூரிய சக்தி பேனல் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு துறைமுகம் மற்றும் திருகோணமலை துறைமுகப் பகுதியில் உள்ள கப்பல்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளதாக முதலிகே கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய திருகோணமலை மீனவ சமூகத்தினர் அந்தப் பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டு, இந்திய முதலீட்டாளர்களின் பொழுதுபோக்குக்காக அந்த மண்டலம் ஒதுக்கப்பட உள்ளதாகவும் முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார்.

The post திருகோணமலையில் 3071 ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராகும் அரசாங்கம் appeared first on Oruvan.com.

திருகோணமலையில் பொலிஸாரை வீட்டுக்குள் அடைத்து வைத்த சம்பவம் – அறுவர் கைது
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மார்ச் 31 ஆம் திகதி நடந்துள்ளது. ஒரு குழுவினர் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதை காட்டும் காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.

சம்பவம் தொடர்பாக நிலாவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு, அதே நாளில் ஒரு சந்தேக நபரைக் கைது செய்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், இன்று (02) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், நிலாவெளி பொலிஸ் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு நேற்று (01) ஒரு பெண் சந்தேக நபரையும் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 20, 21, 22, 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் நிலாவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களைக் கைது செய்ய நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மற்றும் அதிக சத்தத்தை எழுப்பியவாறு மோட்டார்சைக்கிளில் சென்றோரை கைது செய்ய முற்பட்ட போக்குவரத்து பொலிஸாரை கடமையை செய்ய விடாது இளைஞர் குழு ஒன்று தடுத்திருந்தது.

அத்தோடு பொலிஸாரின் தொலைபேசியையும் சேதமாக்கி அட்டகாசம் செய்திருந்தனர். மேலும், போக்குவரத்து பொலிஸாரை அந்த இளைஞர் குழு அருகிலுள்ள வீடொன்றுக்குள் இழுத்துச்சென்று பூட்டி அடைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post திருகோணமலையில் பொலிஸாரை வீட்டுக்குள் அடைத்து வைத்த சம்பவம் – அறுவர் கைது appeared first on Oruvan.com.

திருகோணமலையில் ஆளில்லா விமானம் மீட்பு – நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை
திருகோணமலை கடற்பரப்பில் அண்மையில் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோன், நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை (SLAF) தளபதியிடம் இறுதி அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 27ஆம் திகதி மீனவர்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன், ஒரு இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதுடன், பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

ட்ரோன் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு சுமார் இரண்டு வாரங்கள் கடலில் மிதந்துகொண்டிருந்தது என்பதும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இலங்கையின் பாதுகாப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், நாட்டிற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ட்ரோன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post திருகோணமலையில் ஆளில்லா விமானம் மீட்பு – நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை appeared first on Oruvan.com.