திமுக Archives - Oruvan.com

திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது – த.வெ.கவின் நிலை என்ன?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) நேற்றுமுதல் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்தக் கணிப்புகள் அரசியல் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

வாக்குப்பதிவு முடிந்த உடனே வெளியிடப்படும் இந்தக் கணிப்புகள், மக்களின் வாக்கு நடத்தை மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்த ஒரு ஆரம்பக் கண்ணோட்டத்தை வழங்குகின்றன என்றாலும், அவை இறுதி முடிவுகளை உறுதி செய்யாது.

பெரும்பாலானக் கணிப்புகள் படி, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான (தி.மு.க.) கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக NDTV, Matrix, Republic B Mark, Chanakya போன்ற நிறுவனங்கள் தி.மு.க. கூட்டணி 125 க்கும் மேற்பட்டத் தொகுதிகளில் வெற்றி பெறும் என மதிப்பிட்டுள்ளன.

நகர்ப்புறங்கள் மற்றும் சில வடக்கு மாவட்டங்களில் தி.மு.க.க்கு வலுவான ஆதரவு தொடர்ந்திருப்பதாகவும் இந்தக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதே நேரத்தில், அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் ஒரே திசையில் இல்லை. இதற்கு மாறாக, CNN, Times Now, JVC, Votewipe போன்ற சில நிறுவனங்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) தலைமையிலான கூட்டணி 128 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என கணித்துள்ளன.

சில மாவட்டங்களில் கடுமையானப் போட்டி நிலவியதாலும், வாக்குகள் சிதறியிருப்பதாலும் முடிவுகள் மாறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகள் குறித்து இன்னும் உறுதியான நிலை இல்லை என்பது தெரியவருகிறது.

இதற்கிடையில், புதிய அரசியல் சக்தியாக கருதப்படும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிகபட்சமாக 24 இடங்களில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் வாக்காளர்கள் மற்றும் சில நகர்ப்புற பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிடத்தக்க ஆதரவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி குறித்த கணிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கிராமப்புறங்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி அதிகபட்சமாக 0 முதல் 6 இடங்கள் வரை மட்டுமே பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பல தொகுதிகளில் வாக்கு சதவீதத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் மதிப்பீடுகள் கூறுகின்றன.

பல்வேறு கருத்துக் கணிப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளதால், தமிழக அரசியல் சூழல் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) பொதுவாக மாதிரி வாக்கு அடிப்படையில் கணிக்கப்படுவதால் அவை தவறக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி 400 இடங்கள் வரை வெற்றிபெறும் எனக் கூறப்பட்ட போதிலும், தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைக்கூட பாஜகவால் பெற முடியாது போனது.

எனவே, இறுதி உண்மையான முடிவுகள் தேர்தல் ஆணையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைகள் மூலம் மட்டுமே உறுதி செய்யப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சு.நிசாந்தன்

The post திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது – த.வெ.கவின் நிலை என்ன? appeared first on Oruvan.com.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி – தமிழக அரசு கடும் எதிர்ப்பு
வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நிறுத்​தா​விட்​டால் தமிழக அரசி​யல் கட்சிகள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று இடம்பெற்ற அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் 1951 முதல் 2004ஆம் ஆண்டு வரை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாக்​காளர் பட்​டியலில் தகு​தி​யானவர்​கள் அனை​வரை​யும்  சேர்ப்​பது, உயி​ரிழந்​தவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், இரட்​டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்​களை நீக்​கு​வது ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்டு இந்த பணி முன்னெடுக்கப்படுகின்றது.

2004ஆம் ஆண்டுக்கு பின்னர் அண்மையில் பிஹாரில் இப்​பணி நடை​பெற்​றது.

இந்நிரலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்​கம் உள்​ளிட்ட 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிகள் கடந்த 28ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கு தமிழக ஆளும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையிலேயே, முதலமைச்சர் தலைமையில் நேற்று அனைத்​துக் கட்சி கூட்​டம் சென்​னை​யில் நடைபெற்றது.

இதில் 49 கட்​சிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்போது முதலமைச்சர் முன்மொழிந்த தீர்​மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கு நாட்​டின் பல்​வேறு கட்​சிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன.

மத்​திய அரசின் கைப்​பாவை​யாக, எதேச்​ச​தி​காரப் போக்​குடன் தேர்​தல் ஆணை​யம் செயல்​படு​வதை கண்​டிப்பதாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி – தமிழக அரசு கடும் எதிர்ப்பு appeared first on Oruvan.com.

விஜய் குறித்து பேச திமுக தடை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து பேச, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேலிடம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து ஆண்டு இடம்பெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.

மக்கள் சந்திப்புகளின் போது தமிழக முதலமைச்சரையும், தமிழக அரசையும் விஜய் கடுமையாக சாடி வருகின்றார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தி.மு.க., நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ கூட்டத்தில் விஜய் குறித்து பேசுவதற்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் காந்தி, தமிழக் வெற்றிக் கழகம் குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால், அதற்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்’ என மேலிடத்தின் உத்தரவை அமைச்சர் காந்தி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும்,  திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் விஜய் குறித்து பேசுவதற்கு மேலிடம் தடை விதித்துள்ளமையை வெளிப்படையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post விஜய் குறித்து பேச திமுக தடை appeared first on Oruvan.com.

நான்கு முனைப் போட்டி – “2026 தமிழக தேர்தல்“ யாருக்குச் சாதகம்?
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என கிட்டத்தட்ட நான்குமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதக-வும் தவெக-வும் பிரிக்கும் வாக்குகள் யாருக்குச் சாதகமாகும் என்பதே இப்போதைய கேள்வி.

தமி​ழ​கத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் எப்போதும், பிரதானமான திமுக, அதிமுக கூட்ட​ணியின் வெற்றி தோல்வி​களுக்கு காரணமாகி இருக்​கின்றன.

2016 தேர்தலில் அதிமுக 40.88% வாக்கு​களுடன் 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி 39.85% வாக்கு​களுடன் 98 தொகுதி​களில் வென்று ஆட்சியை இழந்தது. இரண்டு அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தி​யாசம் 1 சதவீதம்​தான். அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகள் 6.1 சதவீதம். தனித்து போட்டி​யிட்ட பாமக 5.36 சதவீதம், பாஜக 2.86 சதவீதம், நாதக 1.07 சதவீதம் என வாக்குகளை பெற்றன. இதுதான் கூட்டணி கணக்கு. இதில் ஒரு சில கட்சிகள் திமுக பக்கம் போயிருந்தால் ஆட்சியே மாறியிருக்​கலாம்.

2021 தேர்​தலில் திமுக கூட்​டணி 45.38 சதவீத வாக்​கு​களு​டன் 159 தொகு​தி​களில் வென்று ஆட்​சியை பிடித்​தது. அதி​முக கூட்​டணி 39.71 சதவீத வாக்​கு​களு​டன் 75 தொகு​தி​களில் வென்று ஆட்​சியை இழந்​தது. இரு கூட்​ட​ணி​களுக்கு இடையி​லான வித்​தி​யாசம் 6 சதவீதம் தான். அந்​தத் தேர்​தலில் 3-வது இடம்​பிடித்த நாதக பெற்ற வாக்​கு​கள் 6.58 சதவீதம். அதே​போல், அமமுக – தேமு​திக 2.85 சதவீத​மும் மநீம 2.73 சதவீத​மும் வாக்​கு​களை பெற்​றன.

வரும் 2026 தேர்​தலில் திமுக அணி அப்​படியே தொடர்​கிறது. அதி​முக -பாஜக கூட்​ட​ணி​யில் இன்​னும் சில கட்​சிகள் இணை​ய​லாம். வழக்​கம் போல நாதக தனித்து போட்​டி​யிடு​கிறது. தவெக-வுக்​கும் தனித்து போட்​டி​யிடு​வதை தவிர வேறு வழி​யில்​லை. ஒரு​வேளை, நாதக – தவெக கூட்​டணி அமைய​லாம். தற்​போதைய சூழலில் 4 முனைப் போட்டி நிச்​சய​மாகி உள்​ளது.

இதில் 2024 தேர்​தலின்​படி நிரூபிக்​கப்​பட்ட வாக்கு சதவீதப் ​படி திமுக அணிக்கு 46.97 சதவீத வாக்​கு​கள் உள்​ளன. அதி​முக அணி​யின் 23.05 சதவீதம், பாஜக அணி​யின் 18.28 சதவீத வாக்​கு​களைக் கூட்​டி​னால் 41.33 சதவீதம் வரும். 2024-ல் நாதக தனித்து 8.20 சதவீத வாக்​கு​களைப் பெற்​றது. இதில் திமுக ஆட்​சிக்கு எதி​ரான மனநிலை கொண்ட வாக்​கு​களை அறு​வடை செய்து எளி​தாக வெற்​றி​பெறலாம் என்​பது அதி​முக – பாஜக​வின் கணக்​கு. ஆனால், புதி​தாக களத்​துக்கு வரும் தவெக யாருடைய வாக்​கு​களைப் பிரிக்​கப்​போகிறது எனத் தெரிய​வில்​லை.

விஜய் கடுமை​யாக திமுக-வை எதிர்க்​கி​றார். எனவே, திமுக-வுக்கு எதி​ரான வாக்​கு​கள் தவெக-வுக்​குப் போகலாம் இது அதி​முக-வுக்கு மைனஸ். அதேசம​யம், விஜய், பாஜக-வை​யும் கடுமை​யாக எதிர்க்​கி​றார். இதனால் பாஜக-வுக்கு எதி​ரான வாக்​கு​கள் விஜய்க்கு வரலாம். இது திமுக-வுக்கு மைனஸ். மேலும், திமுக, பாஜக-வை பிடிக்​காத சிறு​பான்​மை​யினர், அரசு ஊழியர்​கள், பொது​மக்​கள் வாக்​கு​கள் தவெக – நாதக​வுக்கு போகும்.

இது திமுக, அதி​முக அணி​களுக்கு மைனஸ். ஒரு​வேளை, நாதக – தவெக கூட்​டணி அமைந்தால் அது திமுக, அதி​முக அணி​களுக்கு மேலும் சவாலாகும். 2006-ல் விஜய​காந்த் 3-வது அணி​யாக களத்​தில் நின்​றார். அது அப்​போதைய ஆளும் கட்​சி​யான அதி​முக-​வின் ஆட்சி பறி​போக காரண​மானது. 2011-ல் அதே தேமு​தி​க-வை கூட்​ட​ணிக்​குள் இழுத்து திமுக-வை ஆட்​சியி​லிருந்து அகற்​றி​னார் ஜெயலலி​தா. அதேசம​யம், 2016-ல் அமைக்​கப்​பட்ட மக்​கள் நலக்​கூட்​டணி எதிர்க்​கட்​சி​யான திமுக-வுக்​குப் போகவேண்​டிய வாக்​கு​களை அறு​வடை செய்​து, மீண்​டும் அதி​முக ஆட்​சி​யமைய காரண​மானது. 2021-ல் நாதக பிரித்த வாக்​கு​கள் அதி​முக ஆட்​சியை இழக்க வழியமைத்​தது.

எப்​படிப் பார்த்​தா​லும் தற்​போதைய 4 முனைப் போட்​டி, திமுக-வுக்​கும், அதி​முக-வுக்​கும் கத்​தி​மேல் நடக்​கும் பாதை​தான். தேர்​தலுக்கு இன்​னும் ஒரு வருடம் இருப்​ப​தால் அதற்​குள்​ளாக காட்​சிகள் மாறுகிறதா எனப் பார்​ப்​போம்​.

The post நான்கு முனைப் போட்டி – “2026 தமிழக தேர்தல்“ யாருக்குச் சாதகம்? appeared first on Oruvan.com.