திமுக ஆட்சி Archives - Oruvan.com

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே மலரும்
“மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு பட்ஜெட்டில் தந்தது வெறும் ‘பூச்சியம்’தான். இப்போது, என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற போர்வையில் அதே பூச்சியத்தைதான் மக்களும் திருப்பித் தர போகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஊழல் கறை படிந்த அத்தனை பேரையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, பொய்களை பரப்பிகொண்டு, தேர்தலை சந்திக்க வருகிறார்கள்” எனவும் தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார்.

“தமிழ்நாட்டு மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்று இந்தியா டுடே-வும் சி-வோட்டர்ஸ் நிறுவனமும் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி 45 சதவீதம் ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது.

எங்களுக்கும், இரண்டாம் இடத்துக்கும் இருக்கக் கூடிய வித்தியாசம் 12 சதவீதம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூன்று சதவீதம் வித்தியாசம் இருந்தாலே இலகுவாக ஆட்சியை கைப்பற்றிவிட முடியும். 12 சதவீதம் வித்தியாசம் என்றால், அது நிச்சயம் மிகப் பெரிய வெற்றியாகதான் இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக மீண்டும் ஆட்சியமைப்பதில் எந்த மாற்றமும் இருக்காது. அதற்கென்று, நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். தி.மு.க. என்பது, எப்போதும், என்றென்றும், மக்களுடன் இருக்கக்கூடிய இயக்கம். மக்களுக்காக பாடுபடக்கூடிய இயக்கம். அதனால், இன்னும் உற்சாகமாக உழைத்து, கணிப்பை உண்மையாக்குவோம் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே மலரும் appeared first on Oruvan.com.

விஜய் குறித்து பேச திமுக தடை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து பேச, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேலிடம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து ஆண்டு இடம்பெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.

மக்கள் சந்திப்புகளின் போது தமிழக முதலமைச்சரையும், தமிழக அரசையும் விஜய் கடுமையாக சாடி வருகின்றார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தி.மு.க., நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ கூட்டத்தில் விஜய் குறித்து பேசுவதற்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் காந்தி, தமிழக் வெற்றிக் கழகம் குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால், அதற்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்’ என மேலிடத்தின் உத்தரவை அமைச்சர் காந்தி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும்,  திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் விஜய் குறித்து பேசுவதற்கு மேலிடம் தடை விதித்துள்ளமையை வெளிப்படையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post விஜய் குறித்து பேச திமுக தடை appeared first on Oruvan.com.

‘நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற 4 ஆண்டுகள்’ – இபிஎஸ் விமர்சனம்
“4 ஆண்டு கால திமுக ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என்றுதான் விமர்சிக்கின்றனர். இந்த ஆட்சியின் நான்கு ஆண்டுகளையும் செயலற்ற ஆண்டுகளாகவே அதிமுக உணர்கிறது.” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021 முதல் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி, நிதிப் பற்றாக்குறை, கடன் வாங்குவதில் முதலிடம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் கேந்திரமாக மாறிய தமிழ் நாடு, தினசரி கொலைகள் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

‘சிறு மழைக்கே பாதிப்பு’ – ஸ்டாலின் மாடல் ஆட்சியில், நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு இல்லாததால், திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை தாமதம் ஆகின்றன. உதாரணமாக, இந்த ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன என்றும், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் ஒரு சொட்டு நீர்கூட தேங்காமல் வடியும் என்றும், முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், நகராட்சித் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேட்டி அளித்தனர். ஆனால், 2021 மற்றும் 2022 ஆண்டில் பெய்த சிறு மழைக்கே சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதுதான் நிதர்சனமான உண்மை.

உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச் சாவடி முறைகேடுகள், மறு வாக்குப் பதிவு, அதிகாரிகள் மிரட்டப்படுதல் போன்றவை அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.

‘கவலைக்கிடமான நிதி நிலை’ தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மாநில அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது. கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் தாமதம். உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு ஆகியவை மாநில வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளன. உதாரணமாக, கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றம் சுமார் பத்து மாத காலம் சென்னை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியதை அனைவரும் அறிவார்கள். சென்னை மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மெட்ரோ திட்டங்கள் போன்றவை நிதி நெருக்கடியால் தடைபட்டன. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்று வாய்ஜாலம் பேசிய ஸ்டாலின், அதில் 50 சதவீதம்கூட கொடுக்க முடியாதபடி பல நிபந்தனைகளை விதித்தார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றது. தொடர் கொலைகள், சாதி மோதல்கள், பாலியல் வன்கொடுமைகள், தனியாக வசிக்கும் முதியோர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல், கொலை செய்யப்படுதல் போன்ற சட்ட விரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.காவல் துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று ஸ்டாலின் கூறினாலும், குற்றங்களைத் தடுப்பதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

போதைப் பொருள் புழக்கம் அதிகம்! பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத மாநிலமாக, நகரமாக மாற்றியது தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் சாதனை. கடந்த நான்கு ஆண்டுகளாக, போதைப் பொருள் புழக்கம் மற்றும் பயன்பாடு தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சென்னை, கோவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் மற்றும் கடத்தல் அதிக அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப் பொருள் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. இவைகளைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இந்த அரசு வாய்ஜாலம் காட்டினாலும், அனைத்தும் ஏட்டளவிலேயே உள்ளது.

‘அதிகரிக்கும் கள்ளச் சாராய மரணங்கள்’ கொலைகள் மற்றும் வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நான், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி இவற்றைப் பற்றி சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும் பலமுறை எடுத்துக் கூறியும், இந்த அரசிடம் கடுமையான, உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. குறிப்பாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச் சாராய மரணம் இரண்டு முறை நிகழ்ந்தேறியதுதான் ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை.

இந்த அரசின் மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளை, குறிப்பாக அமைச்சர் ஒருவரே அளித்த பேட்டிக்கு இதுவரை எந்தவிதமான மறுப்பையும் ஸ்டாலினால் அளிக்க முடியவில்லை. நான், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஸ்டாலின் மாடல் அரசின் தவறுகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியும், அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளக்கூடிய மனப் பக்குவம் இல்லாத நிலையில்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த நான்காண்டு கால ஆட்சியில், அதிமுக காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறிப்பாக, அத்திக்கடவு-அவினாசி திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, குடிமராமத்துத் திட்டம், விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேர மின் சப்ளை, 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியது, அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் உட்பட 17 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஆரம்பித்தது, சுமார் 50 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றியது, பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மெட்ரோ நகரங்களில் முதலிடமாக சென்னையை தொடர்ந்து தக்கவைத்தது என்று எங்களது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு இதுபோல் ஒரு சாதனையை குறிப்பிட்டுக் கூற இயலுமா?” என்று விமர்சித்துள்ளார்.

The post ‘நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற 4 ஆண்டுகள்’ – இபிஎஸ் விமர்சனம் appeared first on Oruvan.com.