தாரிக் ரஹ்மான் Archives - Oruvan.com

பங்களாதேஷ் முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது – தாரிக் ரஹ்மான் அதிரடி உரை
“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.”

– இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு தாரிக் ரஹ்மான் நேற்று நாடு திரும்பினார்.

டாக்கா விமான நிலையத்தில் லட்சக்கணக்கான பிஎன்பி தொண்டர்கள் திரண்டு வந்து, தாரிக் ரஹ்மானை வரவேற்றனர்.

அவரது மனைவி ஜூபைதா, மகள் ஜைமா ஆகியோரும் உடன் வந்தனர். குண்டு துளைக்காத பேருந்தில் தாரிக் ரஹ்மானும் குடும்பத்தினரும் டாக்காவில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், பூர்பாச்சல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தாரிக் ரஹ்மான்,

‘‘எனது நாட்டுக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. மக்கள் நீண்டகாலமாக விரும்பிய பாதுகாப்பான நாடாக பங்களாதேசை மாற்றுவதே அது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்த நாடு மலைகளில் வசிப்பவர்களுக்கும், சமவெளிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் மற்றம் கிறிஸ்தவர்களுக்கும் சொந்தமானது.” -என்று குறிப்பிட்டார்.

பங்களாதேஷில் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

பங்களாதேஷில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உள்ளது.

அங்கு பெப்ரவரி 12-ம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி , மாணவர் சங்கங்கள் உருவாக்கிய தேசிய மக்கள் கட்சி , அடிப்படைவாத கட்சியான ஜமாத் – இ – இஸ்லாமி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பரில் மனைவி, குழந்தையுடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறிய தாரிக் ரஷ்மான், சுமார் 17 ஆண்டுகள் அரசியல் துறவறம் பூண்டிருந்தார்.

தற்போது நாடு திரும்பியுள்ள அவர், வரும் பொதுத்தேர்தலில் பிஎன்பி கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பங்களாதேஷ் முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது – தாரிக் ரஹ்மான் அதிரடி உரை appeared first on Oruvan.com.

பங்ளாதேஷில் கையெறி குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம்
முன்னாள் பிரதமர் கலிடா சியா பேகத்தின் மகனும் தேசியவாதக் கட்சியின் தலைவருமான தாரிக் ரஹ்மான்  இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 25) காலை விமானத்தில் டாக்கா வந்திறங்கினார்.

அதற்கு முன்பாக நேற்று புதன்கிழமை (டிசம்பர் 24) இரவு தலைநகரின் மொக்ஹபசார் பகுதியில் உள்ள பாலத்திலிருந்து ஒரு கையெறி குண்டு அடையாளம் காணப்படாதவரால் வீசப்பட்டதென்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அந்த இடத்தில் ‘பங்ளாதேஷ் முக்திஜொத்தா சங்சத்’ என்ற 1971ஆம் ஆண்டு நடந்த பங்ளாதேஷ் விடுதலைப் போரட்ட வீரர்களின் மத்திய அலுவலகம் அமைந்துள்ளது.

பாலத்தின் கீழே உள்ள சாலையோரக் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த ஒரு தனியார் கடை ஊழியர், குண்டு வீசப்பட்டபோது படுகாயமடைந்தார். சியாம் என்ற பெயருடைய அந்த 20 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று அப்பகுதி காவல்துறை அதிகாரி முஹம்மது முஹியுடின் தெரிவித்தார்.

பங்ளாதேஷில் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இரண்டு முறை பிரதமராக இருந்த கலிடா சியாவின் 60 வயது மகன் தாரிக் ரஹ்மான் பிரதமர் பதவியை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று நம்பப்படுகிறது.

அவர் தேசியவாதக் கட்சியின் (BNP) தற்காலிகத் தலைவராகவும் இருக்கிறார். நாடுகடந்து 17 ஆண்டுகள் லண்டனில் வாழ்ந்தபிறகு கட்சியை வழிநடத்த அவர் தன் மனைவி, மகளுடன் பங்ளாதேஷ் திரும்பியுள்ளார்.

அவரை வரவேற்க மில்லியன் கணக்கில் ஆதரவாளர்களை கட்சி திரட்டி வருகிறது. திரு முஹம்மது யூனோஸ் தலைமையிலான பங்ளாதேஷின் தற்காலிக அரசாங்கம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது.

இதனிடையே பங்ளாதேஷ் தற்காலிக அரசாங்கத்தின் உள்துறை விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளர் குடா பக்ஸ் சௌத்ரி பதவி விலகியுள்ளார். அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் தலைவர் ஒஸ்மான ஹாடியின் மரண விசாரணை திருப்திகரமாக இல்லாத நிலையில் இந்த பதவி விலகல் இடம்பெற்றது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

The post பங்ளாதேஷில் கையெறி குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம் appeared first on Oruvan.com.