தற்கொலை Archives - Oruvan.com

இலங்கையில் தினமும் 8 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்
பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்மினி மாகொடரத்ன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே மருத்துவ நிபுணர் லக்மினி மாகொடரத்ன குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, எங்கள் குழந்தைகளின் தரவுகளைப் பார்த்தபோது, 22.4% குழந்தைகள் தனிமையால் பாதிக்கப்பட்டனர். 13-17 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11.9% பேர் ஏதோ ஒன்றைப் பற்றி கவலைப்பட்டு இரவில் தூங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சுமார் 18% பேரிடம் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட்டது. 7.5% பேருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை. 25% மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேச யாராவது இருப்பதாகக் கூறினர். அதாவது 75% மாணவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை.

எனவே இலங்கையில் இது நடக்குமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், பெரியவர்கள் பல்வேறு மன அழுத்தத்தில் இருக்க முடியும். பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் மன அழுத்தமும் இவர்களையும் பாதிக்கலாம்.

இதேவேளை, நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலைகள் பதிவாவதாக தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்தார்.

1996 ஆம் ஆண்டில், தற்கொலைகளின் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தோம், ஒரு இலட்சத்திற்கு 47 பேர். அந்த காலகட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் எடுக்கப்பட்ட முடிவுகளால் நாங்கள் மிகவும் வீழ்ச்சியடைந்தோம். இப்போது அது ஒரு லட்சத்திற்கு 15ஆக மாறியுள்ளது. வருடத்திற்கு 3,500 பேர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இது அதிகரிக்கவில்லை. நாளொன்றுக்கு சுமார் 8 தற்கொலைகள் நடக்கின்றன.

பிரபலமான மரணங்கள் மட்டுமே ஊடகங்களுக்குச் செல்கின்றன. இன்னும் பல தற்கொலைகள் உள்ளன. தற்கொலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், இந்த சர்ச்சைக்குரிய தற்கொலைகள் இப்போதெல்லாம் நடந்து வருகின்றன. ஆனால் ஊடகங்கள் கடந்த காலங்களைப் போல இதுபோன்ற விடயங்களைப் பெரிதாக காண்பிப்பதில்லை. அது ஒரு பெரிய முன்னேற்றம்.

The post இலங்கையில் தினமும் 8 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் appeared first on Oruvan.com.

கொழும்பில் பிரபல பாடசாலையில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் – மாணவி மாடியிலிருந்து வீழ்ந்து தற்கொலை
கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விக் கற்றுவந்த மாணவி ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாணவியின் தற்கொலைக்கு பின்னால் உள்ள விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

மாணவி கல்விக் கற்றுவந்த பாடசாலையில் கற்பித்த கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளார். இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த ஆசிரியரை பாதுகாத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மாணவிக்கு மன அழுத்தம் மற்றும் அவமானம் ஏற்பட்ட நிலையில் மாணவி விரக்தியடைந்த நிலையில் இருந்துள்ளார். பாடசாலை நிர்வாகம்  குறித்த ஆசிரியருக்கு துணை நின்றதால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்றும் விடுதலையாகியும் வந்துள்ளார்.

மாணவியை பெற்றோர் கொழும்பில் உள்ள வேறு ஒரு பிரபல மகளிர் பாடசாலைக்கு மாற்றியுள்ளனர். இந்த நிலையில் மாணவி பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் கற்கை நிலையத்தில் ஆசிரியராக இருந்தவர் மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியரின் நண்பராகும்.

தனது நண்பருக்கு மாணவி குறித்து தவறாக கூறியுள்ள விடுதலையாகி குறித்த ஆசிரியர், மாணவி குறித்து பொய்யான தகவல்களையும் தெரிவித்துள்ளார். குறித்த ஆசிரிய நண்பர் மாணவி தொடர்பில் ஏனைய மாணவர்களிடம் தவறாக கூறியுள்ளார். இதனால் மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் குறித்த மாணவி தாம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர். இதற்கு முழு பொறுப்பும் பாடசாலை நிர்வாகவே ஏற்க வேண்டும் என பெற்நோர் கூறுகின்றனர்.

மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோருகின்றனர்.

உடனடியாக பொலிஸார் மாணவியின் தற்கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோருகின்றனர்.

The post கொழும்பில் பிரபல பாடசாலையில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் – மாணவி மாடியிலிருந்து வீழ்ந்து தற்கொலை appeared first on Oruvan.com.

தாயை கொலை செய்த மகன் தற்கொலை
தனது தாயை கொலை செய்த மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொடகவெல பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடகவெல, பிசோகொட்டுவ பிரதேசத்தில் 82 வயதுடைய பெண் ஒருவர் அவரது மகனால் நேற்று ஞாயிறுக்கிழமை (15) அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

பின்னர், அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றதுடன், உடவலவ பிரதேசத்தில் குறித்த நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கல்பாய, பல்லேபெத்த பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவராவார். சம்பவம் தொடர்பில் கொடகவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தாயை கொலை செய்த மகன் தற்கொலை appeared first on Oruvan.com.