தயாசிறி ஜயசேகர Archives - Oruvan.com

அநுரவுக்கு ஏன் அதிக நிதி? தயாசிறி எழுப்பும் கேள்வி
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024 இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறு பாரியளவு நிதி ஒதுக்கீட்டுக்கான காரணத்தை ஜனாதிபதியும், அரசும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், “2024ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவுகள் 6.6 பில்லியன் ரூபாவாகும். அது 2025 இல் அநுரகுமார திஸாநாயக்கவின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தில் 2.9 பில்லியன் வரை குறைக்கப்பட்டது. அது தொடர்பில் அரசால் பாரிய பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அது 11.37 பில்லியனாக உயர்வடைந்துள்ளது.

2024 இல் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஒதுக்கப்பட்டிருந்த நிதியை விட இது 72 சதவீத அதிகரிப்பாகும். ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தமக்குக் குறிப்பிட்டளவு நிதி தேவை ஏற்படும் என்பதை இப்போதாவது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்து கொண்டிருப்பார் என நம்புகின்றோம்.

2024 இல் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடு 1.15 பில்லியனாகும். 2025 இல் இது 1.17 பில்லியனாக அதிகரிக்கப்பட்டது. 2026 இற்காக நிதி ஒதுக்கீடு 0.9 பில்லியனாக குறைவடைந்துள்ளது. அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆனால் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு ஓராண்டுகள் சுமார் 6 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதியின் பதில் என்ன? கடந்த காலங்களில் ஜனாதிபதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட போது அவற்றை கடுமையாக விமர்சித்த ஜே.வி.பி.யினர் இப்போதாவது யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். தமது சட்டை பைகளை நிரப்பிக் கொள்வதற்காக எந்தவொரு ஜனாதிபதியும் நிதியை ஒதுக்கிக்கொள்வதில்லை.

அது மாத்திரமின்றி கடந்த காலங்களில் நிதி அமைச்சு ஜனாதிபதியின் கீழிருப்பது முற்றிலும் தவறு என்றும் இவர்கள் கூறினர். ஆனால், இன்று என்ன நடந்திருக்கின்றது? பொருளாதாரம் தொடர்பில் நிபுணத்துவம் அற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது நிதி அமைச்சை தன்வசப்படுத்தி, தனக்கேற்றவாறு நிதி ஒதுக்கீடுகளை செய்து கொண்டிருக்கின்றார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியும், அரசும் நிச்சயம் பதிலளிக்க வேண்டும்” என்றார்.

The post அநுரவுக்கு ஏன் அதிக நிதி? தயாசிறி எழுப்பும் கேள்வி appeared first on Oruvan.com.

புதிய நாணயத்தாள்களை அரசாங்கம் அச்சிட்டதா?
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (21) சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

விரிவாக்கப்பட்ட பண விநியோகம் குறித்த உண்மைகளை முன்வைக்க இலங்கை மத்திய வங்கியை அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தமது கடிதத்தின் ஊடாக கோரியுள்ளார்.

அரசாங்கம் புதிய நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் அண்மையில் அறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தார்.

அதனை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் நிராகரித்திருந்தார்.

தற்போதைய காலகாட்டத்தில் எந்தவொரு நாணய அச்சிடலிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை எனவும், அதற்கான சட்டரீதியான அனுமதி அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டினால் விரிவாக்கப்பட்ட பண விநியோகம் மூலமே இந்த பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே அதன் உண்மைகளை இலங்கை மத்திய வங்கி அரசாங்க நிதி பற்றிய குழுவில் தௌிவுப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் மற்றும் நிதியமைச்சின் அனுமதியின்றி புதிய நாணயத்தை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டு இருக்குமாயின் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே இலங்கை மத்திய வங்கியினை அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post புதிய நாணயத்தாள்களை அரசாங்கம் அச்சிட்டதா? appeared first on Oruvan.com.

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், அரசாங்கம் வென்ற உள்ளூராட்சி சபைகளிலும் அதிகாரத்தை நிறுவ முடியும் – தயாசிறி ஜயசேகர
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் சபைகளை நிறுவுவதற்கு அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சபைகளின் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் பதவியைப் பற்றி சிந்திக்காமல், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர், அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லாத சபையாக பண்டுவஸ்நுவர பிரதேச சபை, எதிர்க்கட்சி அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் என்று கூறினார்.

அனைத்து சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் தங்கள் பதவிக் காலத்தில் எந்தவொரு மோசடி அல்லது ஊழலிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்

“பண்டுவஸ்நுவர பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 17 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. எதிர்க்கட்சிக்கு 21 இடங்கள் உள்ளன. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் இந்த சபையில் நாம் ஆட்சி அமைக்க முடியும்” என்றார்.

The post எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், அரசாங்கம் வென்ற உள்ளூராட்சி சபைகளிலும் அதிகாரத்தை நிறுவ முடியும் – தயாசிறி ஜயசேகர appeared first on Oruvan.com.