தமிழ் Archives - Oruvan.com

முதியவர்கள் தவறி விழுவதைத் தடுப்பது எப்படி? – ஓர் விழிப்புணர்வு
பொதுவாக எவர் வேண்டுமானாலும் தவறி விழுந்து காயமடையலாம். ஆனால், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இது மிக ஆபத்தான ஒன்றாக அமைகிறது. வயது முதிர்வினால் உடலில் ஏற்படும் தசை வலிமை குறைவு, சமநிலையைப் பேணுவதில் உள்ள சிரமம் மற்றும் கண்பார்வை அல்லது காது கேளாமை போன்ற குறைபாடுகளால் முதியவர்கள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறான வீழ்ச்சிகள் எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம் அல்லது நீண்ட காலக் கட்டில் வாசம் போன்ற பாரிய பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம்.

வீழ்ச்சிகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள்:

உடற்பயிற்சி: தினமும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது தசைகளை வலிமையாக்கும். இது நடக்கும்போது உடலின் சமநிலையைச் சரியாகப் பேண உதவும்.

பரிசோதனைகள்: கண்பார்வை மற்றும் காது கேட்கும் திறன் சரியாக உள்ளதா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் தரையில் உள்ள தடைகளை முதியவர்களால் இலகுவாகக் கண்டறிய முடியும்.

மருந்து ஆலோசனைகள்: சில மருந்துகள் தலைச்சுற்றல் அல்லது பலவீனத்தை ஏற்படுத்தலாம். எனவே, தாங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றி குடும்ப மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது பாதுகாப்பானது.

வீட்டைப் பாதுகாப்பாக மாற்றுதல்:

முதியவர்கள் வாழும் சூழலில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் விபத்துக்களை பெருமளவு குறைக்கலாம்.

நடக்கும் பாதையில் தேவையற்ற பொருட்களைக் குவித்து வைக்காமல் அகற்றுதல்.

வழுக்கும் தன்மையுள்ள தரை விரிப்புகள் (Rugs) அல்லது மிதியடிகளைத் தவிர்த்தல்.

குளியலறை மற்றும் படிக்கட்டுகளில் பிடித்துச் செல்வதற்கு ஏதுவாக கைப்பிடிகளைப் (Handrails) பொருத்துதல்.

வீடு முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களில் நடப்பதற்குப் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்தல்.

வீழ்ச்சி ஏற்பட்டால் என்ன செய்வது?

ஒருவேளை முதியவர் எவராவது தவறி விழுந்துவிட்டால், அவருக்குக் கடுமையான வலி, நடப்பதில் சிரமம், மயக்கம் அல்லது குழப்பமான நிலை இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து, மீண்டும் அது நடக்காமல் பார்த்துக் கொள்வது அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு மிக முக்கியமாகும்.

The post முதியவர்கள் தவறி விழுவதைத் தடுப்பது எப்படி? – ஓர் விழிப்புணர்வு appeared first on Oruvan.com.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் வெற்றிகளை பெறலாம் – நிசாம் காரியப்பர்
முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருப்பதானது தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகவே கருதுகிறோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு காணி சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பாரதூர தன்மைகள் மற்றும் அதனால் ஏற்படவுள்ள பாதக விளைவுகள் தொடர்பாக தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒற்றுமையுடன் குரல் கொடுத்ததன் விளைவாகவே குறித்த சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருக்கிறது. இது தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு கிடைத்திருக்கின்ற பாரிய வெற்றியாகும்.

மேலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்கள் எதிர்காலத்திலும் தங்களுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு ஒன்றாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது என்றும் நிசாம் காரியப்பர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

The post வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் வெற்றிகளை பெறலாம் – நிசாம் காரியப்பர் appeared first on Oruvan.com.

புத்தாண்டை முன்னிட்டு பயணிகளுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவை
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும்(12) விசேட பயணிகள் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, புத்தளம், தம்புள்ளை மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

காலி, மாத்தறை, பதுளை, தங்காலை, கதிர்காமம் ஆகிய பகுதிகளுக்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக மகும்புர, கடவத்தை, கடுவெல மற்றும் பஸ்டன் மாவத்தையை மையப்படுத்தி மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

The post புத்தாண்டை முன்னிட்டு பயணிகளுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவை appeared first on Oruvan.com.