தமிழ் முற்போக்கு கூட்டணி Archives - Oruvan.com

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி
இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய வீட்டுத் திட்டம், மலையக மக்களுக்குரிய உரிமைகள் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

மலையகச் சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என இதன்போது இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளார்.

The post இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி appeared first on Oruvan.com.

தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவோடு ஹல்முல்லயில் ஆட்சியமைத்தது என்.பி.பி
பதுளை, ஹல்துமுல்ல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தெரிவான இரு உறுப்பினர்கள் என்.பி.பிக்கு ஆதரவளித்தனர்.

ஹல்துமுல்ல பிரதேசசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 9 இடங்களைப் பெற்றிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 இடங்களும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இரு இடங்களும், பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இரு இடங்களும், பொதுஜன பெரமுனவுக்கு ஒரு இடமும் , ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஒரு இடமும் கிடைக்கப்பெற்றன.

இந்நிலையிலேயே வாக்கெடுப்பின்போது தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் இருவரும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளனர்.

இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

The post தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவோடு ஹல்முல்லயில் ஆட்சியமைத்தது என்.பி.பி appeared first on Oruvan.com.

மலையகத்தில் மாடி வீடா, கோடி வீடா?
மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்கான தமது கொள்கைத்திட்டம் என்னவென்பதை தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட இரண்டாம்வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்கள் எனும் அடையாளத்தை முதன்முதலில் ஆவணம்மூலம் கொண்டுவந்தது நாங்கள்தான். தோட்டத் தொழிலாளர்களை தொழிலாளர்களாக அல்லாமல் பங்காளிகளாக மாற்றுவதற்குரிய முன்மொழிவை நாம் முன்வைத்துள்ளோம். அதனை தற்போதைய அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ரணசிங்க பிரேமதாசவால் மலையகத்துக்கு ஒரு வீடேனும் கட்டப்படாமை தொடர்பில் அவரது மகன் சஜித் பிரேமதாச மன்னிப்பு கூறவேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி எம்.பியொருவர் குறிப்பிடுகின்றார். இது வேடிக்கையாக உள்ளது.

மலையக மக்களுக்கான தேசிய மக்கள் சக்தி அரசின் காணி கொள்கை என்ன? எத்தனை பேர்ச்சஸ் வழங்கப்படும்? வாழ்வாதாரத்துக்குரிய காணி எப்படி? அதேபோல பெருந்தோட்டப்பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் மாடிவீடா அல்லது கோடி வீடா என்பதை பற்றி அறிவியுங்கள். மலையகத்துக்காக தற்போதைய அரசாங்கம் எதையும் செய்யவில்லை.” -என்றார்.

The post மலையகத்தில் மாடி வீடா, கோடி வீடா? appeared first on Oruvan.com.