தமிழ் ஊடகவியலாளர் சங்கம் Archives - Oruvan.com

ஊடகத்துறை மீது தொடர்கின்ற அச்சுறுத்தலின் வெளிப்பாடே தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் – வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்
கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் ஊடகத்துறை மீது தொடரும் அச்சுறுத்தலின் வெளிப்பாடே என்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“போரின் போதும், போருக்குப் பின்னரான காலப் பகுதியிலும் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், கொலைகள் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதற்கு ஊடகவியலாளர் கடத்தப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கொல்லப்பட்டமை என்பவற்றுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாமையே காரணம்.

அதன் நீட்சியாக ஆயுத பலம், பண பலம், அரசியல் பலம் கொண்டவர்கள் மக்கள் நலன் சார்ந்து பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களையும், அவர்கள் மீதான அடக்குமுறைகளையும் தொடர்ந்தும் செய்த வண்ணமே உள்ளனர். அதனையே கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலும் எடுத்துக்காட்டுகின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு குறிப்பிட்ட சில மாதங்களுக்குள்ளேயே பகல் பொழுதில் பொதுமக்கள் செறித்த பகுதியில் ஊடகவியலாளரைக் கடத்த முற்பட்டதுடன், தாக்குதல் நடத்தப்பட்டமை ஊடகவியலாளர்களது பாதுகாப்பையும் கேள்விக்கு உட்பத்தியுள்ளதுடன், நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கோருகின்றது.” – என்றுள்ளது.

The post ஊடகத்துறை மீது தொடர்கின்ற அச்சுறுத்தலின் வெளிப்பாடே தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் – வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் appeared first on Oruvan.com.