தமிழக மீனவர்கள் Archives - Oruvan.com

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இலங்கைக்கு இந்தியா கண்டனம்
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு இந்திய மத்திய அரசு, இலங்கை அரசாங்கத்துக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டருந்த காரைக்கால் மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இதில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்திய மீனவர்கள் மீது தனது படை பலத்தை இலங்கை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

வாழ்வாதார பிரச்சினை என்பதால் மனிதாபிமான முறையில் மீனவர்கள் பிரச்சினையை கையாள வேண்டும் என்று இந்திய மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை கைது செய்த சம்பவத்தில் மீனவர்களில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன், மூவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மீனவர்களை, காங்கேசன் துறை பகுதிக்குச் சென்று இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து அவர்களது உடல்நலன் குறித்து விசாரித்துள்ளதாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்தியாவின் கடும் கண்டனதையும் தெரிவித்துள்ளனர்.

அதாவது, டில்லியில் இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்புவில் உள்ள தூதரகம் வாயிலாகவும் இந்தியா தனது கண்டனத்தை இலங்கையிடம் தெரிவித்துள்ளதாகவும் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

The post தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இலங்கைக்கு இந்தியா கண்டனம் appeared first on Oruvan.com.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கைது செய்த கடற்படையினர், குறித்த மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தி வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இதேவேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கருப்பு நத்தாராக மாறி விட்டதாக சோகத்துடன் கூறும் மீனவர்களின் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (23) திங்கட்கிழமை 400க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் இரவு சுமார் 12:30 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பூண்டி ராஜ் மற்றும் ஆரோன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசை படகையும் அதிலிருந்து 17 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான எட்டுப் பேர் உள்ளடங்குகின்றனர். இதனால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் வீட்டில் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கவும், நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக நேற்று (23) மாலை மூன்று மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை இரவு 12 மணிக்கு இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இதனால் நாளை நத்தார் பண்டிகை எங்களுக்கு கருப்பு நத்தாராக மாறிவிட்டதாகவும் உடனடியாக மீனவர்களை விடுதலை செய்து தாயகம் அனுப்பி வைக்குமாறு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

The post இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது appeared first on Oruvan.com.