தசுன் Archives - Oruvan.com

ICC தர வரிசையில் தசுன் மற்றும் நுவான் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய தரவரிசைப் புதுப்பிப்பில், தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஆகியோர் டி20 தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, தனது T20 வாழ்நாள் சிறந்த தரவரிசையைப் பதிவு செய்து மூன்று இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார். வனிந்து ஹசரங்க 6வது இடத்தில் தனது நிலையை தக்கவைத்து உள்ளார். மஹேஷ் தீக்ஷன, முன்பிருந்த 9வது இடத்திலிருந்து இரண்டு இடங்கள் சரிந்து 11வது இடத்திற்கு மாறியுள்ளார்.

கடந்த தொடரில் சிறப்பாக விளையாடிய முன்னாள் தலைவர் தசுன் ஷானக, துடுப்பாட்ட தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 75வது இடத்திற்கு சென்றுள்ளார். சகலதுறை வீரர் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 20வது இடத்தில் உள்ளார்.

இலங்கைக்கு எதிரான அண்மைய T20 தொடரில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஷ் வீரர்களும் தரவரிசையில் கண்ணியமான இடங்களைப் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளராக முஸ்தபிசுர் ரஹ்மான், 17 இடங்கள் முன்னேறி 9வது இடத்தையும், மஹ்தி ஹசன், 9 இடங்கள் முன்னேறி 16வது இடத்தையும் பிடித்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் டன்சித் ஹசன், 18 இடங்கள் முன்னேறி 37வது இடத்துக்கும், பர்வேஸ் ஹொசைன் எமோன், 22 இடங்கள் முன்னேறி 63வது இடத்துக்கும் சென்றுள்ளார்.

The post ICC தர வரிசையில் தசுன் மற்றும் நுவான் முன்னேற்றம் appeared first on Oruvan.com.