ட்ரம்ப் Archives - Oruvan.com

முடிவுக்கு வருகிறது போர்? ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பு
ஈரானுடனான போர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை அவரது உரை இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த மோதலில் அமெரிக்கப் படையினருக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து அவர் கருத்து வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் அமெரிக்காவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ட்ரம்பின் உரை இடம்பெறுகின்றது.

The post முடிவுக்கு வருகிறது போர்? ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

மத்திய கிழக்கில் 10,000 படையினரை களமிறக்கும் ட்ரம்ப்?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை களமிறக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் நாட்டுடன் சமாதானப் பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனக் கூறப்படும் சூழ்நிலையிலேயே இவ்வாறான ராணுவ நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள 5,000 வீரர்களுடன், தற்போது புதிதாகச் செல்லவிருக்கும் படையில் காலாட்படை மற்றும் கவச வாகனங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது.

இவர்கள் எங்கு நிலைகொள்வார்கள் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்தச் சாத்தியமான இராணுவ நகர்வு குறித்து வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனிடமிருந்து முறையான விளக்கத்தைப் பெற ஊடகங்கள் முயற்சி செய்து வருகின்றன.

அதேவேளை, ஈரானில் தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகிவருகின்றது என்ற தகவலும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

The post மத்திய கிழக்கில் 10,000 படையினரை களமிறக்கும் ட்ரம்ப்? appeared first on Oruvan.com.

ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த தாய்லாந்து
கம்போடியாவுடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை தாய்லாந்து நிறுத்தி வைத்துள்ளது.

எல்லைப் பிரச்சினை காரணமாக தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஜூலையில் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் 30 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே, ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் முதல்நிலை போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. மலேசியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் அவர் முன்னிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்து போட்டனர்.

இந்நிலையில் இரு நாட்டு எல்லையில் சி சா கெட் மாகாணத்தில் புதிதாக வைக்கப்பட்ட கண்ணி வெடி வெடித்ததில், ரோந்துப் பணியில் ஈடுபட்ட தாய்லாந்து இராணுவ வீரர்கள் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதன் பின்னணியில் கம்போடியா இருக்கும் என்ற சந்தேகம் தாய்லாந்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மலேசியாவில், ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்ததத்தை நிறுத்தி வைப்பதாக தாய்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் கூறியதாவது: தெளிவான முடிவு ஏற்படும் வரை அமைதிக்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறோம்.

நாங்கள் எதிர்பார்த்தபடி விரோதம் குறையவில்லை என்பது தற்போது நடந்த நிகழ்வுகள் காட்டுகிறது. எனவே இனியும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

The post ட்ரம்ப் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த தாய்லாந்து appeared first on Oruvan.com.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்
தென் ஆப்​பிரிக்​கா​வில் இம்​மாதம் நடை​பெறு​வுள்ள ஜி20 உச்சி மாநாட்​டில் பங்​கேற்​க​ மாட்​டேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.

அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணத்​தில் உள்ள மியாமி நகரில் நடை​பெறற அமெரிக்க வர்த்தக கூட்​டமைப்பு கூட்​டத்​தில் ட்ரம்ப் பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

தென் ஆப்​பிரிக்​கா​வில் ஜி20 மாநாடு நடை​பெறவுள்​ளது. இந்த அமைப்​பில் தென் ஆப்​பிரிக்கா இருக்​கக் கூடாது. ஏனென்​றால் அங்கு நடை​பெறும் விஷ​யங்​கள் மிக மோச​மான​தாக உள்​ளன. அதனால், நான் அங்கு செல்​ல​வில்​லை. ஜி20 அமைப்​புக்கு அடுத்​த​தாக அமெரிக்கா தலைமை தாங்​கு​கிறது. இந்த கூட்​டத்தை மியாமி​யில் உள்ள எனது கோல்ப் கிளப்​பில் நடத்த முன்பு திட்​டமிட்​டிருந்​தேன்.

போரை நிறுத்​தினேன்: இந்​தி​யா​வும் – பாகிஸ்​தானும் கடந்த மே மாதம் போரில் ஈடு​பட்​ட​போது, 8 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. இரு நாடு​களும் தொடர்ந்து போரிட்​டால், உங்​களு​டன் மேற்​கொள்​ளும் வர்த்​தகத்தை நிறுத்​து​வேன் என கூறினேன். மறு​நாளே இரு நாடு​களும் போரை நிறுத்​திக் கொண்​டன. இதெற்​கெல்​லாம் காரணம் வரி தான். இல்​லை​யென்​றால் போர் நிறுத்​தம் ஏற்​பட்​டிருக்​காது. 8 மாதங்​களில் நான் 8 போர்​களை நிறுத்​தி​யுள்​ளேன். இவ்​வாறு திபர் ட்ரம்ப் கூறினார்.

The post தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் appeared first on Oruvan.com.

ரஷ்யா, உக்ரைன் ஜனாதிபதிகள் நேரடி சந்திப்பு: ட்ரம்ப் வியூகம்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்த வைப்பதற்குரிய முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. போரை நிறுத்தும் முயற்சியின் மற்றுமொரு அங்கமாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாமல் உக்ரைன் – ரஷியா போர் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த போர் உக்ரைனில் மிகப்பெரிய அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது.

ரஷியாவுக்கு எதிரான பொருளாதர தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ரஷியாவுக்கு சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.

போர் நிறுத்தம் தொடர்பாக பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன.

குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்-ரஷ்ய ஜனாதிபதி புதின் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்கா சென்று நேரில் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. புதின் போரை தேவையில்லாமல் நீட்டித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ள நிலையில் முன்னதாக புதின், டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும், ரஷ்ய ஜனாதிபதி புதினும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

The post ரஷ்யா, உக்ரைன் ஜனாதிபதிகள் நேரடி சந்திப்பு: ட்ரம்ப் வியூகம் appeared first on Oruvan.com.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணக்கம் – ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதை இடை நிறுத்துவதற்கான இணக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வௌியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா செலுத்த முயற்சிப்பதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமது கொள்முதல்களை “குறுகிய காலத்திற்குள்” நிறுத்தும் என்று மோடியிடமிருந்து உறுதிமொழிகளைப் பெற்றதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுகின்றமை ரஷ்யாவுக்கு உக்ரைன் உடனான போரை தொடருவதற்கு வழி வகுத்துள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வந்தார்.

அதனால் அதனை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தம் வழங்கினார்

இதனால் அமெரிக்க ஜனாதிபதி தமது வர்த்தகப் போரில் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டார்.

எனினும் இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியினை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார்.

இதனால் நீண்ட நாட்களாக அமெரிக்கா – இந்தியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.

The post ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணக்கம் – ட்ரம்ப் வெளியிட்ட தகவல் appeared first on Oruvan.com.

“நீங்கள் ஒரு அழகான பெண்” – இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து ட்ரம்ப் கூறியதென்ன?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய டிரம்ப், “நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று தெரிவித்தார்.

மேலும், இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் ட்ரம்ப் கிண்டலாக தெரிவித்தார்.

ட்ரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

The post “நீங்கள் ஒரு அழகான பெண்” – இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து ட்ரம்ப் கூறியதென்ன? appeared first on Oruvan.com.

ஐ.நாவில் மூன்று முறை நாச வேலை : ட்ரம்ப் கொந்தளிப்பு
ஐ.நா.வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘ ஐ.நா.சபையில் ஒரு உண்மையான அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நாசவேலை நடந்தது.

முதலாவதாக உரையாற்ற மாடிக்கு செல்லும் எஸ்கலேட்டர் செயலிழந்துவிட்டது. மெலனியாவும் நானும் படிகளின் கூர்மையான விளிம்புகளில் முன்னோக்கி விழவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டோம். இல்லையென்றால் இது ஒரு பேரழிவாக இருந்திருக்கும். இது முற்றிலும் நாசவேலை. எஸ்கலேட்டரை அணைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.” எனவும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.

பின்னர், உலகம் முழுவதும் லைவில் கோடிக்கணக்கான மக்கள் மற்றும் அரங்கில் முக்கியமான தலைவர்கள் இருந்த கூட்டத்தின் முன் நான் நின்றபோது, ​​எனது டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை. அது கடுமையான இருட்டாக இருந்தது.

நான் டெலிப்ராம்ப்டர் இல்லாமல் ஒரு உரையை நிகழ்த்தத் தொடங்கினேன். நல்ல செய்தி என்னவென்றால், உரைக்கு அருமையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. நான் செய்ததை மிகச் சிலரே செய்திருக்க முடியும் என்பதை அவர்கள் பாராட்டியிருக்கலாம். மூன்றாவதாக, உரையை நிகழ்த்திய பிறகு, உரை நிகழ்த்தப்பட்ட ஆடிட்டோரியத்தில் ஒலி முற்றிலுமாக அணைந்துவிட்டது.

உரையின் முடிவில் நான் முதலில் பார்த்த நபர் மெலனியா, அவர் முன்னால் அமர்ந்திருந்தார். ‘நான் எப்படி பேசினேன்?’ என்று கேட்டேன், அவள், ‘நீங்கள் சொன்ன ஒரு வார்த்தையையும் என்னால் கேட்க முடியவில்லை’ என்றாள்.

இது தற்செயல் நிகழ்வு அல்ல. இது ஐ.நா.வில் மூன்று முறை நாசவேலை. அவர்கள் தங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையால் வேலையைச் செய்ய முடியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. எஸ்கலேட்டரில் உள்ள அவசர நிறுத்த பொத்தானை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். இது குறித்து ரகசிய பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

The post ஐ.நாவில் மூன்று முறை நாச வேலை : ட்ரம்ப் கொந்தளிப்பு appeared first on Oruvan.com.

ட்ரம்ப் அழைப்பு – வொஷிங்டன் விரையும் ஜெலன்ஸ்கி
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது புடின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.

பின்னர் பேசிய ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என தெரிவித்தார். மேலும், “ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளும் இதில் சிறிது தலையிட வேண்டும். ஆனால் முக்கிய பொறுப்பு ஜெலென்ஸ்கியிடம் உள்ளது” என்று கூறினார்.

புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஜெலன்ஸ்கி உடன் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். மேலும் ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பு தலைவர்களுடனும் அவர் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் திங்கள்கிழமை, ட்ரம்ப்-ஐ நேரில் சந்திக்க ஜெலன்ஸ்கி அமெரிக்கா செல்ல உள்ளார். ட்ரம்ப் உடன் நீண்ட, பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, திங்கள்லன்று ட்ரம்ப்பை வொஷிங்டனில் சந்திக்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

The post ட்ரம்ப் அழைப்பு – வொஷிங்டன் விரையும் ஜெலன்ஸ்கி appeared first on Oruvan.com.

ட்ரம்ப், புடின் நாளை சந்திப்பு: போர் முடிவுக்கு வருமா?
அமெரிக்காவின் அலாஸ்காவில் நாளை நடக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனான சந்திப்பில், ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை அடைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்தார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 2022ல் போர் ஆரம்பமானது.

இந்த போரை நிறுத்துவது குறித்து பேச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அழைத்துள்ளார். இந்த உயர்மட்ட சந்திப்பு நாளை நடக்கிறது.

இந்நிலையில், போர் குறித்து ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்களுடன் டிரம்ப் நேற்று ஒன்லைன் மூலமாக ஆலோசித்தார்.

இந்த கூட்டம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் கூறுகையில், “ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அலாஸ்காவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் உக்ரைன், ரஷ்யா இடையே போர் நிறுத்தத்தை அடைய விரும்புவதாக டிரம்ப் மிகவும் தெளிவாக தெரிவித்தார்.

“இதை தொடர்ந்து, டிரம்ப், புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோரை உள்ளடக்கிய முத்தரப்பு கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது,” என்றார்.

அதேவேளை, உக்ரைனில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து செயற்பட தயார் என ஆஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்துள்ளது.

அத்துடன், உக்ரைன்மீதான சட்டவிரோத போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடமும் வலியுறுத்தியுள்ளது.

இப்போரை அடிப்படையாகக்கொண்டு ரஷ்ய படைகள் மற்றும் போருக்கு பங்களிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியாவால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

The post ட்ரம்ப், புடின் நாளை சந்திப்பு: போர் முடிவுக்கு வருமா? appeared first on Oruvan.com.