டொனால்ட் ட்ரம்ப் Archives - Oruvan.com

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானால் பாகிஸ்தான் செல்வேன் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், தான் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது நேர்மறையான திசையில் நகர்வதாகக் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் சிறப்பானது எனப் பாராட்டிய ட்ரம்ப், ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் இஸ்லாமாபாத் செல்லத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.

இறுதியாக 2006ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் (George W. Bush) பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் உறுதியானால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் திகழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானால் பாகிஸ்தான் செல்வேன் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு appeared first on Oruvan.com.

இன்று வின்ஸ்டன் சர்ச்சில் உயிரோடு இருந்தால் ஈரானை எப்படி கையாளுவார்?
இன்றைய உலக அரசியலில் ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இன்று உயிருடன் இருந்தால் இந்தச் சிக்கலை எப்படி கையாண்டிருப்பார் என்பது குறித்து ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பார்வை இங்கே தரப்பட்டுள்ளது.

சர்ச்சில் ஏன் இங்கே பேசப்படுகிறார்?

அமெரிக்காவின் முன்னாள் தலைவர்கள், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் சர்ச்சிலின் துணிச்சலான போக்கைத் தற்போதைய தலைவர்கள் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கடி கூறுகின்றனர். சர்ச்சில் ஒரு போர்வீரராகவும், தைரியமான முடிவுகளை எடுப்பவராகவும் பார்க்கப்படுவதே இதற்கு காரணம்.

சர்ச்சிலின் உண்மையான குணம் என்ன?

வரலாற்றுப் பேராசிரியர்களின் கருத்துப்படி, சர்ச்சில் வெறும் சண்டையை மட்டும் விரும்பியவர் அல்ல. அவரது அணுகுமுறை மூன்று முக்கிய தூண்களைக் கொண்டது:

பலம் (Strength): எதிரிகளை எதிர்கொள்ள இராணுவ பலம் அவசியம் என்று நம்பினார்.

ராஜதந்திரம் (Diplomacy): போரை விட பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணவே முதலில் முயன்றார்.

கூட்டணி (Alliances): குறிப்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதையே அவர் முக்கியமாகக் கருதினார்.

ஈரானுடனான சர்ச்சிலின் கசப்பான வரலாறு

1953 ஆம் ஆண்டு ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முகமது மொசாடிக் என்பவரைப் பதவியிலிருந்து நீக்க பிரித்தானியாவும் அமெரிக்காவும் இணைந்து ஒரு இரகசிய சதியை (Coup) செய்தன. இதற்கு சர்ச்சில் முழு ஆதரவு வழங்கினார்.

ஆனால், அன்று சர்ச்சில் செய்த அந்தத் தலையீடுதான் இன்றுவரை ஈரானிய மக்கள் மேற்கத்திய நாடுகளைப் பகை உணர்வுடன் பார்க்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்பது ஒரு வரலாற்று முரண்பாடாகும்.

இன்று சர்ச்சில் இருந்தால் என்ன செய்வார்?

அவர் இன்று இருந்தால் ஒருவேளை பின்வருவனவற்றைச் செய்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்:

ஈரானின் தற்போதைய ஆட்சியாளர்களை அவர் சந்தேகத்துடனேயே பார்த்திருப்பார்.

ஆனாலும், போர் என்பது எப்போதுமே நாம் நினைக்கும் பாதையில் செல்லாது என்பதை அவர் அனுபவ ரீதியாக அறிந்தவர். போர் ஒருமுறை தொடங்கிவிட்டால், அது யாராலும் கட்டுப்படுத்த முடியாத விபரீதங்களுக்கு இட்டுச்செல்லும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

எனவே, பலத்தைக் காட்டிக்கொண்டே ஈரானுடன் ஒரு நியாயமான உடன்படிக்கையை ஏற்படுத்தவே அவர் முயன்றிருப்பார்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது

சர்ச்சிலை ஒரு “போர் விரும்பி”யாக மட்டும் பார்ப்பது தவறு. அவர் ஒரு மிகச்சிறந்த தந்திரசாலி. இன்றைய சூழலில் அவர் இருந்தால், ஈரானின் கடந்த கால வலிகளைப் புரிந்துகொண்டு, அதேசமயம் உலக அமைதியைக் காக்க பேச்சுவார்த்தை மேசைக்கே முன்னுரிமை அளித்திருப்பார்.

The post இன்று வின்ஸ்டன் சர்ச்சில் உயிரோடு இருந்தால் ஈரானை எப்படி கையாளுவார்? appeared first on Oruvan.com.

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்து
சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வரி விதிப்பு கொள்கைகளால் உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.

குறிப்பாக ஏற்றுமதியை அதிகம் நம்பி இருக்கும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கான தங்கள் ஏற்றுமதி குறையுமானால் அதை ஈடுகட்டுவதற்கு ஏற்ப, வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் ஆராய்ந்து வருகின்றன.

ஐரோப்பிய யூனியனில் இணையாத பிரித்தானியா, இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கடந்த ஜூலை 24ஆம் திகதி கையெழுத்திட்டது.

இந்நிலையில், சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானியா​டன் பிரதமர் கீர் ஸ்டார்​மர், சீனாவுடன் பல்வேறு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளார்.

இதனை அமெரிக்கா ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளடன், சீனாவுடனான வர்த்தக உறவு பிரித்தானியாவுக்கு ஆபத்தானமாக மாறும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

The post சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்து appeared first on Oruvan.com.

டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலை இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அமைதி வாரியத்தில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. சீனா எப்போதுமே உண்மையான பலதரப்பு வாதத்தைப் பின்பற்றுகிறது.

சர்வதேச சூழல் எவ்வாறு மாறினாலும், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு, சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு, ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், அந்த வாரியத்தில் இணையப் போவதில்லை என்ற முடிவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் சீனா அறிவித்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவு, ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

The post டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு appeared first on Oruvan.com.

ஆறு நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 6 நாடுகளைச் சேர்த்துள்ளார்.

இதன்படி பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வொஷிங்டனில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேசிய பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து மற்றுமொருவர் படுகாயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குடியேற்றக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் நோக்கில் ட்ரம்ப் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

“வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்” மற்றும் ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

நேற்று (16) கையெழுத்திடப்பட்ட புதிய பிரகடனத்தின் மூலம், முழுமையான அல்லது பகுதியளவு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் 19 இலிருந்து 39 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

The post ஆறு நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை appeared first on Oruvan.com.

வெள்ளியை அடகு வைக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் போலவே வெள்ளியையும் அடகு வைத்து மக்கள் கடனாக பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியர்கள் வெள்ளியை அடமானமாக வைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற முடியும்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு சிறய மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

The post வெள்ளியை அடகு வைக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Oruvan.com.

எனக்கு நோபல் பரிசு கிடைக்காவிடின் அது அமெரிக்காவுக்கு அவமானம்
அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப்,

“எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத யாரோ ஒருவருக்கு அதை கொடுப்பார்கள். அமைதிக்கான நோபல் விருது எனக்கு தரப்படாவிட்டால் அது நம் நாட்டுக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும். எனக்கு அது வேண்டாம், நாடு அதைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம் நாட்டுக்கு அது கிடைக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.

யுத்தங்கள் எதுவும் முடியவே முடியாது என்று பலரும் சொன்னார்கள். 31 ஆண்டுகள் வரை சில போர்கள் நீடித்தன. ஒரு போர் 36 ஆண்டுகள் நீடித்தது. ஆனால் நான் ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். அவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியாவனன்” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வரும் அக்டோபர் 10ஆம் திகதி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் யார் யாருக்கு வழங்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில் ட்ரம்பின் இந்த பேச்சு கவனிக்கத்தக்கது.

The post எனக்கு நோபல் பரிசு கிடைக்காவிடின் அது அமெரிக்காவுக்கு அவமானம் appeared first on Oruvan.com.

வெள்ளை மாளிகையில் உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (04) வொஷிங்டனின் உயர்மட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

இந்தச் சந்திப்பு, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முதலீடுகள் குறித்து கவனம் செலுத்தியது.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எனினும், ஒரு காலத்தில் ட்ரம்பின் நெருங்கிய தொழில்துறை நண்பர்களில் ஒருவரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க் இந்த நிகழ்வில் பங்கெடுக்கவில்லை.

விண்வெளிக் கொள்கை மற்றும் அரசாங்க ஒப்பந்தங்கள் தொடர்பான மோதல்களைத் தொடர்ந்து அண்மைய மாதங்களில் அவர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து தன்னைத்தானே ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகையின் புதிய செயற்கை நுண்ணறிவு கல்வி பணிக்குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் தலைமை தாங்கினார் மற்றும் சில தொழில்நுட்பத் தலைவர்கள் பங்கேற்றனர்.

The post வெள்ளை மாளிகையில் உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து appeared first on Oruvan.com.

“பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது” – டொனால்ட் ட்ரம்ப்
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன” இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் மனைவி உஷாவும் நானும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமீப நாட்களாக, இந்த நாட்டின் அழகையும் அதன் மக்களையும் கண்டு நாங்கள் வியந்து போயுள்ளோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கும் வேளையில், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 27 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசி உள்ளார். இது தொடர்பாக அனைத்து அடிப்படை பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு படையினருடன் முக்கிய கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகர் சென்றுள்ளார்.

The post “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது” – டொனால்ட் ட்ரம்ப் appeared first on Oruvan.com.

அமெரிக்க எல்லைகள் பாதுகாக்கப்படும் – டொனால்ட் ட்ரம்ப் உறுதி
அமெரிக்காவின் எல்லைகள் பாதுகாக்கப்படுமெனவும், அனைத்து எல்லை அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ நாங்கள் எங்கள் செல்வத்தை மீட்டெடுக்கப் போகின்றோம். அமெரிக்க மண்ணில் செயல்படும் ஒவ்வொரு சட்டவிரோத அன்னிய கும்பல் மற்றும் புலம்பெயர்ந்த குற்றவாளிகளையும் வெளியேற்றவுள்ளோம்.

மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கான முதல் படியாக நாங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடைந்தோம். இந்த ஒப்பந்தம் நவம்பரில் நாங்கள் பெற்ற வரலாற்று வெற்றியின் விளைவாக மட்டுமே நடந்திருக்க முடியும். பிணைக்கைதிகள் 3 பேர் இப்போது விடுவிக்கப்பட்டனர். முதலில், நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் காசா போர் நடந்திருக்காது.

நமது நிர்வாகம் மத்திய கிழக்கில் மூன்று மாதங்களுக்குள் இவை அனைத்தையும் சாதித்துள்ளது. ஜனாதிபதியாக இல்லாமல், நான்கு ஆண்டுகளில், பைடன் ஜனாதிபதியாக இருந்து சாதித்ததை விட அதிகமாக நாங்கள் சாதித்துள்ளோம். நான் உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். மத்திய கிழக்கில் குழப்பத்தை நிறுத்துவேன், 3வது உலகப் போர் நடக்காமல் தடுப்பேன். இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், கடந்த நவம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் ஜனநாயக கட்சியின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை ஜனாதிபதியான கமலா ஹாரிசை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க எல்லைகள் பாதுகாக்கப்படும் – டொனால்ட் ட்ரம்ப் உறுதி appeared first on Oruvan.com.