டொனால்ட் டிரம்ப் Archives - Oruvan.com

அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை
பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், அதிகாரம் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் மறைக்கலாம் என்று நினைக்கும் ஒரு கும்பலின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவணங்கள் தான் இன்றைய உலகையே அதிரச் செய்து கொண்டிருக்கும் “எப்ஸ்டீன் கோப்புகள்”.

ஒரு சாதாரணக் கணித ஆசிரியராகத் தொடங்கி, உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரச வம்சத்தினரைத் தனது விரல் நுனியில் ஆட்டிப்படைத்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் மர்ம மனிதனின் பின்னணி என்ன?

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறிக்க வைத்தது முதல், அமெரிக்காவின் முன்னாள், இன்னாள் அதிபர்கள் வரை பலரது பெயர்களைப் பதற வைத்துக் கொண்டிருக்கும் அந்த 30 லட்சம் பக்கங்கள் சொல்லும் ரகசியங்கள் என்ன? சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திப் பிஞ்சுயிர்களைச் சிதைத்த அந்தப் ‘பீடோபைல் தீவு’ (Pedophile Island) கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் செய்த அநீதிகளையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும் தோலுரித்துக் காட்டுகிறது ஆதவன் செய்திப் பிரிவின் இந்தச் சிறப்புப் பதிவு

தவறு யார் செய்தாலும் தண்டிக்கும் பிரித்தானியா! நூற்றாண்டு காலப் பாரம்பரியமும், கண்ணியமும் கொண்ட பிரித்தானிய அரச குடும்பத்தில், ஒரு தனி நபர் செய்த தவறால் இன்று அந்தப் பெயருக்கே ஒரு கறை படிந்திருக்கிறது! அந்த வம்சத்தின் ஒரு வாரிசு, ஒரு தகாத ஒருவரோடு நட்பு வைத்ததால், இன்று அந்தப் பரம்பரையின் கௌரவமான பொறுப்புகளில் இருந்தே அவர் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இதற்கு ஒரே ஒரு பெயர்தான் காரணம்… அது ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் சர்ச்சைக்குரிய நபர்!

டிசம்பர் 2010-ல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் இந்த கொடூரன் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உலகையே அதிர வைத்தது. 2019-ல் பிபிசி நேர்காணலில், ‘அந்த நட்பை முறிக்கத்தான் நான் அங்கு சென்றேன்’ என்று ஆண்ட்ரூ தெரிவித்த போதிலும், 2011-ன் ரகசிய மின்னஞ்சல்கள் அவர் சொன்னது பொய் என்பதை நிரூபித்தன!

விளைவு? தவறு செய்தவர் இளவரசராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்தது! 2025-ல் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ஒரு சாம்ராஜ்யத்தின் கிரீடத்தையே குழிதோண்டிப் புதைத்தது இந்த எப்ஸ்டீன் சிஸ்டம்!”

ஆசிரியர் முதல் கோடீஸ்வரன் வரை: அந்த மர்ம வளர்ச்சி

“இன்று நாம் பார்க்கப்போவது ஒரு தனிமனிதனைப் பற்றிய கதையல்ல… அதிகாரத்தின் இருண்ட பக்கம், செல்வம் இருந்தால் எதையும் மறைக்கலாம் என்று நினைத்தவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்த ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ பற்றிய ஒரு அலசல்!

1970-களில் ஒரு சாதாரணக் கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய எப்ஸ்டீன், தனது தந்திரத்தால் வால் ஸ்ட்ரீட் வங்கியாளர்களை வளைத்துப் போட்டார். ஒரு மாணவனின் தந்தை மூலம் ‘பியர் ஸ்டியர்ன்ஸ்’ வங்கிக்குள் நுழைந்த எப்ஸ்டீன், நான்கே ஆண்டுகளில் பங்குதாரராக உயர்ந்தான்! 1982-ல் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, 1 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்தார். அதன் பிறகு அவர் சேர்த்த செல்வம், அவனது காமவெறிக்கும் அதிகார ஆட்டத்திற்கும் எரிபொருளானது!

30 லட்சம் பக்கங்கள்… நடுங்கும் உலகத் தலைவர்கள்!

“ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த ஆவணங்கள் உலகையே உலுக்கி வருகின்றன. சுமார் 30 லட்சம் பக்கங்கள், 2,000 வீடியோக்கள், 1.8 லட்சம் படங்கள்! இதில் பில் கிளிண்டன் முதல் டொனால்ட் டிரம்ப் வரை, பில் கேட்ஸ் முதல் எலான் மஸ்க் வரை எனப் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிபடுகின்றன.

எலான் மஸ்க் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் டிரம்ப் பெயர் இருப்பதைப் பதிவிட்டு விட்டு பின் அதை நீக்கியது பெரும் சர்ச்சையானது. 2002-லேயே டிரம்ப், ‘ஜெப் ஒரு அருமையான மனிதர், என்னைப் போலவே அவருக்கும் இளம் பெண்களைப் பிடிக்கும்’ என்று புகழ்ந்து தள்ளினார். ஆனால், விவகாரம் முற்றியவுடன், ‘அவர் என் கிளப் பெண்களிடம் தவறாக நடந்ததால் விரட்டிவிட்டேன்’ என்று மாற்றி பேசினார். இதற்கிடையே, இந்தியப் பிரதமர் மோடி, அம்பானி போன்றோரின் பெயர்களும் மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளதாகக் கசிந்த செய்தியை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எது எப்படியோ, இந்த ஆவணங்கள் அதிகார வர்க்கத்தின் உறக்கத்தைக் கலைத்துள்ளன என்பதுதான் நிதர்சனம்!”

இதனிடையே, ‘இலங்கை’ என்ற பெயர் 188 இடங்களில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அதிகாரத்தின் பலமும்… ‘வசதியான’ சிறைவாசமும்

“2003-லேயே பத்திரிகையாளர் விக்கி வார்டு இவனது மர்மங்களைக் கண்டுபிடித்தார். 1996-ல் மரியா ஃபார்மர் என்ற பெண்ணும் அவரது 14 வயது தங்கையும் பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்த முயன்றார். ஆனால், எப்ஸ்டீன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தச் செய்தியையே நசுக்கியுள்ளார்!

2005-ல் 14 வயது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் புகார் அளித்தும், ‘நூற்றாண்டின் மிகப்பெரிய ரகசிய ஒப்பந்தம்’ மூலம் இவருக்கு வெறும் 13 மாதங்கள் மட்டும் சிறைத் தண்டனை கிடைத்தது. அதுவும் எப்படி? வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தனது அலுவலகத்திற்குச் சென்று வர ‘பணி நிமித்தமான விடுப்பு’ வழங்கப்பட்டது! இதுதான் அதிகாரத்தின் பலம்! இதுதான் அநீதியின் உச்சம்

மர்மமான மரணம்: தற்கொலையா? கொலையா?

“பாதிக்கப்பட்ட வர்ஜீனியா ஜூஃப்ரேயின் நீண்ட சட்டப் போராட்டத்தால், நீதிபதி லோரெட்டா பிரெஸ்கா இந்த ரகசியங்களை வெளியிட உத்தரவிட்டார். ஆனால், 2019-ல் மீண்டும் கைதான எப்ஸ்டீன், உண்மைகளைச் சொல்லப்போகும் நேரத்தில் மர்மமாக இறந்து கிடந்தார்.

கேமராக்கள் திடீரென வேலை செய்யவில்லை!

காவலர்கள் தூங்கிவிட்டார்கள்! இது தற்கொலையா? இல்லை உண்மைகளைத் மறைக்க பெரிய இடத்து ஆட்கள் செய்த கொலையா? இன்றும் மர்மம் நீடிக்கிறது. அதனால்தான், இந்த வழக்கின் விசாரணையும் ஆதாரங்களும் இப்போது வெளிப்படையாக வெளியிடப்பட்டு வருகின்றன!”

கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல்: கொடுரனின் ஏஜென்ட்!

“இந்தக் காமப் கொடுரனின் வலது கையாக இருந்தவள் அவனது காதலி கிஸ்லேன் மேக்ஸ்வெல். உலகத் தலைவர்களையும் கோடீஸ்வரர்களையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்காகக் கடத்திய குற்றத்திற்காக இன்று இவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். 17 வயதில் இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய வர்ஜீனியா ஜூஃப்ரேயுடன், ஆண்ட்ரூ பல மில்லியன் டாலர்கள் கொடுத்து சமரசம் செய்து கொண்டது எதை உணர்த்துகிறது?

இறுதி எச்சரிக்கை: சிஸ்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது!

இவர்களெல்லாம் அந்த ‘பீடோபைல் தீவுக்கு’ (Pedophile Island) ஏன் சென்றார்கள்? அங்கு நடந்த அசிங்கங்களில் இவர்களுக்குப் பங்கு என்ன? அதிகாரம் என்பது ஏழை மக்களைக் காக்கவா? அல்லது இதுபோல பிஞ்சுயிர்களைச் சிதைக்கும் காமவெறிக்குக் கேடயமாக இருக்கவா?

எப்ஸ்டீன் செத்துவிட்டார். ஆனால் அவர் உருவாக்கிய அந்த ‘எப்ஸ்டீன் சிஸ்டம்’ இன்றும் உயிரோடுதான் இருக்கிறது. அதிகாரமும் பணமும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற அந்தத் தைரியத்தை இந்த சிஸ்டம் இன்னும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

இது ஏதோ அமெரிக்காவில் நடந்த கதை என்று கடந்து போகாதீர்கள். நமது சமூகத்திலும் அதிகார மிரட்டலுக்குப் பயந்து எத்தனை பிஞ்சுயிர்கள் மௌனமாக அழுகின்றனவோ? ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ வெறும் காகிதங்கள் அல்ல; அவை அதிகார வர்க்கத்தின் முகத்தில் பூசப்பட்ட கரி! நீதியைத் தற்காலிகமாகப் புதைக்கலாம், ஆனால் அது ஒருநாள் எரிமலையாக வெடிக்கும் என்பதற்கு எப்ஸ்டீன் கோப்புகளே சாட்சி!

எப்ஸ்டீன் செத்துட்டார்… ஆனா எப்ஸ்டீன் சிஸ்டம் இன்னும் உயிரோட இருக்கு. அதை வேரோடு அழிக்க நாம் குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!”

– D. Rasmila

The post அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை appeared first on Oruvan.com.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு – 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்
66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை மேலும் கூறியுள்ளதாவது,

அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் 35 ஐ.நா அல்லாத குழுக்கள் மற்றும்  ஐ.நாவில் அங்கம் வகிக்கும் 31 அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தும் படி அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம் உள்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இனி சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது.

ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம், இந்தியாவும் பிரான்சும் இணைந்து வழிநடத்தும் தூய்மையான எரிசக்தி முன்னெடுப்பான சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், பருவ நிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு உள்பட 66 அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

The post வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு – 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல் appeared first on Oruvan.com.

ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையால் ஒன்றில் போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இடையேயான வெள்ளை மாளிகை சந்திப்பில் ரொனால்டோவும் கலந்து கொண்டுள்ளார்.

சவுதி மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் சவுதி இளவரசருக்கு டிரம்ப் பாரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

2022ஆம் ஆண்டின் இறுதியில் சவுதி கழகமான அல்-நாசரில் வருடத்திற்கு 200 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் இணைந்ததிலிருந்து ரொனால்டோ சவுதி கால்பந்து லீக்கின் அடையாளமாக மாறியுள்ளார்.

இதன் அடிப்படையில் டிரம்ப்பை சந்திக்கும் சவுதி குழுவில் ரொனாட்டோவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது, ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், தனது இளைய மகன் பரோன், ரொனால்டோவின் மிகப் “பெரிய ரசிகன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது 19 வயதான மகன் பரோன், ரொனால்டோவை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

The post ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப் appeared first on Oruvan.com.

இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார்.

இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு வந்த டொனால்டு டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.

ஹமாஸ் ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் முதல் தொகுதியை விடுவித்துள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

காசா சமாதான உச்சிமாநாட்டிற்காக எகிப்துக்குச் செல்வதற்கு முன்பு, பணயக்கைதிகளின் குடும்பத்தினரை டிரம்ப் சந்தித்து இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஹமாஸ் தங்கள் வசம் உள்ள 20 இஸ்ரேலிய பணய கைதிகளை இன்று விடுதலை செய்கிறது.

முதற்கட்டமாக ஏழு பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பணய கைதிகள் இன்னும் சற்று நேரத்தில் விடுதலை செய்யப்பட்ட உள்ளனர்.

மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட மேலும் 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்களும் இன்று ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப் appeared first on Oruvan.com.

போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைதிக்கான முதல் கட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒப்பந்தத்தின்படி அனைத்துப் பிணைக் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

அதேபோல் இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து மீட்டுக்கொள்ளும். அமைதிக்கான முதல் அடியை வலிமையாக எடுத்து வைத்துள்ளோம்,” என்று டிரம்ப் சுட்டிக்காட்டியள்ளார்.

“அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். இஸ்ரேல், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இது ஒரு சிறப்பான நாள். அமைதிப் பேச்சுக்குத் துணையாக இருந்த கத்தார், எகிப்து, துருக்கிக்கு நன்றி,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில், அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை கடந்த வாரம் டிரம்ப் வெளியிட்டார்.

இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்த இருதரப்பினருக்கும் இடையிலான போர் அண்டைய நாடுகளுக்கும் பரவிய நிலையில் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த சில நாள்களாக எகிப்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர்களுக்கு இடையே மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தப் பின்னணியிலேயே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது.

எனினும், இஸ்ரேல் தனது படையைக் காஸாவிலிருந்து முழுமையாக மீட்டுக்கொள்வதை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என ஹமாஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் உயிரிழந்ததுடன், 251 பேர் பணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸாமீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் 67,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஹமாஸுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இல்லையென்றால், இதுவரை இல்லாத பேரழிவை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார்.

அவரை வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப், நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். இதற்கு நேதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது

காசா அமைதி திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும் உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் கூறியதாவது:

ஹமாஸ் அமைப்பு அமெரிக்க நேரத்தின்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (5-ம் திகதி) மாலை 6 மணிக்குள் ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். ஒவ்வொரு நாடும் அதில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த இறுதி வாய்ப்புக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையெனில், இதற்கு முன் ஒருவரும் பார்த்திராத நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மத்திய கிழக்கு பகுதியில் ஒன்று அமைதி ஏற்படும். இல்லையென்றால் அமைதியின்மை ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.

The post ஹமாஸுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on Oruvan.com.

சீன, அமெரிக்க ஜனாதிபதிகள் அடுத்த மாதம் நேரடி சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.

இந்த உரையாடலில் வர்த்தகம், பென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.

அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் சீனாவுக்குச் செல்வதாகவும், தொடர்ந்து ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்றும் அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக மோதல் காரணமாக இருதரப்பும் பரஸ்பரம் வரிகளை அதிகரித்தன. பேச்சுவார்த்தைக்கு பின் ஏற்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.

அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. இந்த ஒப்பந்தம் நவம்பரில் முடிவடைகிறது.

The post சீன, அமெரிக்க ஜனாதிபதிகள் அடுத்த மாதம் நேரடி சந்திப்பு appeared first on Oruvan.com.

உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புகள் அனுப்பப்படமாட்டார்கள் – டிரம்ப் அறிவிப்பு
உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டால், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகளை உக்ரைனுக்கு அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் துருப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும், எனினும், அமெரிக்கா “வான்வழியாக” ஆதரவை வழங்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம், குறிப்பாக விமானம் மூலம், ஏனென்றால் எங்களிடம் உள்ளதைப் போன்ற பொருட்களை யாரும் வைத்திருக்க மாட்டார்கள்,” என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துள்ள உக்ரைன் – ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டுவர் அமெரிக்க ஜனாதிபதி தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக ரஷ்ய ஜனாதிபதி புடினை அலஸ்காவில் சந்தித்துத்துப் பேசிய டிரம்ப், கடந்த திங்கட்கிழமை உக்ரைன் ஜனாதிபதி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசியிருந்தார்.

திங்கட்கிழமை நடந்த சந்திப்பை நேர்மறையாகவும், பயனுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் ஐரோப்பியத் தலைவர்களும் சித்தரித்தாலும், போருக்குப் பிந்தைய உக்ரைனின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்ற கேள்வி போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது.

உக்ரைனில் சமாதான ஒப்பந்தத்தை நிலைநிறுத்த மேற்கத்திய துருப்புக்களை அனுப்புவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடன்படலாம் என்று டிரம்ப் பரிந்துரைத்திருந்தாலும், மொஸ்கோ அந்த யோசனையை பலமுறை நிராகரித்துள்ளது.

ரஷ்யாவும் உக்ரைனும் பிராந்திய சலுகைகள் மற்றும் விரிவான சமாதான ஒப்பந்தத்திற்கு முன்னதாக போர்நிறுத்தத்தை செயல்படுத்துவதில் தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், புடினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்புக்கான தனது திட்டங்களை டிரம்ப் விரிவாக தெரிவித்துள்ளார்.

புடினை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறியிருந்தாலும், ரஷ்ய ஜனாதிபதி இந்த சந்திப்பில் கலந்து கொள்வாரா என்பதை மொஸ்கோ உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், புடின் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பை நடத்த தயாராக இருப்பதாக சுவிட்ஸர்லாந்து நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புகள் அனுப்பப்படமாட்டார்கள் – டிரம்ப் அறிவிப்பு appeared first on Oruvan.com.

டிரம்பின் வரிச் சட்டம் நிறைவேற்றம் – காத்திருக்கும் ஆபத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த ‘பிக் பியூட்டிபுல் பில்’ எனப்படும் வரி மற்றும் செலவு சட்டம் காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை நடந்த பரபரப்பான வாக்கெடுப்பில், சட்டத்துக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 214 வாக்குகளும் பதிவாகின. 4 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க சுதந்திர தினமான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு டிரம்ப், சட்டத்தில் கையெழுத்திடுவார் என்று பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறியுள்ளார். இதன்மூலம் மசோதா சட்டமாக அமலுக்கு வரும்.

இந்த சட்டத்தில் இராணுவ செலவினங்களை அதிகரித்தல், புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டத்திற்கு நிதியளித்தல் மற்றும் வரி நிவாரணத்தை நீட்டிக்க 4.5 டிரில்லியன் டொலர்களை ஒதுக்குதல் ஆகியவை முக்கிய அம்சங்கள் அடங்கும்.

இருப்பினும், இந்த சட்டம் நாட்டின் கடனை மேலும் 3.4 டிரில்லியன் டொலர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஏழைகளுக்கான உணவு உதவித் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் பெரும் நிதி குறைப்புகள் ஏற்படும். இந்த சட்டம் அமலானால் சுமார் 17 மில்லியன் மக்களின் காப்பீட்டுத் தொகையை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

சட்டம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்க ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் அவையில் பேசுகையில், “இந்த சட்டம் அமெரிக்க மக்களின் வாழ்க்கையை அழிக்கும். இது ஒரு அருவருப்பான மற்றும் ஆபத்தான சட்டம்” என்று கூறினார்.

இந்த சட்டத்தால் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.

The post டிரம்பின் வரிச் சட்டம் நிறைவேற்றம் – காத்திருக்கும் ஆபத்து appeared first on Oruvan.com.

விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்ப்படும் – டிரம்ப் அறிவிப்பு
இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சமீபத்தில் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவு கூர்ந்து, அடுத்த பெரிய ஒப்பந்தம் இந்தியாவுடன் இருக்கலாம் என்று கூறினார்.

“எல்லோரும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். நேற்று சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களைச் செய்கிறோம்.

விரைவில் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் வரப்போகிறது. அது மிகப் பெரியது. நாங்கள் இந்திய சந்தைகளைத் திறக்கிறோம்” என்று டிரம்ப் கூறினார்.

இதையும் படியுங்கள்: அமெரிக்காவுடன் எந்த அணுசக்தி பேசுவார்த்தையும் கிடையாது – ஈரான் திட்டவட்டம்

சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அதிகாரிகளும், வர்த்தக அமைச்சகத்தின் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை தற்போதைய 190 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.

The post விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்ப்படும் – டிரம்ப் அறிவிப்பு appeared first on Oruvan.com.