டொனல்ட் டிரம்ப் Archives - Oruvan.com

அமெரிக்கப் பொருள்களுக்கு $28 பில்லியன் வரிவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும் விரைவில் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவிக்கவிருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 26 பில்லியன் யூரோவுக்கு ($28.33 பில்லியன்) மேலான வரியை விதிக்கப்போவதாக ஐரோப்பிய ஆணையம் புதன்கிழமை அன்று தெரிவித்தது.

எஃகு, அலுமினியம் உள்ளிட்ட அமெரிக்கப் பொருள்களுக்கான புதிய வரி அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என்று அது கூறியுள்ளது.

ஏப்ரல் 1 ஆம் திகதி அமெரிக்கப் பொருள்கள் மீதான தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி முடிவுக்கு வருவதாகவும் ஏப்ரல் நடுப்பகுதிக்குள் அமெரிக்கப் பொருள்கள் மீதான புதிய வரித் தொகுப்பு முன்வைக்கப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

“புதிய வரி விதிப்பு, அமெரிக்க வரி விதிப்புக்கு இணையாக இருக்கும். இரண்டு அடுக்குகளில் எங்களுடைய பதில் நடவடிக்கை இடம்பெறும். ஏப்ரல் 1ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் திகதிக்குள் முழுமையாக வரி விதிப்பு இடம்பெறும்,” என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வோன் டெர் லேயன் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், எஃகு மற்றும் அலுமினியத்துக்கு 25 விழுக்காடு வரி உயர்வை அறிவித்திருந்தார். இது, புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

The post அமெரிக்கப் பொருள்களுக்கு $28 பில்லியன் வரிவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு appeared first on Oruvan.com.

அமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் சீனாவின் புதிய இலக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதிலிருந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் போர் உச்சமடைந்துள்ளது.

வர்த்தகப் போருக்கு மத்தியில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா குறிவைத்துள்ளது.

இருப்பினும், சீனா எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொள்ளும்போது இந்த 5 வீத வளர்ச்சி இலக்கை எட்டுவது சவால்மிக்கதாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சீனாவின் பொருளியல் இவ்வாண்டு 4.5 சதவீதம் விரிவடையும் என்று உலக வங்கி முன்னுரைத்துள்ளது.

சீனாவின் பொருளியல் 4.6 சதவீதம் வளர்ச்சி காணும் என்று சர்வதேச நாணய நிதியம் முன்னுரைத்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களின் சோயா விதை இறக்குமதி உரிமங்களைச் சீனா நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) முதல் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குள் மரத்துண்டுகள் இறக்குமதி செய்யப்படுவதை சீனா அரசாங்கம் நிறுத்திவைத்துள்ளது.

அண்மையில் சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவின் இந்த நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா விதைகளில் ஏறத்தாழ பாதி, சீனாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

2024ஆம் ஆண்டில் சோயா விதைகளின் வர்த்தக மதிப்பு 12.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் சீனாவின் புதிய இலக்கு appeared first on Oruvan.com.

டிரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டம் தீட்டியதா?
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் டொனல்ட் டிரம்ப்பைக் கொல்ல தாங்கள் ஒருபோதும் சதித்திட்டம் தீட்டியதில்லை என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பும் அமெரிக்க அரசும் அத்தகைய குற்றச்சாட்டைக் கூறிவந்த நிலையில், என்பிசி நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது பெஸெஷ்கியான் அதனை மறுத்தார்.

டிரம்ப்பைக் கொல்வதற்கான சதித்திட்டத்தில் தொடர்பிருந்ததாகக் கூறி, கடந்த 2024 நவம்பர் மாதம் ஈரானின் புரட்சிக் காவலர் படையைச் சேர்ந்த ஒருவர்மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சுமத்தியது. தாக்குதல் இடம்பெறுமுன் சட்ட அமலாக்கத்துறை அதனை முறியடித்ததாகவும் கூறப்பட்டது.

முன்னதாக, கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போதும், தம்மைக் கொல்வதற்கான முயற்சிகளின் பின்னணியில் ஈரான் இருக்கக்கூடும் என்று டிரம்ப்பும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அப்படி எதையும் தாங்கள் செய்யவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்த பெஸெஷ்கியான், “தொடக்கத்திலிருந்தே அப்படி எந்த முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டதில்லை, இனிமேலும் செய்யமாட்டோம்,” என்று உறுதியாகக் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலையிலும் செப்டம்பரிலும் தம்மைக் கொல்ல இரு முயற்சிகள் இடம்பெற்றபோதும் அவ்விரண்டிலிருந்தும் தப்பினார் டிரம்ப்.

அவ்விரு முயற்சிகளிலும் ஈரானுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவதற்கு எவ்விதச் சான்றும் இல்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துவிட்டனர்.

இணையம் வழியாக அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தாங்கள் தலையிட முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் ஈரான் ஏற்கெனவே மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post டிரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டம் தீட்டியதா? appeared first on Oruvan.com.