டொனால்ட் ட்ரம்ப் Archives - Oruvan.com

உலகளாவிய துயரத்தின் தொடக்கமா?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒரு புதிய உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது.

சீனா மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமைதியாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தலை ‘தவறுக்கு மேல் தவறு’ என்று சீனா வர்ணித்துள்ளது. ஒரு வர்த்தகப் போர் தொடங்கினால், தனது வளர்ச்சி மற்றும் இறையாண்மையை முழு பலத்துடன் பாதுகாப்பேன் என்று சீனா கூறியுள்ளது.

மேலும், பெய்ஜிங் எந்த விதமான அழுத்தத்திற்கும் அடிபணியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்தப் பொருளாதாரப் பதற்றத்தின் தாக்கம் உலகப் பங்குச் சந்தையில் தெளிவாகத் தெரிந்தது. வர்த்தகப் போர் பற்றிய செய்திகளால், முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பைச் சந்திக்க நேரிட்டது. சந்தையில் திடீர் சரிவு காணப்பட்டது.

உலகளாவிய ஃபயர்பவர் குறியீட்டில் 0.0744 மதிப்பெண்களுடன் அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை அனைத்தும் மிகவும் முன்னேறியதாகக் கருதப்படுகின்றன. தவிர  அணு ஆயுதங்களையும் கொண்டுள்ளது.

அமெரிக்காவிடம் 13,000க்கும் மேற்பட்ட விமானங்கள், 1,790 போர் விமானங்கள் மற்றும் 5,000 ஹெலிகாப்டர்கள் உள்ளன.

14 லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களையும், லட்சக்கணக்கான கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களையும் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.

மறுபுறம், சீனாவின் இராணுவமும் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலகளாவிய சக்தி குறியீட்டில் சீனா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதன் மதிப்பெண் 0.0788 ஆகும். சீன இராணுவத்தில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர்.

சீனாவிடம் 3,000க்கும் மேற்பட்ட விமானங்கள், 1,212 போர் விமானங்கள் மற்றும் 281 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உள்ளன.

அதன் கடற்படை மற்றும் விமானப்படைகளும் வேகமாக நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

இரு நாடுகளும் இப்போது வர்த்தகம் அல்லது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்திலும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன.

இந்தக் காரணத்தினால், அவர்களின் மோதல் முழு உலகிற்கும் கவலை அளிக்கும் விடயமாக மாறியுள்ளது. இந்தப் போர் இந்த இரண்டு  நாடுகளோடு மட்டும் நின்றுவிடாது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடிப் போர் ஏற்பட்டால், அது இரு நாடுகளின் துயரம் மட்டுமல்ல, உலகளாவிய துயரத்தின் தொடக்கமாக இருக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

நிலைமையை முறையாகக் கையாளவில்லை என்றால், வர்த்தகப் போரால் தொடங்கும் மோதல் ஒரு பெரிய பேரழிவாக மாறும். இது உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

The post உலகளாவிய துயரத்தின் தொடக்கமா? appeared first on Oruvan.com.

ட்ரம்பின் ஆசை – அமெரிக்கா, ஐரோப்பா போரை உருவாக்கும் அபாயம்
கிரீன்லாந்தில் இன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நேரடி போருக்கு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது. டென்மார்க்கின் ஒருபகுதியாக கிரீன்லாந்து உள்ளது. இது டென்மார்க்கின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரதேசமாகும். இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருவதால் அங்கு போர் நடத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா போர் தொடுத்தால் அது மாபெரும் போராக மாறலாம். ஏனெனில் கிரீன்லாந்தை உள்ளடக்கிய டென்மார்க் நாடு என்பது நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. நேட்டோவில் மொத்தம் 29 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் அமெரிக்காவும் ஒன்று. ஆனால் நேட்டோவில் இருந்து அமெரிக்கா வெளியேற உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறி வருகிறார். இவ்வாறான சூழலில் அமெரிக்கா, கிரீன்லாந்தில் போர் தொடுத்தால் நிச்சயம் நேட்டோ உறுப்பு நாடுகள் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும்.

ஏனெனில் நேட்டோவின் விதியின்படி அதில் உறுப்பினராக உள்ள நாட்டின் மீது யாராவது போர் தொடுத்தால் நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து பதிலடி கொடுக்க வேண்டும். இதனால் அமெரிக்கா கிரீன்லாந்து மீது போரை தொடங்கும் பட்சத்தில் அது ஐரோப்பா – அமெரிக்கா இடையேயான போராக மாறலாம்.

நேட்டோவில் ஐரோப்பிய நாடுகள் தான் அதிகம் உள்ளன. ஏற்கனவே உக்ரேன் மீதான ரஷ்யா போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் காணப்படுகின்றது. இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா, கிரீன்லாந்தில் போரை தொடங்கினால், நிச்சயம் அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

The post ட்ரம்பின் ஆசை – அமெரிக்கா, ஐரோப்பா போரை உருவாக்கும் அபாயம் appeared first on Oruvan.com.

‘’டொலரை நிராகரித்தால் 100% வரி’’ – பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகதளமான ட்ரூத் சோசியலில் வெளியிட்டுள்ள பதிவில்,

“பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை விட்டு விலகிச்செல்ல முயற்சிக்கின்றன. நாங்கள் அதை ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் காலம் முடிந்துவிட்டது. எதிரிகளைப் போலத் தோன்றும் அந்த நாடுகளுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறோம்.

அதாவது அவர்கள் புதிய பிரிக்ஸ் கரன்ஸியை உருவாக்கக் கூடாது அல்லது டாலருக்கு நிகராக மற்றொரு கரன்ஸியைத் தேடக் கூடாது, இல்லையென்றால் 100 சதவீத வரிவிதிப்பைச் சந்திக்க நேரிடும் அல்லது மகத்தான அமெரிக்க பொருளாதாரத்தில் வியாபாரம் செய்யும் எதிர்பார்ப்பைக் கைவிட வேண்டும் என்பதே அது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2024 டிசம்பரில் ரஷ்யா, ‘பிரிக்ஸ் நாடுகளை டாலரைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப்படும் எந்த ஒரு நடவடிக்கையும், தேசிய பணத்தின் தேவையை வலுப்படுத்தும் ’ என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே, அட்லாண்டிக் கவுன்சிலின் புவிபொருளாதார மையம் நடத்திய கள ஆய்வில், முதன்மை கையிருப்பு பணமாக அமெரிக்க டாலரை உலக அளவில் நம்பியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்க டாலரை மதிப்பு நீக்குவதில் யூரோ மற்றும் மாற்று பணத்தை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எதியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தக் குழுவுக்கென தனியாக பொதுப்பணம் இல்லை. உக்ரைன் போருக்கு பின்பு, ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் பொது பணத்துக்கான பேச்சுக்கள் எழுந்துள்ளது.

அதேபோல், அமெரிக்கப் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாலும், வரிவிதிப்பு மற்றும் பணவியல் கொள்கைகளில் ஏற்படும் மாற்றம் புவிசார் அரசியல் பிரச்சினைகள் காரணமாக டாலருக்கு நிகரான உந்துதல் அதிகரித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் வரிகள்: சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஒப்பியாய்டுகள் போன்ற போதை வஸ்துக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவுக்கு பிப்.1ம் தேதி முதல் 25 சதவீதம் வரிவிக்கப்படும் என்று ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.

அமெரிக்காவுக்கு தீங்குவிளைவிக்கும் அச்சுறுத்தலாய் இருக்கும் ஒப்பியாய்டு விநியோகத்தில் சீனாவின் பங்கு இருப்பதாய் கூறி அந்நாட்டின் இறக்குமதி பொருள்களுக்கு 10 சதவீதம் வரிவிதிக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ‘’டொலரை நிராகரித்தால் 100% வரி’’ – பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை appeared first on Oruvan.com.