டித்வா Archives - Oruvan.com

‘டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் பணிப்பு
‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

Rebuilding Sri Lanka திட்டத்தின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்குத் தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் தற்போது வழங்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்த சேதங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாகாண மட்டத்தில் கண்காணிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ‘டித்வா’ புயல் சேதங்களுக்காக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் உரிய அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், இழப்பீடு வழங்குவதில் பிரதேச மட்டத்தில் காணப்படும் தாமதங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, புனரமைப்புப் பணிகளுக்காக சுமார் 3.4 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கமைய வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு, விவசாயம், கால்நடை, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகள் 99 சதவீதமும், மீளக்குடியமர்வுக்கான 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகள் 95 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. அத்துடன், அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு, பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான இழப்பீடு, விசேட தேவையுடையோருக்கான இழப்பீடு மற்றும் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தலா 25,000 ரூபா வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களை விரைவாகப் புனரமைத்தல், புதிய வீடுகளைக் கட்டுவதற்கு காணி ஒதுக்கீடு செய்தல் மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

The post ‘டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் பணிப்பு appeared first on Oruvan.com.

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192 கோடி) ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் தற்போது அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஊடாகப் பிரதேசச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக, அரசாங்கத்தினால் ஒரு மாணவருக்கு மொத்தம் 25,000 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில், திறைசேரியிலிருந்து: 15,000 ரூபாவும் மற்றும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து: 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய அம்பாறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு தற்போது முழுமையாகக் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான குறித்த நிதியுதவியும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு appeared first on Oruvan.com.

2025 இல் இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் கடும் தாக்கம் ஏற்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை ஒட்டுமொத்தமாக குறிப்பிடத்தக்க பொருளாதார நிலையை அடைந்துள்ளது.

பிரதான பொருளாதாரக் குறிகாட்டிகளில் 2025 ஆம் ஆண்டில் அடைந்த பொருளாதார நிலைகள் வருமாறு:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மீண்டும் நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே இலங்கை 2025 ஆம் ஆண்டை வரவேற்றது.

அதற்கமைய, நாட்டின் வருமானத்தில் முக்கிய பங்கை வகிக்கும் வரி வருமானம், கடந்த ஆண்டில் சாதனை அளவிலான வருமானமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

93 வருடங்களுக்குப் பின்னர், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் அதிகூடிய வருமானமாக 2,203 பில்லியன் ரூபா வருமானத்தை 2025 ஆம் ஆண்டில் ஈட்டியுள்ளது.

இது ஆண்டின் இலக்கு வருமானத்தை விட 33 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் என்பதுடன், 2024 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 15% வளர்ச்சியாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, வரி வருமானம், வரி சாராத வருமானம் மற்றும் மானியங்களுடன் 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் ஈட்டப்பட்டுள்ள மொத்த அரச வருமானம் 4,961.8 பில்லியன் ரூபாவாகும்.

இது 2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 35% வளர்ச்சியாகும்.

2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 928 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட ஆரம்பக் கணக்கு மீதி (Primary Account Surplus), 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1,942 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், 19.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, இந்தக் காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையாக 6.9 பில்லியன் அமெரிக்க டொலர் பதிவாகியுள்ளது.

வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பலாக 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 7,197.1 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இந்தக் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21% வளர்ச்சியாகும்.

சீன மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற வசதி உட்பட, 2025 நவம்பர் மாத இறுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி வரை 2,344,978 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதற்கமைய, வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வருடமாக 2025 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.

அத்துடன், 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் சுற்றுலாத் துறை வருமானமாக 2,910.6 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நாட்டின் முதலீடு குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வலுவான சுட்டியாகக் கருதப்படும் கொழும்பு பங்குச் சந்தையும் 2025 ஆம் ஆண்டில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் அதிகபட்சமாக 23,659.7 என்ற புள்ளிகளை 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்ததோடு, சந்தை புரள்வு முதன்முறையாக 1.2 ரில்லியன் ரூபா எல்லையைக் கடந்துள்ளது.

மேலும், வரலாற்றில் முதன்முறையாக சந்தை மூலதனமாக்கல் (Market Capitalization) 8 ரில்லியன் ரூபா எல்லையைக் கடந்ததும் 2025 ஆம் ஆண்டிலாகும்.

2025 ஆம் ஆண்டில் சந்தைப் பரிவர்த்தனைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 6.2% ஆகக் காணப்படுகிறது.

The post 2025 இல் இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் appeared first on Oruvan.com.

இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு
கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்தததாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) புதிய புவியியல் பகுப்பாய்வு இதனை தெரிவித்துள்ளது.

பேரிடன் போது, வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமான பகுதியை (நாட்டின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை) மூழ்கடித்து வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பேரிடர் தொடர்பான தரவுகளிலிருந்து பெறப்பட்ட இந்த பகுப்பாய்வு, பல தசாப்தங்களில் இலங்கையைத் தாக்கிய மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், சூறாவளிக்கு முன்பே பல பாதிப்புகளை எதிர்கொண்ட வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

நிலையற்ற வருமானம், அதிக கடன் மற்றும் பேரழிவுகளைச் சமாளிக்கும் திறன் குறைவாக இருந்துள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், மிதமான அதிர்ச்சிகள் கூட நீண்டகால பின்னடைவுகளாக மாறக்கூடும்.

வெள்ள நீர் கிட்டத்தட்ட 720,000 கட்டிடங்களை அடைந்துள்ளது. இது இலங்கையில் உள்ளட்ட கட்டிடங்களில் 12க்கு ஒரு கட்டிடம் என்ற ரீதியில் வெள்ள நீர் அடைந்துள்ளது.

நாட்டின் கடற்கரையை பன்னிரண்டு முறைக்கு மேல் சுற்றி வர போதுமான 16,000 கிலோமீட்டருக்கும் அதிகமான வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

அதேபோல், 278 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மற்றும் 480 பாலங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள்தொகையில் தோராயமாக 1.2 மில்லியன் பெண்கள், 522,000 குழந்தைகள் மற்றும் 263,000 முதியவர்கள்  அடங்குவார்கள்.  மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இரண்டு மாவட்டங்களில் (கொழும்பு மற்றும் கம்பஹா) வசிக்கின்றனர்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலர் அதிக ஆபத்துள்ள, பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வாழ்கின்றனர், இதற்கு நிரந்தர தீர்வு தேவைப்படுகிறது.

“அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதிக பாதிப்பு ஒன்றுடன் ஒன்று இணைந்தால், மீட்பு பணிகள் மொதுவாகவும் அதிக செலவை ஏற்படுத்துபவையான இருக்கும்.

எனவே, இந்த இடங்களில் ஆரம்பகால நடவடிக்கை மிகவும் முக்கியமானது” என்று ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி  அசுசா குபோடா தெரிவித்துள்ளார்.

The post இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு  appeared first on Oruvan.com.

இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு குப்பைகளை உருவாக்கியுள்ள டித்வா புயல்
“டித்வா” சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எதிர்பாராத அளவு குப்பைகள் உருவாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

வீடுகள், கடைகள் போன்ற பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் உருவாகியுள்ளன, அவை தற்போது அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரிடர் காரணமாக எவ்வளவு குப்பைகள் உருவாகியுள்ளன என்பதை இன்னும் சரியாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில இடங்களை அடைய இயலாமை, சுத்தம் செய்யும் பணிகளில் தாமதம் போன்ற நடைமுறை சிக்கல்கள் காரணமாக எவ்வளவு குப்பைகள் உருவாகியுள்ளன என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பேரிடரின் போது உருவாகியுள்ள குப்பைகளை முறையாக நிர்வகிக்க குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம் என்று தலைவர் சுட்டிக்காட்டினார்.

மலையகத்தின் சில பகுதிகளில் உள்ள வீதிகள் இன்னும் வாகனங்களுக்கு ஏற்றதாக இல்லாததால், அந்தப் பகுதிகளில் இருந்து உருவாகியுள்ள குப்பைகளை அகற்றுவது கூட சிக்கலாகிவிட்டது என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குப்பைகளை அகற்றுவதற்கு உள்ளூர் அதிகாரிகளுக்கு தளர்வான அளவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது சாதாரண சூழ்நிலைகளில் அல்லாமல் பேரிடரின் போது உருவாகும் பெரிய அளவிலான குப்பை என்பதால், நடைமுறையில் இதை ஒரே நேரத்தில் நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

எனவே, தற்காலிகமாக இந்தக் குப்பைகளை பொருத்தமான இடங்களில் சேமித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளூர் அதிகாரிகளுக்கு தேவையான அளவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பேராசிரியர் திலக் ஹேவாவசம் கூறினார்.

பேரிடரால் அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் குப்பைகளை புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் அப்புறப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

The post இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு குப்பைகளை உருவாக்கியுள்ள டித்வா புயல் appeared first on Oruvan.com.

பேரிடருக்கு பின்னர் சந்தைக்குள் நுழையும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை
நாடு முழுவதும் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்திய சமீபத்திய மோசமான வானிலைக்குப் பிறகு, கெட்டுப்போன மற்றும் பாதுகாப்பற்ற உணவு சந்தைகளை அடைவதைத் தடுப்பதில் சுகாதார அதிகாரிகள் பாரிய சவாலை எதிர்கொள்கின்றனர்.

பல மாவட்டங்களில் கால்நடைப் பண்ணைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விலங்குகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்த விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட இறைச்சியை சில தனிநபர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பொது மக்களுக்கு விற்க முயற்சிக்கக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டுகிறது.

மேலும், வெள்ள நீரில் மூழ்கிய பயிர்கள், காய்கறிகள், தானிய இருப்புக்கள், அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்கள் இப்போது சந்தைகளில் புழக்கத்தில் விடப்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இந்தப் பொருட்கள் மீண்டும் சமைக்கப்படுவதோ, பதப்படுத்தப்படுவதோ அல்லது மறுவிற்பனை செய்யப்படுவதோ பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

வார இறுதியில், கண்டியின் ஹரிஸ்பத்துவ பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியை பதப்படுத்தி விநியோகிக்கும் சட்டவிரோத நடவடிக்கையை பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHIs) கண்டுபிடித்தனர்.

சோதனையின் போது, ​​அதிகாரிகள் 1,000 கிலோகிராம் அரிசியைக் கைப்பற்றினர், இது வேறு இடங்களிலும் இதேபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான அறிகுறியாகும்.

இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க நாடு முழுவதும் ஆய்வுகள் மற்றும் சந்தை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்தார்.

வெள்ளத்தால் சேதமடைந்த பொருட்களை விற்பனை செய்வதில் வணிகங்கள் ஈடுபட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்த காலகட்டத்தில் உணவு, குறிப்பாக அரிசி மற்றும் இறைச்சி வாங்கும் போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நினைவூட்டினார்.

“இந்த சூழ்நிலைக்கு வலுவான பொது ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான உணவு விற்பனை நிலையங்கள் அல்லது தயாரிப்புகளை முறைப்பாடு செய்வதில் பொதுமக்களின் பங்கு மிக முக்கியமானது” என்று பொரலெஸ்ஸா வலியுறுத்தினார்.

எனவே, தகவல் தெரிந்தவர்கள் தங்கள் பகுதி பொது சுகாதார ஆய்வாளர்கள் அல்லது சுகாதார அமைச்சகத்தின் 24 மணி நேர பேரிடர் மேலாண்மை பிரிவின் துரித இலக்கமான 1926ஐ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

The post பேரிடருக்கு பின்னர் சந்தைக்குள் நுழையும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

டித்வா புயலின் கோரத் தாண்டவம் – மினிபேயில் 22 பேரின் சடலங்கள் மீட்பு
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலச்சரிவால் மினிபேயின் தொலைதூர மலைப்பகுதி கிராமமான நெலும்கம எனும் கிராமத்தில் இருந்து 22 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர அனர்தத்தின் போது, அந்த கிராமத்தில் உள்ள 16 வீடுகளில், 12 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பலர் மண்ணில் புதையுண்டனர்.

மேலும், மின்சாரம், தொலை தொடர்பு சேவைகள் இல்லாமையால், குறித்த கிராமம் வெளி இடங்களுடனான உறவும் துண்டிக்கப்பட்டிருந்தது.

திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இராணுவ மீட்புக் குழுக்கள் கூட அந்தப் பகுதியை அடைய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இன்று காலை, கடினமான பயணத்திற்குப் பின்னர், மீட்பு குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்றனர். இடிபாடுகளில் இருந்து 22 உடல்களை அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்டுள்ளனர்.

பேரழிவு நடந்த நேரத்தில் சுமார் 30 பேர் அந்த கிராமத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண உள்ளூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post டித்வா புயலின் கோரத் தாண்டவம் – மினிபேயில் 22 பேரின் சடலங்கள் மீட்பு appeared first on Oruvan.com.

இலங்கையை நிலைகுலையச் செய்த பேரிடர் – 400ஐ அண்மிக்கும் உயிரிழப்பு
டித்வா புயல் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

382,651 குடும்பங்களைச் சேர்ந்த 1,373,899 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது 1368 தங்குமிடங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், 432 முழுமையான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 15688 பகுதி வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கையை நிலைகுலையச் செய்த பேரிடர் – 400ஐ அண்மிக்கும் உயிரிழப்பு appeared first on Oruvan.com.