டிஜிட்டல் பொருளாதாரம் Archives - Oruvan.com

டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் ஐந்தாண்டு திட்டம் – ஐந்து பில்லியன் டொலர் வருமான இலக்கு
இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்த 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ரூ. 3,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் முதல் கட்ட நடவடிக்கையாக அனைத்து குடிமக்களுக்கும் இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க உத்தேசித்துள்ளது. அந்த டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக ஏனைய அனைத்து டிஜிட்டல் தரவுகளை உள்வாங்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இந்த தனித்துவமான டிஜிட்டல் அமைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான டிஜிட்டல் உள்கட்டமைப்பாக செயல்படும் என்றும், இந்தப் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்த அரசாங்கம் புதிய சட்டங்களையும் இயற்றும் முன்மொழிவுகளை வழங்கியுள்ளது. டிஜிட்டல் துறையில் உள்ள பிற சிறப்பு நிறுவனங்களைப் போலவே உயர் மட்ட டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவுவதே அரசாங்கத்தின் முதல் நோக்கமாக உள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கம் சைபர் பாதுகாப்பு, தரவு தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்த உள்ளது.

அண்மையில் தொடங்கப்பட்ட ‘GovPay’ தளம் போன்ற முயற்சிகளுடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அரசாங்கம் பணத்தைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இது பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு ஈட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணப்புழக்கம் குறைவடைந்து அனைத்துப் பரிமாற்றங்களும் டிஜிட்டல்மயமனால் ஊழல் – மோசடிகள் குறைந்து மக்கள் பாதுகாப்பான ஒரு பணச் சூழலை அனுபவிக்க முடியும் என அரசாங்கம் கூறுகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 15 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் அல்லது தேசிய பொருளாதாரத்தில் 12% க்கும் அதிகமாக வளர்ப்பதே இறுதி இலக்கு ​​என அரசாங்கம் கூறுகிறது.

இந்த காலகட்டத்தில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து ஆண்டு ஏற்றுமதி வருவாயாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளர்.

The post டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் ஐந்தாண்டு திட்டம் – ஐந்து பில்லியன் டொலர் வருமான இலக்கு appeared first on Oruvan.com.

டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான வலுவான அடித்தளம் இலங்கையில் உள்ளது – விரைவாக முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்கிறார் ஹான்ஸ் விஜேசூரியா
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான வலுவான அடித்தளத்தை இலங்கை கொண்டுள்ளது. இதற்குத் தேவையான திறன்களில் 75 சதவீதம் ஏற்கனவே உள்ளது என டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியா தெரிவித்தார்.

இருப்பினும், இந்த திறனை முழுமையாகப் பயன்படுத்த நாடு மீதமுள்ள இடைவெளியைக் குறைத்து அதன் டிஜிட்டல் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது, ​​இலங்கையின் டிஜிட்டல் போட்டித்தன்மை தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது ஆர்வம் மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வருகிறது.இந்த லட்சிய இலக்கை அடைவதற்கு பன்முக அணுகுமுறை தேவை . அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இலங்கையை இத்துறையில் உயர்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.

நமது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து புதிய முறைகளை ஏற்றுக்கொள்வதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் அட்வோகாட்டா நிறுவனத்தின் இக்னைட் வளர்ச்சி மன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.

நிறுவன கட்டமைப்பு, சட்டம் மற்றும் கலாச்சார மாற்றங்கள் இந்த முயற்சியை வலுப்படுத்த தேவைப்படும்.

வலுவான உச்ச அமைப்பு மற்றும் பயனுள்ள செயல்படுத்தல் அலகுகளுடன் கூடிய வலுவான நிறுவன கட்டமைப்பை நிறுவுவது இதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தரவு பாதுகாப்பு சட்டம், மின்னணு பரிவர்த்தனை சட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் கீழ் உள்ள சில விடயங்கள் உட்பட பல முக்கிய சட்டங்கள், வளர்ந்து வரும் டிஜிட்டல் நிலப்பரப்புடன் புதுப்பிப்புகள் மற்றும் சீரமைப்புகள் தேவைப்படுகின்றன.

பயனர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் இருவருக்கும் உயர்தர டிஜிட்டல் சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்கு API விதிகள் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் விரிவான விதிமுறைகள் மற்றும் தரநிலைகளை உருவாக்குவது மிக முக்கியமானது.

தரவு நிர்வாகம் ஒரு முக்கியமான கவனம் செலுத்தும் பகுதியாக வெளிப்படும் அதே வேளையில், தரவு பாதுகாப்பு சட்டத்தின் எல்லைக்குள் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், தேசிய தரவு பரிமாற்றம் மூலம் தரவு பகிர்வின் திறன் மற்றமு் நன்கு வரையறுக்கப்பட்ட தேசிய தரவு நிர்வாக உத்தியின் அவசியத்தையும் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியா வலியுறுத்தியுள்ளார்.

AI-இயங்கும் புதுமைகளை இயக்க, இலங்கை அதன் உள்கட்டமைப்பிற்கான எரிசக்தி தேவைகளை நிவர்த்தி செய்ய ஒரு பிரத்யேக உத்தியை உருவாக்க வேண்டும். சிங்கப்பூர் அதன் தரவு மையங்களுக்கு மின்சாரம் வழங்க மலேசியாவிலிருந்து மானிய விலையில் எரிசக்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறது.

இலங்கையின் AI வன்பொருள் மற்றும் செயலாக்கத் தேவைகளை ஆதரிக்க இதே போன்ற அணுகுமுறைகளை ஆராய வேண்டும்.

அனைத்து பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த முயற்சியுடன், இலங்கை அதன் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை உருவாக்கவும் வாய்ப்பைப் பெற்றுள்ளது என்று கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, இந்த நிகழ்வில் கூறினார்.

(சுப்ரமணியம் நிஷாந்தன்)

The post டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான வலுவான அடித்தளம் இலங்கையில் உள்ளது – விரைவாக முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என்கிறார் ஹான்ஸ் விஜேசூரியா appeared first on Oruvan.com.