டக்ளஸ் Archives - Oruvan.com

புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்தவே டக்ளஸ் குறிவைப்பு
” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டினார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் இன்று மறக்கப்பட்டுள்ளனர். உயிரை பணயம் வைத்து போராடிய படைவீரர்களுக்குரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை.

புலிகளின் அச்சுறுத்தலையும் கருத்திற்கொள்ளாது போரை முடிப்பதற்கு இரு தமிழ்த் தலைவர்கள் உதவினார்கள். பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவரும் புலிகளுக்கு எதிராக முன்னின்றவர்கள்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக மஹிந்த ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்ட சமருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரு தமிழ் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.” – என அவர் மேலும் கூறினார்.

The post புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்தவே டக்ளஸ் குறிவைப்பு appeared first on Oruvan.com.

டக்ளஸ் தொடர்பில் சிஐடி தீவிர விசாரணை
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது டக்ளஸ் தேவானந்த கைது விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவாலேயே துப்பாக்கி தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2000 காலப்பகுதியில் ரி- 56 துப்பாக்கிகள் 13 மற்றும் ஆறு பிஸ்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று மட்டுமே என்னால் குறிப்பிட முடியும்.

கம்பஹா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.” – என்றார்.

The post டக்ளஸ் தொடர்பில் சிஐடி தீவிர விசாரணை appeared first on Oruvan.com.

சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவரே டக்ளஸ்
“ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கி, தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் காணாமல் ஆக்கப்படுத்தலுக்கும் வன்புணர்வுகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இலங்கையின் ஆகப் பெருங்குற்றவாளிகளில் முதன்மையானவராவார். அவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒருவர்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“டக்ளஸ் தேவானந்தா, உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் கொலைகள் உட்பட குற்றங்களைச் சாவகாசமாகச் செய்த சர்வதேசக் குற்றவாளி.

அவருக்கு எதிராக சூளைமேடு கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தின் பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையில் உள்ளது.

அவரின் கைது வெறும் கண்துடைப்பாக மாத்திரமன்றி, அவர் ஆயுளுக்கும் வெளியே வராதபடி அமைந்தால் மட்டுமே சட்டவாட்சியின் பாற்பட்ட கைதாகக் கருதலாம்.

மாறாக ஒரு சில வாரங்களிலோ அல்லது ஒரு சில மாதங்களிலோ அவர் வெளியே வருவாரேயானால் பிள்ளையான், வியாழேந்திரன் வரிசையில் தமிழ்ப் புல்லுருவிகளைக் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு, அக்காலத்தினுள் அக்கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் ஜே.வி.பி. – என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பாகமாக மட்டுமே பார்க்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.” – என்றார்.

The post சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவரே டக்ளஸ் appeared first on Oruvan.com.