ஜெய்சங்கர் Archives - Oruvan.com

இந்தியா, ரஷ்யா வர்த்தக உறவு மேலும் வலுவடைய வேண்டும் – ஜெய்சங்கர்
இந்தியா- ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான இந்தியா – ரஷ்யா அரசுகளுக்கு இடையேயான ஆணையத்தின் 26-வது கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது.

ரஷ்ய முதல் துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் தலைமையிலான குழுவுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்ததை அடுத்து, பிற நாடுகளுடனான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியை இந்திய மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த பின்னணியில், மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,

“இந்தியா – ரஷ்யா இடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. 2021-ல் 13 பில்லியன் டாலராக இருந்த இந்திய-ரஷ்ய வர்த்தகம், 2024-25-ல் 68 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. 2021-ல் 6.6 பில்லியன் டாலராக இருந்த வர்த்தக பற்றாக்குறை தற்போது கிட்டத்தட்ட 59 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த பற்றாக்குறையை நாம் அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்தியா அதிக வர்த்தகம் செய்வதற்கு ஏற்ப ரஷ்யா தனது சந்தையை இன்னும் அகலமாக திறக்க வேண்டும். அதிக வர்த்தகத்தில் ஈடுபடுவதும் அதற்காக நாம் அதிகமாகச் செய்வதும் நமது மந்திரமாக இருக்க வேண்டும். 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி விரைவாக முன்னேற வேண்டும்.” – எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

The post இந்தியா, ரஷ்யா வர்த்தக உறவு மேலும் வலுவடைய வேண்டும் – ஜெய்சங்கர் appeared first on Oruvan.com.

ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி
லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும், இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் அவமானம் என்று பொது மன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சட்ட மன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கூறினார்.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பிளாக்மேன் வலியுறுத்தினார்.

மேலும், இராஜதந்திரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான பொருத்தமான அமைச்சரவை அறிக்கைகளை உறுதி செய்யுமாறு அவைத் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

நேற்று (புதன்கிழமை) இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த நாட்டில் இந்திய மக்கள் மத்தியில் உரையாற்றி முடிந்ததும் ​​ஒரு பொது இடத்தில் இருந்து வெளியேறும்போது தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

காலிஸ்தானி குண்டர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இது ஜெனீவா மாநாட்டிற்கு எதிரானது, மேலும் அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய காவல்துறையும் பாதுகாப்புப் படையினரும் தவறிவிட்டதாகத் தெரிகிறது.

இப்போது, ​​இது ஜனநாயகத்திற்கு ஒரு அவமானம், இது இந்தியாவில் உள்ள நமது நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கு ஒரு அவமானம்.

மேலும் இது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த நாட்டிற்கு வெளியூர் இராஜதந்திரிகள் வரும்போது, ​​அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யப் போவது குறித்து உள்துறைச் செயலாளரோ அல்லது பொருத்தமான அமைச்சரோ இந்த அவையில் ஒரு அறிக்கை வெளியிடுவதைத் தலைவர் உறுதி செய்வாரா? என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

ஜெய்சங்கருக்கு எதிரான சம்பவத்திற்கு தொழிலாளர் கட்சித் தலைவர் லூசி பவல் மன்னிப்பு கேட்டார்.

லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழுவில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் தாக்கப்பட்டார்.

மார்ச் 6 (புதன்கிழமை) மாலை மத்திய லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸுக்கு வெளியே இந்த சம்பவம் நடந்தது.

ஆன்லைனில் பரவி வரும் ஒரு காணொளியில், காலிஸ்தானிய குண்டர்கள் ஜெய்சங்கர் பயணித்த வாகனத்தை நோக்கி ஓடி வருவதும், லண்டன் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்திய தேசியக் கொடியைக் கிழிப்பதும் காட்டப்படுகிறது.

ஜெய்சங்கர் கலந்துரையாடலில் பங்கேற்ற இடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்கள் கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

வர்த்தகம், சுகாதாரம், கல்வி, மக்களிடையேயான உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கிய இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்த ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

The post ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி appeared first on Oruvan.com.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல
”சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

104 இந்தியர்கள் திரும்பி வந்த விவகாரத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும், அமெரிக்க இராணுவ விமானத்தில் அனுப்பும்போது கை விலங்கு போடும் நடைமுறை 2012 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ளது எனவும் அதன்படி, அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது எனவும், பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை எனவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

அத்துடன் சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது எனவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல எனவும், இந்தியர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ” அமெரிக்காவின் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் எந்த நடைமுறை மாற்றமும் இல்லை எனவும், கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்ததால் கழிவறைக்கு செல்வதில் கூட சிரமத்தை சந்தித்துள்ளனர் எனவும், திரும்பி அனுப்பப்படும் இந்தியர்களை மரியாதையுடன் நடத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

The post சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல appeared first on Oruvan.com.

புதிய இந்தியாவின் தலைமைத்துவம், பொருளாதார வலிமைக்கு உலக அளவில் அங்கீகாரம்: ஜெய்சங்கர் பெருமிதம்
‘புதிய இந்தியாவின் தலைமைத்துவம் மற்றும் பொருளாதார வலிமைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது,’ என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

ஸ்பெயின் நாட்டிற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அந்நாட்டுக்கு அமைச்சராக ஜெய்சங்கர் செல்வது இதுதான் முதன்முறை.

அங்கு சென்ற அவர் ஸ்பெயின் வெளியுறவு துறை அமைச்சர் ஜோஸ் மானுவேல் அல்பாரெஸை சந்தித்துபேசினார். அதை தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்ட கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது:

இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்து அனைவராலும் பாராட்டப்படுகிறது.

இந்தியா- ஸ்பெயின் உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன.

ஸ்பெயினின் உலகளாவிய தூதர்களிடம் உரையாற்ற ஒரு வெளிநாட்டு அரசு பிரதிநிதி அழைக்கப்பட்டது இதுவே முதல் முறை.

தங்கள் நாட்டின் தூதர்கள் மத்தியில் உரையாற்றும்படி ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அழைக்கும் போது, ​​அது ஏன் என்று சிந்திக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவின் இன்றைய நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. இன்றைய உலகின் நிலைமையைப் பார்க்கும்போது, ​​அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் நல்ல உறவுகளைக் கொண்டிருப்பது தான் தங்கள் நலன் என்று நினைக்கின்றன.

நமது புதிய இந்தியா, அதன் பொருளாதார வலிமை மற்றும் தலைமைத்துவம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இன்று, நாம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம், மூன்றாவது பெரிய நாடாக இருக்கத் தயாராக இருக்கிறோம்.

நமது நிலைப்பாடு, திறன்கள் மற்றும் யோசனைகள் காரணமாக உலகம் நம்மை அறிந்திருக்கிறது. இந்தியா இன்று உலகளாவிய உரையாடல்களுக்கு பங்களிப்பதாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் பேசக்கூடிய நிலையில் மிகக் குறைவான நாடுகள் மட்டுமே உள்ளன; அதேபோலத்தான் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுடனும் உறவு உள்ளது. குவாட் மற்றும் பிரிக்ஸ் உறுப்பினர்களாகவும் இந்தியா உள்ளது.

பிரதமர் மோடியால் இரண்டையும் செய்ய முடிகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

The post புதிய இந்தியாவின் தலைமைத்துவம், பொருளாதார வலிமைக்கு உலக அளவில் அங்கீகாரம்: ஜெய்சங்கர் பெருமிதம் appeared first on Oruvan.com.