ஜீவன் தொண்டமான் Archives - Oruvan.com

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இடையிலான சந்திப்பு இன்று(05) இடம்பெற்றிருந்தது.

தமிழ்நாடு, திருச்சி – சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற யாகப் பூஜைகளில் கலந்துகொண்ட பின்னர், நயினார் நாகேந்திரன்  ஜீவன் தொண்டமானின் இல்லத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், நயினார் நாகேந்திரனை பொன்னாடையுடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது, பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.

தனது அழைப்பை ஏற்று, திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற யாகப் பூஜைகளில் கலந்துக்கொள்ள வருகைத் தந்த நயினார் நாகேந்திரனுக்கு, ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

The post பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு appeared first on Oruvan.com.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் கேள்விக் கணைகளை தொடுத்த ஜீவன் தொண்டமான்
ஒரு வருட காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் எத்தனை வீடுகளை கட்டினீர்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டேன். பதில் கிடைக்கவில்லை .இன்றும் கேட்டேன் பதில் கிடைக்கவில்லை. சம்பள நிர்ணய சபை ஊடாக 1700 ரூபாவை நாங்கள் வழங்கும் போது, அது வேண்டாம் 2138 ரூபாய் தான் வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் எங்கே? ஒரு வருடம் முடிந்து விட்டது. சம்பள அதிகரிப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பெருந்தோட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வீதிகள் இன்றும் புனரமைக்கப்படவில்லை. அபிவிருத்தி செய்யப்படவில்லை. எமது இரு வருட ஆட்சியில் பொகவந்தலாவ வீதி, நுவரெலியா டன்சன் வீதிகளையும் புனரமைத்தோம். எமது அரசாங்கத்தில் பெருந்தோட்ட வீதி அபிவிருத்திக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. வீதி மற்றும் உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்தால் மாத்திரமே பொருளதாரத்தை மேம்படுத்த முடியும்.

அமைச்சர் ஒரு தவறான, பொய்யான விடயத்தை சபையில் குறிப்பிடும் போது அதனை சுட்டிக்காட்டி, திருத்துவதற்கு முற்படும் போது எமக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எமது ஒலிவாங்கி துண்டிக்கப்படுகிறது. இது தவறானதொரு செயற்பாடு. தவறுகளை சுட்டிக்காட்ட எமக்கும் இடமளியுங்கள்.

2000 பேருக்கு வீடுகள் வழங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டது பொய் என்று நான் குறிப்பிடுகிறேன். வீடுகள் வழங்கவில்லை. ஒரு சான்றிதழ் பத்திரமே வழங்கப்படுகிறது. அந்த பத்திரத்துக்கு எவ்வித சட்ட அந்தஸ்தும் கிடையாது.

அமைச்சராக நான் ஒரு வருட காலம் பதவி வகித்த போது 1300 இற்கும் வீடுகளை கட்டிமுடித்து அவற்றை கையளித்துள்ளேன். ஒரு வருட காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் எத்தனை வீடுகளை அரசாங்கம் கட்டியது என்று நேற்று கேட்டேன், பதில் கிடைக்கவில்லை. இன்றும் கேட்டேன், பதில் கிடைக்கவில்லை.

மனிதன் குரங்கில் இருந்து பரிமானமடைந்தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு உறுப்பினர் ஆளும் தரப்பில் உள்ளார். இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கத்துக்கு கைலாகு கொடுப்பதற்கு தாவுகிறார். இது சபை முறைமை இல்லை. இவ்வாறான செயற்பாடுகளை திருத்திக் கொள்ளுங்கள்.

காணி உறுதிப்பத்திரத்தையே வழங்கவுள்ளீர்கள். அதில் 237 நான் தயாரித்தது. இதில் நீங்கள் தயாரித்தது எத்தனை? 2000 சான்றிதழ்களை வழங்கி வீடு வழங்குகிறோம் என்று ஏன் பொய்யுரைக்கின்றீர்கள்? சம்பள அதிகரிப்பு கிடைக்குமா? கிடைக்காதா? ஒரு வருடம் கடந்து விட்டது. ஏதும் கிடைக்கவில்லை.

சம்பள நிர்ணய சபை ஊடாக 1700 ரூபாயை நாங்கள் வழங்கும் போது, அது வேண்டாம், 2138 ரூபாய் தான் வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் எங்கே? அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் உரையில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை விமர்சித்தார். குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவ்வாறாயின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஏன் உள்ளூராட்சி மன்றங்களை அமைத்தீர்கள். நாங்கள் கெட்டவர்கள், நீங்கள் நல்லவர்களா? கொஞ்சமாவது முதுகெலும்பு உங்களுக்கு இருக்க வேண்டும்” என்றார்.

The post சம்பள அதிகரிப்பு தொடர்பில் கேள்விக் கணைகளை தொடுத்த ஜீவன் தொண்டமான் appeared first on Oruvan.com.

இந்திய நிதி அமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்களை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடினார்.

மரியாதை நிமித்தமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, எமது சகோதர நாடான இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளுக்கும், உறுதியான ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் பன்முக ஆதரவுகள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துக்கொண்டார்.

The post இந்திய நிதி அமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான் appeared first on Oruvan.com.

நீதிமன்றில் ஆஜரான ஜீவன் தொண்டமான்
கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று (04) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த வழக்கில் 10 சந்தேக நபர்கள் தொடர்புடையவர்களாக அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

சீ.சி.டிவி காட்சிகளை பரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு தள்ளுபடி செய்தது.

இவ்வழக்கில் ஜீவன் தொண்டமான் சார்பாக வழக்கறிஞர் பெருமாள் ராஜதுரை முன்னிலையாகியிருந்தார். கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனம் சார்பாக பாலித்த சுபசிங்க மற்றும் சுரேஷ் கயான் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய இருந்தனர்.

The post நீதிமன்றில் ஆஜரான ஜீவன் தொண்டமான் appeared first on Oruvan.com.

காணி உரிமைகோரிய அறவழிப் போராட்டத்துக்கு இ.தொ.கா ஆதரவு!
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம்(21) ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

காணி உரிமைக்கான தினம் என்பது ஒரு கொண்டாட்டம் அல்ல! இது-நமது உரிமைக்காக, நமது நிலத்திற்காக, நமது வாழ்வாதாரத்திற்காக, நமது வரலாற்றுக்காக நாம் எழுப்பும் குரல் என்ற தொனிப்பொருளிலே நாளைய தினம்(21) இந்த காணி உரிமைக்கான போராட்டமானது நடைபெறவிருக்கின்றது.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் எமது மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்தில் மலையக மக்கள் இணைந்து கொள்ள வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவையாகும்.

இது தொடர்பான ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்…

மலையக மக்களின் விடுதலைக்கு காணி உரிமை என்பது அடிப்படையானதாகும். காணி உரிமைதான் எமது மக்களை தலை நிமிர்ந்து வாழ வைக்கும். ஆகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டு வருகின்றமையை அனைவரும் அறிவார்கள்.

அந்த வகையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகிய நாள் தொடக்கம் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த மக்களின் காணி உரிமைக்காக பாராளுமன்றத்திலும் , பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பலமாக குரல் கொடுத்து வருகிறேன். இந்தப் போராட்டம் கடைசி மலையைகத் தமிழனுக்கும் காணி உரிமை கிடைக்கும் வரை தொடரும்…

காணி உரிமை தொடர்பாக நான் அமைச்சராக இருந்தக் காலப்பகுதிகளில் இரண்டு அமைச்சரவை பத்திரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு

இனைந்து செயற்படுகின்ற அனைத்து சக்திகளையும் இனைத்துக்கொண்டு காணி உரிமை கோசத்தை இந்த நாடே கேட்கும் அளவிற்கு கொண்டுச்செல்ல வேண்டிய அவசியம் மலையக சமூகத்துக்கு இருக்கிறது .

ஆகவேதான் நாளை நடைபெறவிருக்கின்ற “காணி உரிமை தொடர்பான அமைதிவழி போராட்டத்திற்கு” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

The post காணி உரிமைகோரிய அறவழிப் போராட்டத்துக்கு இ.தொ.கா ஆதரவு! appeared first on Oruvan.com.

ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை – மக்கள் பக்கமே காங்கிரஸ் நிற்கிறது ; ஜீவன் தொண்டமான்
“ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் பின்னர் நாம் ஓடி ஒளியவில்லை. மக்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. அன்று, இன்றும், என்றும் காங்கிரஸ் மக்கள் பக்கமே நிற்கும்.”

இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையக மக்களின் பிரச்சினைகளை இந்திய பிரதமரிடம் எடுத்துக்கூற, அரச தரப்பில் உள்ள மலையக அமைச்சர்களுக்கு தகுதி இல்லை எனவும் அவர் கூறினார்.

பொகவந்தலாவ நகரப்பகுதியில் நேற்று நடைபெற்ற மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

” இந்திய பிரதமர் அண்மையில் இலங்கை வந்திருந்தபோது மலைய மக்கள் தொடர்பாக ஒன்றும் பேசப்படவில்லை. அது இந்திய பிரதமரின் தவறு கிடையாது.

சிலர், கட்சியொன்றுக்கு கொடிபிடித்துக்கொண்டு இருந்ததை அவதானித்தோம். அவர்கள் இன்று ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளனர். குரங்கு கையில் பூ மாலை கொடுத்ததுபோல அவர்களின் செயற்பாடு உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நான் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தேன். ஆனால் ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என தோழர் அறிவித்தார். ஆனால் அது இன்னும் நடக்கவில்லை. அதற்குரிய முயற்சியை முன்னெடுத்தால் நாம் ஆதரவு வழங்குவோம்.

மலையகத்தை பொறுத்தவரையில் சுயமரியாதைக்கான போராட்டம் அவசியம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்று பல்வேறு துறையில் சாதித்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். அதேபோல நாட்கூலி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். அதுவே நிரந்தர தீர்வாக அமையும்.

தொழிற்சங்க பிரச்சினை, சம்பள பிரச்சினை ஆகியவற்றுக்கு நாங்கள் தான் குரல் கொடுக்கின்றோம். அடாவடி தனத்தை காட்டினால் எங்களுக்கும் அடாவடி தனத்தை காட்ட முடியும். மலையகத்தில் உள்ள ஏனைய கட்சிகளை நாம் வெறுக்கவேண்டிய அவசியமில்லை.” – என்றார்.

The post ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை – மக்கள் பக்கமே காங்கிரஸ் நிற்கிறது ; ஜீவன் தொண்டமான் appeared first on Oruvan.com.

தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுகின்றது – ஜீவன் தொண்டமான்
தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான இவ்வாறான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் (21) தேர்தல் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கன்டவாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதில் எந்த நன்மையும் இல்லையெனக் குறிப்பிட்டதுடன்,

வேட்புமனு தாக்கல் செய்தபோது சில சபைகளின் வேட்புமனுக்கல் நிராகரிக்கப்பட்டன. அச்சபைகளை நீதிமன்றத்தின் மூலம் மீள பெற்றுள்ளோம்., சில சபைகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளோம்.

அத்தோடு மஸ்கெலியா உள்ளூராட்சி மன்ற சபை ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையாளரிடம் வினவியபோதும், அங்கீகரிக்கப்பட்ட நபர் வேட்புமனு தாக்கல் செய்யாமல் வேறு நபர் தாக்கல் செய்யப்பட்டமையினால் நிராகரிக்கபட்டது என தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய கட்சியிலே வேட்புமனு அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு சுகயீனம் கராணமாக அவரின் மருத்துவ சான்றிதல் சமர்பித்து அவருக்கு பதிலாக நியமித்திருந்த மாற்று நபருக்கு சமாதான நீதவானின் சான்றிதல் வழங்கியிருந்தும் எங்களுடைய கட்சியின் மஸ்கெலியா பிரதேச சபையின் வேட்புமனுவினை நிராகரித்து இருந்தனர். இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியபோது அவர் அதற்கு எவ்வித பதிலும் வழங்கவில்லை.

மேலும் ஜனாதிபதி அனுரகுமார திசாநயக்க அவர்கள் தேர்தல் பிரசாரங்களின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெரும் எங்களுடைய (தே.ம.ச) கட்சியை சார்ந்த உறுப்பினர்களுக்கே நிதி ஓதுக்கீடு மேற்கொள்வேன் என்றும் மாற்று கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக யோசிப்போம் என்றும் கூறிவருகின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேவேளை ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். அத்தோடு நாட்டின் ஜனாதிபதி என்பதை மறந்து எதிர்க்கட்சி தலைவர் என்று நினைத்து தேர்தல் மேடைகளில் பேசிவருகின்றார்.

மேலும் கண்டி தலதா மாளிகையில் பௌத்த மதம் சார்ந்து நடைபெறும் சமய வழிபாட்டை தாம் வரவேற்பதாகவும், எனினும் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்ட விடயம் வருத்தமளிப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

தேர்தலை முன்னிட்டு கல்வி ரீதியிலான செயற்பாடுகள், பொருளாதார ரீதியான செயற்பாடுகள், காணி உரிமை தொடர்பிலான செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடைசெய்யும் தேர்தல்கள் ஆணைக்குழு சமய செயற்பாடுகளுக்கு மட்டும் தடை விதிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

The post தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுகின்றது – ஜீவன் தொண்டமான் appeared first on Oruvan.com.

வேட்பு மனுக்கள் நிராகரிப்பின் பின்னணியில் சூழ்ச்சி – ஜீவன் தொண்டமான்
கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிர்வாக தவறு இருக்குமென ஆரம்பத்தில் நினைத்தோம். காரணம் என்னவென்று வினவியபோது, இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நல்ல முடிவு கிட்டும் என நினைக்கின்றோம். நீதிமன்றத்தை நம்புகின்றோம். இவர்கள் வழங்கியுள்ள காரணம், ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில்தான் உள்ளது.

ஏனைய தொகுதிகளில் எமது நிலைவரம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும்.” – என்றார்.

The post வேட்பு மனுக்கள் நிராகரிப்பின் பின்னணியில் சூழ்ச்சி – ஜீவன் தொண்டமான் appeared first on Oruvan.com.

கிராம, சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் பெருந்தோட்டங்களில் கடமையை செய்கின்றார்களா?
பெருந்தோட்ட பகுதிகளுக்கு கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சரியான முறையில் கள விஜயம் மேற்கொண்டு கடமையாற்றுகின்றார்களா? அவர்கள் தங்கள் கடைமைகளுக்காக எத்தனை முறை வருகை தந்துள்ளார்கள்? என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வியெழுப்பினார்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை மாத்திரம் வீடமைப்புத் திட்டத்தில் உள்வாங்காமல் வெளியிடங்களில் தொழில் புரிந்து குறித்த தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், மலையக மக்கள் வாழும் மாவட்டங்களில் எல்லை நிர்ணயம் செய்யும்போது பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்கள் சரியான முறையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் தோட்டபுற வைத்தியசாலைகள் அரசாங்க வைத்தியசாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுடன், தோட்ட சிறுவர் பாராமரிப்பு நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு திருடர் மற்றும் பிச்சைக்காரன் என்று குறிப்பிட்டத்தையும் கண்டித்திருந்தார்.

“தேசத்தைக் காப்பாற்றிய ஒருவரை திருடன் மற்றும் பிச்சைக்காரன் என்று அழைப்பது பகுத்தறிவற்றது.  நீதி அமைச்சர் தமது கூற்றை மீளப்பெற வேண்டும் என்பதுடன் மன்னிப்புக் கோர வேண்டும்.” எனவும் ஜீவன் தொண்டமான், கூறினார்.

The post கிராம, சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் பெருந்தோட்டங்களில் கடமையை செய்கின்றார்களா? appeared first on Oruvan.com.

மலையக மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியில் 67 வீதமானவை இந்தியாவின் நிதி – ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1350 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவை அதிகரித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சவால் விடுத்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

”1700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கையெடுத்த போது தேசிய மக்கள் சக்தியினர் எம்மை விமர்சித்தனர். 2138 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர். ஆனால், தற்போது 1700 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியதை கைத்தட்டி வரவேற்கின்றனர்.

அது எவ்வாறு? நாம் கூறும் போது அதனை கடுமையாக எதிர்த்தனர். தற்போது வரவேற்கின்றனர். மனசாட்சியுடன் நடந்துக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஒரு சவாலை விடுகிறேன். முடிந்தால் 1350 ரூபாவிலிருந்து 1 ரூபா அடிப்படை சம்பளத்தை அதிகரித்துக் காட்டுங்கள். பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் எமக்கு தெரியும்.

கடந்த அரசாங்கம் மற்றும் என்னை விமர்சித்தால் மலையக மக்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்பட போவதில்லை. மக்களுக்கு நன்மைகளை செய்யுங்கள். அதற்கு நாமும் உதவி செய்கிறோம்.

இந்த மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் வரவு – செலவுத் திட்டத்தில் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மலையக மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 67 வீதமான நிதி இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடையாகும்.

வீடுகள் எவ்வளவு கட்டினாலும் மலையக மக்களின் வாழ்க்கை மாறாது. அவர்களுக்கு காணி உரிமையை வழங்கினால் மாத்திரமே அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். அதற்கு அப்பால் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீடமைப்பு பற்றி நான் விமர்ச்சிக்கப் போவதில்லை. காணி உரிமையை வழங்க வேண்டும் என்பதே எமது கருத்து. நாம் பிச்சை கேட்கவில்லை. அது எமது உரிமையாகும். அதனையே கோருகிறோம்.

தேயிலை ஏற்றுமதியின் மூலம் 12 வீதமான தேசிய வருமானம் நாட்டுக்கு கிடைக்கிறது. இது இந்த மக்களின் பங்களிப்பாகும். எனவே, அவர்களின் அபிவிருத்திக்காக அதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

The post மலையக மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியில் 67 வீதமானவை இந்தியாவின் நிதி – ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.