ஜஸ்டின் ட்ரூடோ Archives - Oruvan.com

அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி : கனடா பிரதமர் ஜஸ்டின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அண்டை நாடான கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். இதற்கு கனடா அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவோவில் நேற்று அவர் கூறியதாவது:

புவியியல் காரணமாக அமெரிக்காவும் கனடாவும் அண்டை நாடுகளாக உள்ளன. கடந்த கால வரலாறால் இரு நாடுகளும் நண்பர்களாக உள்ளன. பொருளாதாரத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் மிக நெருங்கிய வர்த்தக பங்காளிகளாக உள்ளன. காலத்தின் கட்டளையால் இரு நாடுகளும் ஓரணியாக செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் இருண்ட காலங்களில் கனடா, உற்ற நண்பனாக செயல்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் போர் முதல் தற்போது கலிபோர்னியாவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயை அணைப்பது வரை அமெரிக்காவுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம்.

கடந்த கால நட்புறவை புதிய அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்து சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் கனடா பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்து வர்த்தக போரை தொடங்கி உள்ளார். எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்களும் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதிக்கிறோம். இது அமெரிக்காவுக்கு பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோ பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25 சதவீத வரியை விதித்து இருக்கிறார். இதுதொடர்பாக மெக்ஸிகோ அதிபர் கிளாடியா கூறும்போது, “அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நிதியமைச்சருக்கு உத்தரவிட்டு உள்ளேன். அதிக வரி விதிப்பால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இருதரப்பு ஒத்துழைப்பால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மெக்ஸிகோவில் இருந்து பழங்கள், காய்கனிகள், தானியங்கள், இறைச்சி, கார் உதிரி பாகங்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையால் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படும். அமெரிக்காவில் அத்தியாசிய பொருட்களின் விலை உயரக்கூடும்.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட தாதுக்கள், கட்டுமான பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் ஏற்றுமதியை கனடா நிறுத்தக்கூடும். இதனால் அமெரிக்காவில் எரிபொருள், தாதுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

சீன பொருட்கள் மீது 10 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். அந்த நாட்டில் இருந்து காலணிகள், ஜவுளி, விளையாட்டு உபகரணங்கள், பொம்மைகள் உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகின்றன. இவற்றின் இறக்குமதியும் பாதிக்கப்படும். இவ்வாறு அமெரிக்க தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிரீன்லேண்ட் விவகாரம்: ஆர்டிக், அட்லான்டிக் பகுதிகளுக்கு நடுவே கிரீன்லேண்ட் அமைந்துள்ளது. இந்த பகுதி தற்போது டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், கிரீன்லேண்டை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் என்று கூறி வருகிறார். இதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் முயற்சியை தடுத்து நிறுத்துவோம் என்று பிரான்ஸ் வெளியுறவு அதிபர் ஜீன் நோயல் பாரட் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பனாமா கால்வாய் விவகாரம்: கொலம்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பனாமா, அமெரிக்காவின் ஆதரவுடன் கடந்த 1903-ம் ஆண்டில் விடுதலை அடைந்தது. அந்த நாட்டில் அமெரிக்காவின் சார்பில் கடந்த 1914-ம் ஆண்டில் பனாமா கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. பசிபிக், அட்லாண்டிக் கடலை இணைக்கும் பனாமா கால்வாய் வழியாக ஆண்டுக்கு 15,000 சரக்கு கப்பல்கள் கடந்து செல்கின்றன.

கடந்த 1978-ம் ஆண்டு வரை பனாமா கால்வாய் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது பனாமா அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கால்வாயை மீண்டும் கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருகிறார். இதற்கும் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

The post அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி : கனடா பிரதமர் ஜஸ்டின் அதிரடி அறிவிப்பு appeared first on Oruvan.com.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை : ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு
கனடாவில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் என்ன செய்வது என்பது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கனடா பிரதமர் ஆக இருந்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. கட்சிக்குள் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்த அவர், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் நீடிப்பேன் என தெரிவித்திருந்தார். கட்சி விதிப்படி, தலைவராக இருப்பவரே பிரதமர் ஆக பதவி ஏற்கமுடியும். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களைச் சந்தித்த போது,

”நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு எடுத்துள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அடுத்து என்ன செய்வது என முடிவு செய்யவில்லை. அதற்கு நேரமும் இல்லை. தற்போது கனடா மக்கள் அளித்த பணிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.” என்றார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை : ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு appeared first on Oruvan.com.

கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல்
கனடாவில் அரசியல் கொந்தளிப்பு நீடித்துள்ள நிலையில், லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும், அமைச்சருமான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பதவி விலகினார். அவரின் பதவி விலகளுக்கு பின்னர் லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியெழுந்துள்ளது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் அடுத்த தலைவராக தெரிவுசெய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

அனிதா ஆனந்த் ட்ரூடோவின் மாற்றாகக் கருதப்பட்டார். இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று அனிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த தேர்தல் வரை தனது தொகுதி மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் சேவை செய்வேன் என்று கூறிய அவர், தனது எதிர்காலப் பயணத்தைப் பற்றியும் யோசித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். தமிழ் தந்தை மற்றும் பஞ்சாபி தாயின் மகளான அனிதா, ட்ரூடோவின் அமைச்சரவையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

அவர் பாதுகாப்பு மற்றும் பொது சேவை போன்ற அமைச்சகங்களையும் வகித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சராக, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அனிதா தலைமை தாங்கினார்.

The post கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல் appeared first on Oruvan.com.

பதவி விலக தயாராகும் ஜஸ்டின் ட்ரூடோ – கடும் நெருக்கடியில் லிபரல் கட்சி
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகப் போவதாக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஆனால் அவர் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்பது ஆண்டுகள் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்த அறிவிப்பை இன்று திங்கட்கிழமை முன்னதாகவே ட்ரூடோ அறிவிப்பார் செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் இந்த தகவல் வந்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் தேர்தலில் லிபரல்கள் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களிடம் மோசமாக தோல்வியடைவார்கள் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில், ட்ரூடோவின் பதவி விலகல் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் இல்லாமல் போகும் வாய்ப்பை ஏற்படுத்தும் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரூடோ எப்போது விலகப் போவதாக அறிவிப்பார் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும், ஆனால் புதன்கிழமை நடைபெறும் லிபரல் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தொடர்ச்சியான மோசமான கருத்துக் கணிப்புகளால் பீதியடைந்த லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரூடோவை ராஜினாமா செய்யுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், பதவி விலகல் குறித்து பிரதமர் அலுவலகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

மாறாக திங்கட்கிழமைக்கான பிரதமரின் வழக்கமான அட்டவணையின் கீழ், கனடா-அமெரிக்க உறவுகள் குறித்த அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ட்ரூடோ பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய லிபரல் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ட்ரூடோ உடனடியாக வெளியேறுவாரா அல்லது பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து, முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் (கனேடிய நாடாளுமன்றம்) மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டபோது, ​​ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post பதவி விலக தயாராகும் ஜஸ்டின் ட்ரூடோ – கடும் நெருக்கடியில் லிபரல் கட்சி appeared first on Oruvan.com.