ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Archives - Oruvan.com

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா செல்கிறார் மன்னர் சார்லஸ்
வெள்ளை மாளிகை செய்தியாளர் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள போதிலும், பிரித்தானிய மன்னர் சார்லஸின் அமெரிக்க விஜயம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இன்று திங்கட்கிழமை அமெரிக்காவை சென்றடைகின்றனர்.

சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காயமின்றி தப்பிய நிலையில், மன்னரின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என வெள்ளை மாளிகையும் பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதி செய்துள்ளன.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி ட்ரம்ப்புடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள மன்னர், அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டையொட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

ஈரான் போர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, உறவை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.

The post பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா செல்கிறார் மன்னர் சார்லஸ் appeared first on Oruvan.com.

அமெரிக்க புதிய இறக்குமதி வரி; இன்று முதல் நாடுகளுக்கு கடிதம்
இன்று (04) முதல், அமெரிக்கா தமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கும் வரி விகிதங்களைக் குறிப்பிட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் 170 இற்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது சிரமம் என குறிப்பிட்டுள்ள அவர், கட்டம் கட்டமாக 10 நாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பவுள்ளதாகவும், 20% முதல் 30% வரையிலான வரி வீதங்கள் விதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அது தவிர சில நாடுகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பெரும்பாலான நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் நேரடியாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதை விட குறைவாக, சுமார் 100 நாடுகளுக்கு 10% வரிகள் வரை விதிக்கப்படவுள்ளதாக, அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்கொட் பெசெண்ட் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய வர்த்தகக் கூட்டாளிகள் உயர் வரிகளுக்கு முகம்கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 20%, இந்தியாவுக்கு 26%, ஜப்பானுக்கு 24% வரி விதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த புதன்கிழமை வியட்நாமுடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்த ட்ரம்ப், அதில் வியட்நாமிய பொருட்களுக்கான அமெரிக்க வரிகளை அவர் முன்னர் அறிவித்த 46% இலிருந்து 20% ஆகக் குறைப்பதாக குறிப்பிட்டிருந்தார். பல அமெரிக்க பொருட்கள் வரி இன்றி வியட்நாமிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

The post அமெரிக்க புதிய இறக்குமதி வரி; இன்று முதல் நாடுகளுக்கு கடிதம் appeared first on Oruvan.com.

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – ட்ரம்ப் ஒப்புதல்
ஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500% வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் இந்த புதிய சட்டத்தை ஆதரித்து பேசிய அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “இந்த சட்டத்தை வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ட்ரம்ப் என்னிடம் கூறினார். உக்ரைன் மீதான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரும் ஒரு புதிய கருவியாக இந்த முயற்சி இருக்கும். ட்ரம்பின் இந்த முடிவு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.

நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள், உக்ரைனுக்கு உதவவில்லை என்றால், அமெரிக்காவிற்குள் வரும் உங்கள் தயாரிப்புகளுக்கு 500% வரி விதிக்கப்படும் என்பதுதான் இந்த சட்டத்தின் அடிப்படையாகும். இந்தியாவும், சீனாவும் புதினின் கச்சா எண்ணெயில் 70% வாங்குகின்றன. அவர்கள் அவரது போர் இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்குகிறார்கள். ரஷ்யா மீதான இந்த தடைகள் சட்டத்திற்கு எங்களிடம் 84 ஆதரவாளர்கள் உள்ளனர். எனவே அந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.

எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் தகவல்களின்படி, மே 2025ல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. மே மாதத்தில் இந்தியா, ரஷ்யாவிலிருந்து 4.2 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதைபடிவ எரிபொருட்களை வாங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

The post ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – ட்ரம்ப் ஒப்புதல் appeared first on Oruvan.com.

சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியா மீதான சில நிதித் தடைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது பஷர் அல்-அசாத்தை வெளியேற்றிய பின்னர் நாட்டை நிலைப்படுத்த உதவும் என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

“சிரியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் திட்டத்தை நிறுத்துவதற்காக” இந்த உத்தரவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டமாஸ்கஸின் இரசாயன ஆயுதத் திட்டம் தொடர்பாக சிரியா அரசாங்கம் சொத்துக்களை முடக்கி, சிரியாவிற்கு ஏற்றுமதி செய்வதை மட்டுப்படுத்திய 2004 அறிவிப்பை இரத்துச் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

The post சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப் appeared first on Oruvan.com.

24 மணி நேர கெடு முடிந்ததால் சீனா மீது 104% வரியை விதித்தது அமெரிக்கா
அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், ஏப்ரல் 9ம் திகதி (இன்று) முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் 24 மணி நேர கெடு முடிந்தும் அமெரிக்கா மீதான 34 சதவீத வரிவிதிப்பை சீனா திரும்பபெறவில்லை. இதனையடுத்து சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு இன்று புதன்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2ஆம் திகதி ட்ரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம், இலங்கை 44 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9ஆம் திகதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்துள்ளது என சீன வர்த்த அமைச்சகம் அறிவித்தது.

The post 24 மணி நேர கெடு முடிந்ததால் சீனா மீது 104% வரியை விதித்தது அமெரிக்கா appeared first on Oruvan.com.