ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Archives - Oruvan.com

டிரம்பின் தீர்மானத்திற்கு தடை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமெரிக்க அரசின் காவலில் உள்ள சில குவாத்தமாலா சிறுவர்களை நாடு கடத்துவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், சிறுவர்களின் சட்ட மற்றும் அரசியல் உரிமைகளை மீறியிருக்கலாம் என்ற அச்சத்தினால், நீதிபதி டிமொத்தி கெல்லி இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்த தீர்ப்பின் மூலம், அந்தச் சிறுவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் வழக்கு, இறுதி நாடுகடத்தல் உத்தரவு வழங்கப்படாத அல்லது சட்டத்தரணி பொது அலுவலரிடமிருந்து தன்னார்வ அடிப்படையில் திரும்பிச் செல்ல அனுமதி பெறாத குழந்தைகள், சட்டத்தின் கீழ் முழுமையான குடிவரவு விசாரணைகளை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தேசிய குடிவரவு சட்ட மையம் (NILC) தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 10 குவாத்தமாலா குழந்தைகள் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குவாத்தமாலாவில் துன்புறுத்தலுக்குள்ளான ஒரு சொந்த இனத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியையும் உள்ளடக்கிய இந்தக் குழந்தைகள், தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் கடுமையான அபாயங்களை சந்திக்க நேரிடும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

The post டிரம்பின் தீர்மானத்திற்கு தடை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Oruvan.com.

டிரம்ப் குறித்து விமர்சனம்: எலான் மஸ்க் மன்னிப்பு கோரினார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.

அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வந்தனர்..

முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் வரிக்குறைப்பு மசோதாவை மஸ்க் விமர்சித்தார். செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா முட்டாள்த்தனமானது என்று மஸ்க் தெரிவித்தார். .

இதையும் படியுங்கள்: சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம் – இந்தியர்களை எச்சரித்த அமெரிக்கா

தன்னை விமர்சித்த மஸ்க்குக்கு எதிராக அவரது நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த டிரம்ப், “எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது” என்று தெரிவித்தார்.

டிரம்ப் – எலான் மஸ்க் மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், ” கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து எனது சில பதிவுகள் அளவு மீறி சென்றுவிட்டன. அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post டிரம்ப் குறித்து விமர்சனம்: எலான் மஸ்க் மன்னிப்பு கோரினார் appeared first on Oruvan.com.

அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்கிறது இந்தியா
இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 2ஆம் திகதி ) முதல் இந்தியா மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளோடு ஏற்கனவே டொனால்டு டிரம்ப் வர்த்தகப் போரை தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய 87 சதவீத பொருட்கள் டிரம்ப் நிர்வாகத்தின் போட்டி வரி நடவடிக்கையால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு 66 பில்லியன் டொலர்கள்.

இந்நிலையில் இந்த போட்டி வரியை தவிர்ப்பட்டதற்காக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் வரியை இந்தியா குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த தகவலை கொடுத்தவர் டொனால்டு டிரம்ப். வெள்ளை மாளிகை ஓவல் அலுவலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா அதன் வரிகளை கணிசமாகக் குறைக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன். பல நாடுகள் தங்கள் வரிகளை கைவிடப் போகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இறக்குமதிக்கு வரியை குறைத்தால் அதனால் இந்தியாவுக்கு 23 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்கிறது இந்தியா appeared first on Oruvan.com.