ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பு Archives - Oruvan.com

மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா திரும்பிச் செல்ல நேரிடும் : ட்ரம்ப் எச்சரிக்கை
மானி​யத்தை ரத்து செய்​தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்​னாப்​பிரிக்கா​வுக்கு திரும்​பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். அமெரிக்​கா​வின் ஜனாதிபதியாக, டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்​பேற்​றார்.

இதையடுத்​து, அரசின் செல​வினங்​களை குறைப்​ப​தற்​காக தொழில​திபர் எலான் மஸ்க் தலை​மை​யில் அரசு செயல்​திறன் துறையை (டிஓஜிஇ) உரு​வாக்​கி​னார். அரசு ஊழியர்​களை குறைப்​பது, மானிய ரத்து உட்பட செலவு குறைப்பு தொடர்​பான பல்​வேறு ஆலோ​சனை​களை ட்ரம்ப் நிர்​வாகத்​துக்கு டிஓஜிஇ வழங்கி வந்​தது.

இதனிடையே, அரசின் ‘ஒன் பிக் பியூட்​டிபுள் பில்’ மசோதா நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில் நிறு​வனங்​களுக்​கான மானி​யம் ரத்து உட்பட செலவு குறைப்பு தொடர்​பாக டிஓஜிஇ பரிந்​துரை செய்த அம்​சங்​கள் இடம்​பெற​வில்​லை. குறிப்​பாக, வரி குறைப்​பு, சிறிய அளவில் செல​வினங்​களை குறைத்​தல் உள்​ளிட்ட அம்​சங்​கள் இதில் உள்​ளன.

இதனால் அதிருப்தி அடைந்த மஸ்க், கடந்த மே மாத இறு​தி​யில் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இந்​நிலை​யில், இந்த சட்டமூலம் மீது நாடாளு​மன்ற செனட் அவை​யில் நேற்று முன்​தினம் விவாதம் நடை​பெற்​றது. இந்த சட்டமூலம் நிறைவேறி​னால், அடுத்த 10 ஆண்​டு​களில் அமெரிக்​கா​வின் நிதி பற்​றாக்​குறை 3.3 ட்ரில்​லியன் டாலர் கூடு​தலாகும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த சூழ்​நிலை​யில், ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில், “எலான் மஸ்க் நிறு​வனங்​களுக்கு ஏராள​மான மானி​யம் வழங்​கப்​படு​கிறது. டெஸ்​லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்​ளிட்ட நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​படும் மானி​யத்தை ரத்து செய்​தால், எலான் மஸ்க் தனது கடைகளை மூடி​விட்டு தாய்​நா​டான தென்​னாப்​பிரிக்கா​வுக்கு செல்ல நேரிடும்’’ என பதி​விட்​டுள்​ளார்.

புதிய கட்சி தொடங்குவேன்: இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில் எலான் மஸ்க் தனது எக்ஸ் வலை​தளத்​தில், ‘‘என்​னுடைய நிறு​வனங்​களுக்​கான மானி​யத்தை ரத்து செய்​வேன் என ட்ரம்ப் கூறுகிறார். அப்​படி​யா​னால் அனைத்து நிறு​வனங்​களுக்​கும் ரத்து செய்ய வேண்​டும். அமெரிக்​கா​வின் பட்​ஜெட் சட்டமூலத்துக்கு நாடாளு​மன்ற செனட் அவை ஒப்​புதல் அளித்​தால், மக்​கள் நலனுக்கு முன்​னுரிமை அளிக்​கும் ஒரு புதிய கட்​சி​யை தொடங்​கு​வேன்​’’ என பதிவிட்​டுள்​ளார்​.

The post மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா திரும்பிச் செல்ல நேரிடும் : ட்ரம்ப் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைத்த பாகிஸ்தான் – பின்னணி என்ன?
அமெரிக்க நாட்டு ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு வரும் 2026-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென சமூக வலைதள பதிவு மூலம் பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உளள்து. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் தரப்பு பதிவிட்டுள்ளதாக உலக செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதில் அதிபர் ட்ரம்ப் முக்கிய பங்காற்றியதாகவும், இரு தரப்பிலும் நேரடியாக பேசியதாகவும் அவரை புகழ்ந்துள்ளது.

மேலும், இதற்கு முன்பு கடந்த காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில் சுமூக பேச்சுவார்த்தை தொடர்பாக ட்ரம்ப் முன்னெடுத்த நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் சுட்டிக்காட்டி உள்ளது.

அமைதிக்கான அவரது முயற்சிகள் பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து பங்களிக்கும் என்று பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைதி வேண்டி அவர் முன்னெடுக்கும் முயற்சிகள் பெரிதும் போற்றத்தக்கது எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு குறித்து ட்ரம்ப் கருத்து: அண்மையில் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து ட்ரம்ப் வசம் கேட்கப்பட்டது. “நான் நான்கு அல்லது ஐந்து முறை வரை அதை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க மாட்டார்கள். ஏனெனில், தாராளமய வாதிகளுக்கு தான் அந்த விருது வழங்கப்படும்” என ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். இதற்கு பிரதமர் மோடி அண்மையில் மறுப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தொலைபேசியில் ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெளிவுபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கூறி இருந்தார். இதையடுத்து ‘இந்தியா – பாகிஸ்தான் என இரு நாட்டு தலை​வர்​களே போர் நிறுத்​தத்​துக்கு காரணம். இதில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை’ என்று அண்மையில் ட்ரம்ப் உறு​திபட தெரிவித்திருந்தார்.

ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் என உலக அளவிலான போர் சூழலை தணிக்கும் முயற்சியை ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுவது குறித்த முடிவை இன்னும் சில நாட்களில் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரைத்த பாகிஸ்தான் – பின்னணி என்ன? appeared first on Oruvan.com.