ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Archives - Oruvan.com

இலங்கை ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியொன்றை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் அந்த வாழ்த்துச் செய்திக்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய்,

“இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்”

எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே, அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு முதலமைச்சர் விஜய் அளித்துள்ள பதிலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

The post இலங்கை ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிப்பு appeared first on Oruvan.com.

போர் சூழலால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நிலமைகளை கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து அந்த சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் கையிருப்புத் தேவைகளை நிர்வகித்தல், சுற்றுலா, ஏற்றுமதி, முதலீடு போன்ற துறைகளிலும், உணவுப் பாதுகாப்பு குறித்து ஏற்படக்கூடிய நிலைமைகள் மற்றும் இதன் மூலம் இந்நாட்டில் பணவீக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பிலும் அதை நிர்வகிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன. இந்த சூழ்நிலையால் இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும், சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தற்போதைய எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்ள தேவையான கையிருப்புகளைப் பேணுவது மற்றும் அதனை நிர்வகித்தல், உலக சந்தையில் ஏற்படவிருக்கும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த நிலைமைகளை நிர்வகிப்பது

குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

எரிவாயு கையிருப்புகளைப் பேணுவதற்கு போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாததால் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவது குறித்தும், அதற்காக பின்பற்றக்கூடிய குறுகிய கால மூலோபாயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சூயஸ் கால்வாய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற இடங்கள் மூடப்பட்டதால் கப்பல் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, இலங்கையுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வரும் கப்பல் நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது போதுமான உணவுக் கையிருப்பு உள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐரோப்பிய பிராந்தியத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு வழியாக இந்நாட்டிற்கு வருகை தருவதால், இந்நாட்டின் சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக விமானப் பயணத்தில் எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், அதற்காக தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் விளக்கினர்.

முதலீட்டுத் துறையில் ஏற்படக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதன்போது திட்டமிட்ட ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், தரவு மையங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக சலுகைப் பொதியை (பெகேஜ்) தயாரிக்குமாறும், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரியவின் தலைமையில் இந்த விடயங்களை ஆராயவும் நிதி அமைச்சிற்கு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.ஜி. அபோன்சு, சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக்க ஆகியோருடன் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை போன்ற துறைசார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post போர் சூழலால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு appeared first on Oruvan.com.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார்.

The post இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர appeared first on Oruvan.com.

புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை – நிகழ்வில் பங்கேற்ற அநுர
தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு குறித்த மாநாட்டில் (BBNJ) 60வது நாடு இணைவதைக் குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின் (UNCLOS) கீழ் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு குறித்த மாநாட்டிற்கு 60வது நாடு இணைவதைக் குறிக்கும் வகையில் பிரான்ஸ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று (25ஆம் திகதி) நியூயார்க்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிற நாட்டுத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கையெழுத்திட்ட உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 58வது உறுப்பு நாடாக இலங்கை உள்ளது. செப்டம்பர் 16, 2025 அன்று இலங்கை இதில் இணைந்தது. இதன் மூலம் மாநாட்டின் ஒரு தரப்பாக இலங்கை மாறியது.

இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் தொடர்பான ஒப்பந்தம் (BBNJ) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் இப்போது 60 நாடுகளால் கையொப்பமிடப்பட்டுள்ளது.

உலகின் மூன்றில் இரண்டு பங்கு பெருங்கடல்களை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் பல்லுயிர் பெருக்கத்தின் நன்மைகளைப் பாதுகாத்தல், நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்து கொள்ள முயல்கிறது. இந்த ஒப்பந்தம் 2026 ஜனவரி 17 முதல் அமலுக்கு வர உள்ளது.

The post புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை – நிகழ்வில் பங்கேற்ற அநுர appeared first on Oruvan.com.

ஐ.நா. பொதுச் செயலாளரை இன்று சந்திக்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை நேரப்படி இன்று (25) இரவு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்கவுள்ளார்.

இதற்கிடையில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் இன்று பல இராஜதந்திர சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளார்.

The post ஐ.நா. பொதுச் செயலாளரை இன்று சந்திக்கும் ஜனாதிபதி appeared first on Oruvan.com.

உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கம் ஆதரவு
பீங்கான் கைத்தொழிற் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக உள்ளூர் வர்த்தகர்களுடன் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும் உள்ளூர் வர்த்தகர்களைப் பாதுகாக்கவும் நாட்டில் உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய தற்போதைய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

டையில், குளியலறை உதிரிப்பாகங்கள் மற்றும் சுகாதாரப்பாதுகாப்புப் பொருட்கள் உள்ளிட்ட பீங்கான் பொருட்கள் குறித்து இதன் போது தனித்தனியாக கவனம் செலுத்தப்பட்டது. சந்தையில் தற்போது கிடைக்கும் மேற்படி பொருட்களின் தரத்தைப் பாதுகாப்பது குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இந்த நாட்டின் நுகர்வோருக்கு தரமான மற்றும் உயர்தர பீங்கான் பொருட்களை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மூலப்பொருட்களை பெறுவது உட்பட பீங்கான் கைத்தொழிற்துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, பீங்கான் கைத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதி துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கம் ஆதரவு appeared first on Oruvan.com.

புதிய கல்விச் சீர்த்திருத்தம் – நாட்டின் முழு சமூக கட்டமைப்பும் மாறும்
உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார மட்டத்தையும் ஒரேயடியாக உயர்த்தும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இது ஒரு அரசியல் நோக்கிலான திட்டமன்றி ஒரு சமூக நோக்கம் கொண்டது என்பதால் அதற்கு ஆதரவளிக்குமாறும் ஜனாதிபதி கோரினார்.

எந்தவொரு பிள்ளையும் 13 வருட கட்டாயக் கல்வியை எந்த காரணத்திற்காகவும் நிறைவு செய்யாமல் பாடசாலையை விட்டும் செல்லக் கூடாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (24) நடைபெற்ற கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழு உரை:

கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் பல விடயங்களை முன்வைக்க நம்புகிறேன். இந்த கல்வி முறையின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள இளம் தலைமுறை மற்றும் இந்த கல்வி முறை உருவாக்கிய பொருளாதாரம் குறித்தும் நம்மில் யாரும் திருப்தி அடைய முடியாது. எனவே, எங்களுக்கு மிகவும் விரிவான கல்வி சீர்திருத்தம் அவசியம். கல்வி சீர்திருத்தம் குறித்த கலந்துரையாடல் எழுந்தபோது, வரலாறு சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா போன்ற பிரச்சினைகளைப் பற்றி ஆராயத் தொடங்கினோம். உண்மையில், இது பாடத்திட்டத்தின் திருத்தம் செய்வது தொடர்பான சீர்திருத்தம் மட்டுமல்ல.

இது நமது முழு சமூகம், பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் புதிய மாற்றத்திற்கான ஒரு புதிய கல்வி சீர்திருத்தமாகும். பொருளாதார ரீதியாக, மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நமது நாடு உலகில் சுமார் 38 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி, நாம் அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்ட நாடாகும். நமது மக்கள் தொகை அடர்த்தி சீனாவை விட அதிகமாக உள்ளது.

இயற்கை வளங்களைப் பொறுத்தவரை, நமக்கு பெரிய வணிக வளங்கள் குறைவாக உள்ளன. எண்ணெய், எரிவாயு, தங்கச் சுரங்கம், போன்றவை எம்மிடம் இல்லை. எனவே, நம்மிடம் உள்ள மிகவும் மதிப்புமிக்க வளமாகவும் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கூர்மைப்படுத்தப்பட்டு மெருகூட்டப்பட வேண்டிய வளமாக இந்த மனித வளம் காணப்படுகிறது. எனவே, நமது பொருளாதார மூலோபாயங்களில், இந்த மனித வளத்தை மேம்படுத்துவதன் மூலம் நமது நாட்டை எவ்வாறு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வது என்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாக, தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோர் வீட்டுப் பணிப்பெண்கள், பயிற்றப்படாத, பாதியளவு பயிற்றப்பட்ட, பயிற்றப்பட்டவர்கள் என தொழில்முறையில் வகைப்படுத்துகிறோம். தொழில் ரீதியாக, நமது வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 3% பேர் மட்டுமே தொழில்முறையான வேலைகளில் பிரவேசிக்கின்றனர். 97% பேர் பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத மற்றும் பாதியளவு பயிற்றப்பட்டவர்களாகும். அதிலும் உலகில் இரண்டு சந்தைகள் இருப்பதைக் காணலாம். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஒரு சந்தை உள்ளது. உலகில் ஒரு தொழிலாளர் சந்தை உள்ளது. உலகின் மிகக் கீழ்மட்டத்திலுள்ள தொழிலாளர் சந்தைகளில் ஒன்றை நாம் அடைந்துள்ளோம்.

எனவே, பொருளாதார ரீதியாக, உலகில் ஒரு முன்னேற்றகரமான தொழிலாளர் சந்தையை நாம் அடைய வேண்டும். அதற்காக சிறந்த, உலகில் அந்த சமயத்தில் வெளிப்படும் அறிவைப் பெற்ற, பகிர்ந்து கொள்ளும் கல்வி முறை நமக்குத் தேவை. மறுபுறம், சமூக ரீதியாக நோக்கினால், நமது கல்வியறிவின்மையும் வறுமையும் ஒன்றாகச் செல்கின்றன. நீங்கள் கல்வியறிவற்றவராக இருந்தால், நீங்கள் குறிப்பிட்டளவு ஏழையாக இருப்பீர்கள். எனவே, வறுமையை ஒழிப்பதற்கான திட்டமாக நோக்கினால் கல்வி அதை ஒழிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால், முழுக் குடும்பமும் மீட்சி பெறும் என்று நம் கிராமங்களில் பொதுவாகக் கூறுவார்கள். எனவே, இந்த வறுமையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள கல்வி மிகவும் முக்கியமானது. மறுபுறம், நம் நாட்டில் குற்றம். சிறையில் உள்ளவர்களில் சுமார் 80% பேர் சாதாரண தர மட்டத்தை விடக் கீழ் மட்டத்தில் உள்ளனர்.

போதைக்கு அடிமையானவர்களில் சுமார் 70% பேர் எட்டாம் வகுப்பை விட குறைவாக கற்றவர்களாக உள்ளனர். அதன்படி, இந்த சமூகக் குற்றங்களுக்கும் போதைப்பொருள் மற்றும் கல்விக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. எனவே, இந்த பொருளாதார தேகத்திலும் இந்த சமூகத்திலும் சிறந்த மாற்றத்தை நாம் எதிர்பார்ப்பதாக இருந்தால், கல்விதான் அந்த மாற்றத்தின் வேர், ஆரம்பம், அடித்தளம் கல்வியாகும். அதனால்தான் இந்தக் கல்வியின் விரிவான மாற்றத்தின் அவசியத்தை எங்கள் கொள்கைப் பிரகடனத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். முதலில், இந்தக் கல்வியில் உள்ள சிக்கல்களின் அளவை நாம் அடையாளம் காண வேண்டும். ஏனென்றால் பொதுவான சமூகத்தில் இல்லாத பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு தேடுவதில் பலனில்லை. நமது கல்வி தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு நாம் தீர்வு காண வேண்டும்.

அதன்படி, எமது பிள்ளைகள் பாடசாலைகளை விட்டும் செல்வது முக்கிய சிக்கலாகும். 2019 ஆம் ஆண்டில் சுமார் 16,673 மாணவர்கள் பாடசாலைகளை விட்டுச் சென்றுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் 20,759 பேர் பாடசாலைகளை விட்டுச் சென்றுள்ளதோடு 2024 ஆம் ஆண்டில் 20,755 பேர் இவ்வாறு சென்றுள்ளனர். அதாவது, அவர்கள் இன்னும் கற்க வேண்டியிருக்கும் நிலையில் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள். அதாவது, 13 வருட கட்டாயக் கல்வியை நிறைவு செய்யாமல் எந்தப் பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேறக்கூடாது.

மேலும், 2006 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகள் 2011 ஆம் ஆண்டில் பாடசாலை சென்றனர். 2011 ஆம் ஆண்டில், 358,596 பிள்ளைகள் பாடசாலை சென்றனர். அந்தப் பிள்ளைகள் 2021 ஆம் ஆண்டில் சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொண்டனர். ஆனால், மூன்று இலட்சத்து பதினொறாயிரம் மாணவர்கள் மட்டுமே சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொண்டுள்ளனர். அதன்படி, சுமார் 47,000 பேர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். இந்தப் பிள்ளைகளைப் பாதுகாக்க, 13 வருட கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு கல்வி சீர்திருத்தங்கள் தேவை. நமது பிள்ளைகள் பாடசாலை செல்வதைப் பாதியில் நிறுத்தக்கூடாது. எந்தப் பிள்ளையும் அந்த நிலை ஏற்படக் கூடாது.

அவர்களின் பொருளாதார பின்னணி, பெற்றோரின் மோதல்கள், பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது, பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் போன்றவை பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. நாங்கள் கல்வித் திட்டத்தை உருவாக்கும் அதே வேளையில், மாணவர் ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் பாடசாலைக்கு செல்லவில்லை என்றால், ஒரு அரச அதிகாரி அந்தப் பிள்ளையை நேரில் சென்று விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் 13 ஆண்டுகள் கல்வி கற்கும் வரை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். அந்த பரிந்துரையும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, நம் நாட்டில் உயர்கல்வி பெரும்பாலும் கலந்துரையாடலுக்குரியதாக உள்ளது. ஆனால் நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை பாடசாலைக் கல்வி முறையில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படாத 98 பாடசாலைகள் உள்ளன. 10 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 115 பாடசாலைகளும் உள்ளன. 20 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 406 பாடசாலைகள் உள்ளன. 30 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 752 பாடசாலைகள் உள்ளன. 40 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1141 பாடசாலைகள் உள்ளன. 50 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1506 பாடசாலைகள் உள்ளன. இது மொத்த பாடசாலைக் கட்டமைப்பில் சுமார் 15% ஆகும்.

அதுமட்டுமல்லாமல், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3144 பாடசாலைகள் உள்ளன. அரச பாடசாலைகளில் ஏறத்தாழ 1/3 பங்கு 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன. இந்த நிலைமை நல்லதா? இந்தப் பாடசாலைகளில் இலக்கிய விழா, விளையாட்டுப் போட்டி, சுற்றுலா அல்லது சம வயது பிள்ளைகளுடன் பழகுவது போன்ற எதுவும் நடப்பதில்லை. எனவே, இந்தப் பாடசாலைக் கட்டமைப்பு குறித்து மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும். நாம் நிச்சயமாக இது தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும்.

சில பாடசாலைகள் மூடப்பட வேண்டும். சில பாடசாலைகள் இணைக்கப்பட வேண்டும். சில பகுதிகளில் புதிய பாடசாலைகள் தொடங்கப்பட வேண்டும். பாடசாலைகள் நிலைநிறுத்துவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும். ஒரு பிள்ளை ஒரு புதிய சமூகத்தையும், புதிய அனுபவங்களையும், புதிய வாய்ப்புகளையும் பெற வேண்டும். ஒரு சமூக சூழ்நிலையில் உள்ள பிள்ளைகள் கிராமத்திலிருந்து பாடசாலைக்கு, பாடசாலையிலிருந்து கிராமத்திற்கு என காணமல் போய்விடுகின்றனர் எந்தப் பிள்ளைக்கும் இத்தகைய நிலை ஏற்படக்கூடாது.

தங்கள் பிள்ளையை கிராமப் பாடசாலைக்கு அனுப்பாத சில பெற்றோர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை நகரப் பாடசாலைக்கு அனுப்ப போராடுகிறார்கள். ஆனால், அவர்கள் கிராமப் பாடசாலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகிறார்கள். அதன் அர்த்தம் என்ன? ஒவ்வொரு பாடசாலையாகச் சென்று அந்த பாடசாலை குறித்து ஆராய்வது தொடர்பில் கல்வி அமைச்சுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தியுள்ளோம். போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனென்றால், கட்டிடங்கள் மற்றும் மனித வளங்கள் இருந்தாலும், பாடசாலையில் 10 மாணவர்கள் இருந்தால், அந்தக் பிள்ளைகள் நகரப் பாடசாலைக்குச் செல்வதற்கு பஸ் வசதியை வழங்குவது பயனுள்ளதாக இருக்கும்.

பாடசாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள சிக்கலை மேலும் ஆராய்ந்தால், இங்கு எவ்வளவு மனித வளங்கள் வீணடிக்கப்படுகின்றன? நமது நாட்டில் சராசரி ஆசிரியர் – மாணவர் விகிதம் 1:18 ஆகும். அந்த விகிதம் மிகவும் உகந்த விகிதமாகும். ஆனால் இன்றும் கூட,சில மாவட்டங்களுக்குச் சென்று பார்த்தால், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 50 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் விகிதம் 1:5 ஆகும். ஹம்பாந்தோட்டையில், ஒரு பாடசாலையில் 30 மாணவர்கள் உள்ளனர். 9 ஆசிரியர்கள் உள்ளனர். மனித வளங்கள் வீணடிக்கப்படுகின்றன. திருகோணமலை குச்சவெளி பகுதியில் ஒரு பாடசாலை உள்ளது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். பண்டாரவளை ஹல்துமுல்ல கல்விப் பிரிவில் மூன்று பிள்ளைகள் மற்றும் மூன்று ஆசிரியர்களைக் கொண்ட ஒரு பாடசாலை உள்ளது. திருகோணமலையில் உள்ள மற்றொரு பாடசாலையில் நான்கு பிள்ளைகள் மற்றும் நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். இந்த பிள்ளைகளுக்கு எந்த பிரதிபலனும் இல்லை. ஆசிரியர்களுக்கும் எந்த பிரதிபலனும் இல்லை.

எமது இந்த கல்வி சீர்திருத்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பிள்ளைக்கும் உகந்த அளவிலான பாடசாலைக் கல்வியை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இந்தக் கல்வி சீர்திருத்தத்தின் மூலம், இந்த நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அது இங்கே ஒரு முக்கியமான காரணியாகும்.

வசதிகளுடன் கூடிய பாடசாலை, தேவையான மனித வளங்களைக் கொண்ட பாடசாலை, அவர்கள் வாழும் சூழலைத் தாண்டி சமூக செயல்பாடுகளைக் கொண்ட ஒரு பாடசாலை பிள்ளைகளுக்கு அவசியம். அப்படிப்பட்ட பாடசாலை தேவையில்லையா? நமது கல்வி குறிப்பிடத்தக்க அளவிற்கு எமது பிள்ளைகளை இயந்திரமயமாக்கியுள்ளது. இன்று, கிராமங்களில் கரப்பந்தாட்ட மைதானம் கூட இல்லை.

அறுவடை முடிந்ததும், வயல்களில் எல்லே விளையாடுவார்கள். கிராமத்தின் குளங்களில் நீந்துகிறார்கள். வெசாக் பண்டிகையின் போது, கிராமத்தின் பிள்ளைகள் ஒன்றுகூடி, சித்திரங்கள் வரைந்து தோரணங்கள் போடுவார்கள். இன்றைய பிள்ளைகளிடையே இதுபோன்ற செயல்பாடுகள் காணப்படுவதில்லை. இயந்திரங்களைப் போல, ஈரம் இல்லாத, இரக்கம் இல்லாத, சமூகத்தின் மீதான பொறுப்பற்ற ஒரு தலைமுறை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது பிள்ளைகள் எமது காலத்தைப் போன்று இல்லை என்று சில நேரங்களில் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்கிறேன். அது உண்மைதான். எமது காலத்தைப் போன்று, அதை விடச் சிறந்த பிள்ளைகள் இருக்க வேண்டும். டியூஷன் அதிகாலை 4 மணிக்குத் தொடங்குகிறது. வகுப்புகள் முடிந்த பிறகுதான் அவர்கள் பாடசாலைக்குச் செல்கிறார்கள். அந்த பிள்ளையின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பாடசாலைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் வகுப்பிற்குச் செல்கிறார்கள். அந்தக் பிள்ளைக்கு ஒரு பிள்ளைப் பருவம் தேவை இல்லையா? ஒரு கவிதையையோ பாடலையோ இரசிக்காத, ஒரு நாவலைப் படிக்காத, இலக்கியத்தால் வளர்க்கப்படாத, எந்த சமூக செயல்பாடும் இல்லாத இயந்திரங்களைப் போன்ற பிள்ளைகளை நாம் வளர்க்க விரும்புகிறோமா? இது போன்ற ஒரு நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது.

இந்தப் பிள்ளையின் மீது சுமத்தப்பட்டுள்ள கல்விச் சுமையைக் குறைக்க வேண்டும், அது நமது பொறுப்பு. பிள்ளை எழுப்பும்போது தூக்கம், வாகனத்திலும் தூக்கம்,பாடசாலையிலும் தூக்கம். அந்தப் பிள்ளைகள் பாவம் இல்லையா? ரோபோக்கள் போல வளர்க்கப்படும் பிள்ளைகளின் தலைமுறையை நாம் மாற்ற வேண்டாமா?

பிள்ளைக்கு சுறுசுறுப்பான வாழ்க்கையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், முழுமையான கல்வி, பாடவிதானம், கற்பித்தல், அதற்கு உள்ள எடை மற்றும் அளவை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை நாம் கொண்டு வருவோம். பாடசாலையில் சேரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ மாற ஆசைப்படுகிறார்கள். கல்வி என்பது ஒற்றை நேர்கோட்டுப் பாதை அல்ல. கல்வி என்பது ஒரு பரந்த பாதை. ஆனால் என்ன நடந்துள்ளது? சமூக மதிப்புகள், சமூக மரியாதை மற்றும் தொழில்முறை மதிப்புகள் என இரண்டு அல்லது மூன்று துறைகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளை ஒரு நல்ல வாழ்க்கையை வாழவேண்டுமானால், அவர்கள் ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

உங்கள் குடும்பத்தை கௌரவிக்க, அவர்கள் ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ மாற வேண்டும் என்று நினைப்பது தவறு. மருத்துவர் அல்லது பொறியாளாலரிடம் ஒரு சமூகம் தங்கியில்லை. பல்வேறுபட்ட தொழிற்துறைகளின் கூட்டாகவே ஒரு சமூகம் இருக்கிறது. இந்த சமூகத்திற்கு சகல துறையிலும் தொழில்வாண்மை தேவை. ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்வாண்மை வழங்கப்பட வேண்டும்.

பாதைகள் பரந்து விரிந்துள்ளன, இந்தப் பல பாதைகள் வழியாக நாம் பிளை்ளையை தொழில்வாண்மை நிலைக்குக் கொண்டு வர வேண்டும். நமது கல்வி சீர்திருத்தங்கள் அந்த இலக்கைக் கொண்டுள்ளன. ஒரு பிள்ளை பின்பற்ற ஒரு பாதை தேவை. இன்று எது பாதையாக மாறியுள்ளது? ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் இடையிலான கலந்துரையாடல் இல்லாமல் ஒரு பிள்ளை ஒரு பாதையைப் புரிந்து கொள்ள முடியாது. இன்று, பாதைகள் என்பது அதிக சமூக மதிப்புள்ள விடயங்களைக் கற்றுக்கொள்வதாக மாறிவிட்டன.

மருத்துவ பீடத்திற்கு செல்ல முடியாத பிள்ளை விவசாய பீடத்திற்கு வருகிறது. மருத்துவராக முடியாததால் தான் அவர் ஒரு விவசாய விஞ்ஞானியாக மாறுகிறார். இன்று, சாதாரண தரத்திற்கும் உயர் தரத்திற்கும் இடையே ஒரு பாரிய இடைவெளி உள்ளது. கல்வி சீர்திருத்தத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் 06 ஆம் வகுப்பில் ஆரம்பிக்கிறது, 2027 ஆம் ஆண்டில் 07 ஆம் வகுப்பில், 2028 ஆம் ஆண்டில் 08 ஆம் வகுப்பு மற்றும் 2029 ஆம் ஆண்டில் 09 ஆம் வகுப்பில் தொடங்கும். 9 ஆம் வகுப்புக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. இந்த சீர்திருத்தங்கள் 2026 இல் தொடங்கினால், 2029 இல் தான் தெரிவுப் பாதை பற்றிய கலந்துரையாடல் ஆரம்பிக்கும். மனித நாகரிகத்தைப் படிக்கும் ஒரு வரலாற்றாசிரியராக மாறுவதற்கும் வழி இருக்கிறது. மதங்களைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்ட ஒரு பிரஜையை உருவாக்குகிறது. அவ்வாறு அல்லவா தேவைப்படுகின்றது? ஒவ்வொரு பிள்ளையும் புவியியல், சமூகவியல், மதங்கள் மற்றும் வரலாறு பற்றி அடிப்படை அடித்தளங்களைப் பெறுகிறது. இருப்பினும், அதையும் தாண்டிய ஒரு விசேட அறிவை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு ஒரு வழி இருக்கிறது.

கிராமங்களில், மக்கள் தங்கள் பிள்ளைகள் உயர் தரம் வரை படித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அந்தப் பெற்றோர்கள் உயர் தரம் என்பது தங்கள் பிள்ளையின் கல்வியின் இறுதி நிலை என்று நினைக்கிறார்கள். உயர் தரம் என்பது கல்வியின் இறுதி நிலை அல்ல. அதற்கு அப்பால், ஒரு தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உயர் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போதுள்ள தொழில் பயிற்சி கல்வி நிறுவனங்கள் நவீன உலகுக்கு ஏற்றதாக இல்லை. சில தொழிற்கல்வி மையங்கள் தச்சுப் பட்டறைகள் போன்றவை. இரும்பு பட்டறைகள் போன்றவை. அப்படிப்பட்ட இடத்துக்கு பிள்ளைகள் வருவதில்லை.

அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் பிள்ளைகள் எத்தனை பேர் இறுதி வரை படித்துள்ளனர் என கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது மிகவும் சிறிய எண்ணிக்கையாக இருக்கும். பலர் தொழிற்பயிற்சி கல்விக்கு வந்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து விட்டு விடுகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் பிள்ளைக்கும், தொழிற்பயிற்சி மையத்தில் சேரும் பிள்ளைக்கும் ஒப்பீட்டு ரீதியில் வேறுபாடு உள்ளது. தொழிற் பயிற்சி நிலையம் பல்கலைக் கழகப் பட்டம் பெற முடியாதவர்களுக்கான இடம் அல்ல. தொழில் பயிற்சி என்பது தெரிவுக் கல்வி அல்ல. அடிப்படைக் கல்வி என்பது எங்கள் கொள்கை ஆகும். 2033க்குள் அறிவு மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய 40 நவீன தொழில் பயிற்சி மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஒரு மாவட்டத்திற்கு இரண்டு அமைக்கப்படும். 13 வருட கல்விக்குப் பிறகு, பிள்ளைக்கு திறந்த தொழிற்கல்விக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. 13 வருட கல்வியில் இருந்து எந்த ஒரு பிள்ளையும் வெளியேறவோ அல்லது கல்வியில் தொலைந்து போகவோ நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

சராசரியாக, ஒரு பிள்ளை 13 ஆண்டுகள் பாடசாலைக்குச் செல்கிறது. ஒரு ஆசிரியர் 30 ஆண்டுகள் பாடசாலைக்குச் செல்கிறார். என்னுடன் உயர்தரம் படித்தவர்கள் இன்னும் பாடசாலைக்குச் செல்கிறார்கள். எனவே, இந்த நவீன கல்வியை வழங்குவதற்குத் தேவையான அறிவும் அனுபவமும் நம்மிடம் உள்ளதா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆசிரியர்களிடம் உள்ள அறிவு போதுமானதாக இல்லை. அவர்களின் அறிவு புதுப்பிக்கப்படவில்லை. பிறகு எப்படி ஒரு நவீன பிள்ளையை உருவாக்க முடியும்? அதற்கு, நமக்கு ஒரு வலுவான ஆசிரியர்கள் தலைமுறை தேவை. இந்தக் கல்வியில் பிள்ளைகளுக்கு சுதந்திரமும் இல்லை. ஆசிரியர்களுக்கு சுதந்திரமும் இல்லை.

எனவே, கல்வியில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு தரமான மாற்றம் தேவை. எனவே, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டமும் தொடங்கப்படும். அப்போது நாம் மேலதிகமான ஆசிரியர்களை வைத்திருக்க வேண்டும். தற்போதுள்ள ஆசிரியர் மனித வளங்களை நாங்கள் முகாமைத்துவம் செய்வோம். பாடங்களை அரசியல்வாதிகள் தேர்வு செய்யக்கூடாது. அது கல்வி சீர்திருத்தத்திற்குத் தேவையான நிபுணர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி செய்யப்படும் ஒன்று. பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் சீர்திருத்தத்தை கல்வி நிபுணர்களிடம் நாம் ஒப்படைத்துள்ளோம். அரசியல் அதிகாரம் காலக்கெடுவையே நிர்ணயிக்க வேண்டும். வெற்றிகரமான கட்டமைப்பு மாற்றத்தை அடைய அரசியல் அதிகாரம் உள்ளது.

கல்வியில் என்ன மாதிரியான கட்டமைப்பு மாற்றம் தேவை என்பதை நாங்கள் விவாதிப்போம். அது குறித்த உள்ளடக்கம், பாடங்களுக்கான காலம் தொடர்பில் நாம் கவனத்தில் கொள்ளலாம். நாம் ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் அல்ல. எனவே, நாம் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து இந்தப் பயணத்தில் ஈடுபட வேண்டும். இலங்கையின் பொருளாதார அமைப்பின் வலுவான இருப்புக்கு இந்தக் கல்வி சீர்திருத்த செயல்முறை மிகவும் முக்கியமானது. எனவே, இந்தப் பணியை மேற்கொள்வதில் அனைத்து அரசியல் குழுக்களும் கைகோர்க்க வேண்டும். கிராமத்தில் இந்தக் கல்வி முறையைத் தொடங்கும்போது, அதற்கு எதிரான குழுவில் இணையாது, நல்ல விடயங்களுடன் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள்.

சில பாடசாலைகள் பாரிய கட்டிடங்களையும் பாரிய நடன அரங்குகளையும் கட்டியுள்ளன. ஆனால் அது கல்விக்கு பயனளிக்கவில்லை. ஒவ்வொரு பிள்ளைக்கும் உகந்த கல்வியை வழங்க, இந்த கல்வி முறை சீர்திருத்தப்பட வேண்டும். தேசிய பாடசாலை கட்டமைப்பை விட மாகாண பாடசாலை கட்டமைப்பில் அரசியல் அதிகமாக நுழைந்துள்ளது. மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகள் அரசியல் நலன்களுக்கு பலியாகிவிட்டனர். மாகாண பாடசாலைகளை விட தேசிய பாடசாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்ற கருத்து பெற்றோர்களிடையே உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். எனவே, புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒரு நல்ல கருத்தாடல் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் தற்போதுள்ள மனிதவளப் பிரச்சினை, தேவையான திறன் கொண்ட குழுக்கள் இல்லாமையாகும். தொழில்முறை அதிகாரிகள் இல்லை. எனவே, இந்த அரச அமைப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. சிறந்த மனிதவளமும் தொழிற்படையும் தேவை. எனவே, இந்த கல்வி சீர்திருத்தம் உறுதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு அரசியல் நோக்கம் அல்ல. இது ஒரு சமூக நோக்கம். அனைவரும் இதற்கு பங்களிக்க வேண்டும்.

The post புதிய கல்விச் சீர்த்திருத்தம் – நாட்டின் முழு சமூக கட்டமைப்பும் மாறும் appeared first on Oruvan.com.

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கலாநிதி கிறிஸ் எலியாஸ் (Dr. Chris Elias) தலைமையிலான கேட்ஸ் நிதியத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் இடையேயான சந்திப்பு நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான பல முக்கியமான விடயங்கள் பற்றி இங்கு ஆராயப்பட்டது. விவசாய நவீனமயமாக்கல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களை புதிய தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கேட்ஸ் நிதியம் இந்நாட்டில் செயல்படுத்த எதிர்க்கும் ஒரு முதன்மைத் திட்டமான உள்ளடக்கிய டிஜிட்டல் விவசாய பரிமாற்றத் திட்டம் (Inclusive Digital Agriculture Transformation) குறித்து கலாநிதி எலியாஸ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார். விவசாயத் துறையில் தரவு அடிப்படையிலான முடிவெடுப்பதை ஒத்துழைக்கும் அதேவேளை சிறிய அளவிலான விவசாயிகளுக்கு சேவைகளை வழங்குவதும் முக்கியம் என்று சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டம் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் கிராமப்புற சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இரு தரப்பினரின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறினார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்வதன் மூலம் கேட்ஸ் நிதியம் பெற்றுள்ள நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை ஜனாதிபதி பாராட்டினார்.

நவீன உலகளாவிய தொழில்நுட்பங்களுடன் கிராமப்புற சமூகங்களை ஒருங்கிணைக்கும் நாட்டின் முயற்சிகளை ஆதரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கேட்ஸ் நிதியத்திடம் கோரிக்கை விடுத்ததோடு இலங்கையுடனான அதன் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான இலங்கையின் மூலோபாயத் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் வளர்க்கவும் விவசாயத் துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினர்.

கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான சமூக-பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு முழு ஆதரவளிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

நாட்டின் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கமும் ஜனாதிபதியும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்கு நன்றி தெரிவித்த கலாநிதி கிறிஸ் எலியாஸ், இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றத்தைப் பாராட்டினார். இலங்கையுடன் ஒரு பரந்த உறவை ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அனைத்தையும் உள்ளடக்கி அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்த பங்களிக்க முடிந்ததற்கு நன்றி தெரிவித்த அவர், விவசாயம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முன்னேற்றம் மற்றும் நிலையான தீர்வுகளுக்கான பொதுவான கருத்தாடலை உருவாக்குவதற்கான இரு தரப்பினரின் உறுதிப்பாட்டை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.

The post கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு appeared first on Oruvan.com.

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு
நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (08) தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆம் பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவிப்புகளை சமர்ப்பிக்கும் போது சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

The post ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு appeared first on Oruvan.com.

அமைதி, நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளுக்கும் ஒரே வகையான சவால் – ஜனாதிபதி அநுரவை சந்தித்த தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கு இது தனது முதல் விஜயம் என்றும், கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமாக இருந்ததாகவும் கூறிய முன்னாள் ஜனாதிபதி ம்பெக்கி, இதுபோன்ற சமயத்தில் இலங்கைக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்று கூறினார்.

தென்னாபிரிக்காவும் இலங்கையும் புவியியல் ரீதியாக தூரமாக இருந்தாலும், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் கொண்டுள்ளதன் அடிப்படையில் இரு நாடுகளும் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன என்றும், பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதில் இலங்கை ஜனாதிபதியுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு வகையான மக்கள் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய நல்லிணக்க சவால்களை இலங்கை ஜனாதிபதி சமாளிக்க முடியும் என்று ம்பெக்கி நம்பிக்கை தெரிவித்தார்.

நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் செண்டில் ஷால்க் ( Sandile Schalk), தபோ ம்பெக்கி நிதிய பிரதம நிர்வாக அதிகாரி மெக்ஸ்வெல் போக்வானா (Maxwell Boqwana), தபோ ம்பெக்கி நிதிய பிரதம செயல்பாட்டு அதிகாரி லுக்ஹன்யோ நீர் (Lukhanyo Neer) ஆகியவர்களும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

கெபிடல் மகாராஜா குழுமத்தின் நிறைவேற்றுக் குழுமப் பணிப்பாளர் ஷெவன் டெனியல் மற்றும் கெபிடல் மகாராஜா குழுமத்தின் பணிப்பாளர் அனுஷ்கா லெவ்கே ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

The post அமைதி, நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளுக்கும் ஒரே வகையான சவால் – ஜனாதிபதி அநுரவை சந்தித்த தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி appeared first on Oruvan.com.