ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Archives - Oruvan.com

ஜனாதிபதி அநுரகுமாருக்கு மனோ கணேசன் பகிரங்க எச்சரிக்கை
எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துக்கொள்வனவில் நிலவும் ஏகபோகக் கும்பல்களை ஒழிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்து வரும் நிலையில், அரசாங்கத்திற்குள்ளேயே புதிய கும்பல்கள் உருவாகி வருவதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பழைய ஏகபோகங்களை உடைக்க ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.

இருப்பினும், அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட நிறுவனங்கள், வெவ்வேறு போர்வையில் புதிய ஏகபோகக் கும்பல்களாக உருவெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘பழைய கும்பல்களுக்குப் பதிலாக புதிய கும்பல்களைக் கொண்டு வருவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை’ எனத் தனது ‘X’ தளப் பதிவிலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post ஜனாதிபதி அநுரகுமாருக்கு மனோ கணேசன் பகிரங்க எச்சரிக்கை appeared first on Oruvan.com.

புதுடில்லியில் இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இந்தியாவின் புதுடில்லியில் தற்போது நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரு நாட்டுத் தலைவர்களும் அங்கு வருகை தந்துள்ள நிலையிலேயே, இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்குவது குறித்தும் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.

குறிப்பாக, வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் இரு நாடுகளும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளன.

உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ள இந்த உச்சிமாநாட்டின் இடையே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏனைய நாடுகளின் தலைவர்களுடனும் சிநேகபூர்வ சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post புதுடில்லியில் இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை appeared first on Oruvan.com.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் ; ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (18.11.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எம்முடைய அரசாங்கத்தை ஜனநாயக ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ வீழ்த்த முடியாது. இதனால், இனவாதத்தை தூண்டி இந்த ஆட்சியை கவிழ்க்க சிலர் விரும்புகின்றனர்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடி ஒரு நடந்த விடயங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளேன்.

நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலையை அகற்றவோ மேலும் கட்டுமான வேலைகளை செய்யவோ அல்லது வேறு எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. இவ்வாறிருக்க, ஹனுமான் தீ வைத்தது போல, தற்போது இந்தப் பிரச்சினையை இனவாதமாக மாற்றி தீ வைக்க சிலர் முயல்கின்றனர்.

நாங்கள் இனவாதத்திற்கு மீண்டும் இடமளிக்க மாட்டோம் என உறுதியாக கூறிகொள்கின்றோம். நாம் மட்டுமல்ல, இந்த நாட்டின் பௌத்த மக்களும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

The post திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் ; ஜனாதிபதி வெளியிட்ட தகவல் appeared first on Oruvan.com.

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா பயணம்
ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, உலக நாட்டு தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இம்மாநாட்டில் 193 அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள்.

இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்று ஜனாதிபதி அநுர உரையாற்றவுள்ளார்.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர், ரஷ்ய ஜனாதிபதி , சீன ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்களுடனும் இருதரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.

ட்ரம்பின் வரி விதிப்பால் உலக நாடுகள் இன்று பிளவு பட்டு நிற்கின்றன. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவில் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்தில் இம்முறை ஐ.நா. மாநாடு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

The post ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா பயணம் appeared first on Oruvan.com.

நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, இந்திய – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.

சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இராப்போசன விருந்து வழங்கினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்.

The post நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளை டில்லியில் சந்தித்துக் கலந்துரையாடிய அநுர
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தியக் கைத்தொழில் சம்மேளத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசு உடன்பாடு தெரிவித்தது.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்தச்  சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.

The post இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளை டில்லியில் சந்தித்துக் கலந்துரையாடிய அநுர appeared first on Oruvan.com.

மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு – இந்தியா – இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிப்பு
“மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒப்புக்கொண்டனர். ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.” – என்று இந்தியா – இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்து இரு தரப்பு பேச்சு நடத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதற்கான நிகழ்ச்சியில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,

“இந்தியாவும் இலங்கையும் தங்கள் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதற்கான எதிர்கால நோக்கத்தை ஏற்றுக்கொண்டன. விரைவில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிக்க முடிவு செய்துள்ளன. மின்சார இணைப்பு மற்றும் பெற்றோலியக் குழாய்களை நிறுவுவதன் மூலம் ஆற்றல் உறவுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.

பரந்த அளவிலான பேச்சில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா – இலங்கை பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்த இரு தரப்பும் முடிவு செய்துள்ளன. டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு ஆகியவை ஒத்துழைப்பின் முக்கிய தூண்களாக இருக்கும். மின்சாரம் இணைப்பு மற்றும் பெற்றோலியக் குழாய்களை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இந்தியா வழங்கும்.

இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவை தொடங்கப்படும். எங்கள் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளோம்.

மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்த விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் தொடர வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் விருப்பங்களை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று இந்தியா நம்புகின்றது.

இந்தியா இதுவரை இலங்கைக்கு 5 பில்லியன் டாலர் கடன் மற்றும் மானிய உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு உள்ளது. இந்தியாவின் திட்டங்களின் தேர்வு எப்போதும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்பதை அடிப்படையாகக் கொண்டது” – என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,

“இலங்கை ஜனாதிபதியான பிறகு, இது எனது முதல் வெளிநாட்டுப் பயணம். டில்லிக்கு வர முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். எனக்கு வழங்கப்பட்ட அழைப்புக்காகவும், நான் உட்பட ஒட்டுமொத்த தூதுக் குழுவுக்கும் அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் மேம்பட வேண்டும்.

இரு நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வை காண விரும்புகின்றோம். அந்தப்  பகுதியில் (இலங்கையை ஒட்டிய இந்திய பகுதியில்) இழுவை படகுகள் மூலம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில், அது இந்தத் தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும்.

பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே, இலங்கையும் அதே பாதையில் செல்கிறது. இவ்விடயத்தில் ஆதரவளிப்பதாக பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாங்கள் சந்தித்தோம். அந்த புதைகுழியில் இருந்து வெளிவர இந்தியா எங்களுக்கு பெரிதும் உதவியது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்பதை நான் அறிவேன்.

சமூக பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவை நம் நாட்டு மக்கள் எங்கள் இரு தரப்பையும் அதிகாரத்துக்குத் தேர்ந்தெடுத்ததற்கான அடிப்படைக் காரணங்கள். சமீபத்தில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் இது போன்ற ஒரு வரலாற்று வெற்றியை நாங்கள் பெற்றதில்லை. இலங்கை மக்களால் வெளிப்படுத்தப்பட்ட செய்தி, இலங்கையில் ஒரு புதிய கலாசாரம் உருவாக வழிவகுத்தது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள், அனைத்து சமூகங்களையும், சமயங்களையும் சேர்ந்தவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.” – என்று தெரிவித்தார்.

இதையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “இரு தரப்பு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு, வாழ்வாதாரப்  பிரச்சினைகளை காரணியாகக் கொண்டு, மனிதாபிமான முறையில் இவற்றைத் தொடர்ந்து தீர்க்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற 6 ஆவது கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தை அவர்கள் வரவேற்றனர்.

பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மூலம் நீண்ட கால மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சிறப்பான உறவைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தொடர்ந்து ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு – இந்தியா – இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தின் போது, ​​இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறையினரையும் ஜனாதிபதி சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதலீடுகளை ஈர்க்கும் சில சந்திப்புகளையும் அவர் நடத்த உள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தீர்மானங்கள் இல்லை

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட உயர்மட்ட அரச குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன.

அநுரகுமார திசாநாயக்க இந்திய விஸ்தரிப்புவாதத்தை பேசிய ஜே.வி.பியின் தலைவராக உள்ள போதிலும் இலங்கையின் அடுத்த மக்கள் தலைவராக உருவெடுக்க போகிறார் என்பதை புலனாய்வு தகவல்கள் ஊடாக உணர்ந்த புதுடில்லி கடந்த ஆண்டு அவரை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தது.

இந்தியா தொடர்பான ஜேவிபியின் வரலாற்று நிலைப்பாடு அநுரவின் இந்தப் பயணத்தின் பின்னர் சில மாற்றங்களுக்கு உள்ளானது என்பதுடன், இந்தியாவையை பகைத்துக்கொண்டு இலங்கையை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வது கடினம் என்பதையும் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி உணர்ந்ததுடன், பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்காலத்தில் அமையும் தமது அரசாங்கம் எடுக்காதெனவும் தெரிவித்திருந்தார்.

பேசுபொருளாகுமா கச்சத்தீவு

பாரம்பரியமாக தேசியவாதத்தை பேசிய கட்சியான ஜே.வி.பி , இலங்கைத் தீவில் இந்திய செல்வாக்கை நீண்டகாலமாக எதிர்த்திருந்தது. 1987ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஜே.வி.பி.யின் கடுமையான எதிர்ப்பு சர்வதேச ரீதியில் மிகவும் உச்சரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தமிழர் சுயாட்சிக்காக உருவாகிய சில வாய்ப்புகளையும் ஜே.வி.பியின் கடுமையான எதிர்ப்பே இல்லாதொழித்தது.

பல தசாப்தங்களாக, ஜே.வி.பி இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) போன்ற உடன்படிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டிருந்தது. 2008இல் “கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.” என அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பதையும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் மிகவும் பேசுபொருளானதுடன், கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு வழங்கியது என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மோடி கூறப்போகும் செய்தி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் கடந்த காலத்தில் வலுவாக இருந்த போதிலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை பேசிய கட்சியாக உள்ள ஜே.வி.பியின் தலைவர் ஒருவர் முதல் முறையாக இலங்கையின் அரச தலைவராக இந்திய அரச தலைவரை சந்திக்கிறார். இதனால் கடந்தகால வரலாறுகளும் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் இந்த சந்திப்பு குறித்து சர்வதேசம் உற்றுநோக்கியுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசாங்கங்கள் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கிற போகிறது, இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் மோடி அநுரவிடம் என்ன கூற போகிறார், இருநாட்டு பொருளாதார உறவுகள் எவ்வாறு வலுபெற போகிறது மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அநுரவிடம் மோடி கூற போகும் செய்தி என்ன என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக உள்ளது.

புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டாலும் அதில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்க என்பதே இந்திய அரசியல் ஆய்வாளர்களது கருத்தாகும். இதனை மோடி அநுரவிடம் உறுதியாக கூற உள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஆழமான பேச்சு

இந்தியா தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க தனது தொனியை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளார் என்பதே அவரது பல கருத்துகள் எடுத்துரைக்கின்றன.  அதன் காரணமாகவே தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்காக அநுர இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் இராஜதந்திரியாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் பூகோள அரசியல் நகர்வுகள் இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையக் கூடாதென்ற செய்தியை தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றதாகும். வெளியுலகுக்கு அது சம்பிரதாயப்பூர்வமான அழைப்பை விடும் சந்திப்பாக காட்டப்பட்டாலும் அது இந்தியாவின் உள் எண்ண ஓட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.

பூகோள அரசியலில் இயக்கவியலை அநுர மறுத்துச் செயல்பட்டால் அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழலை மீண்டும் தமது அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தும் என்பதை அநுர அறிந்தவராக இருப்பார என்பதால் இந்தியாவின் கருத்துகளை அவர் புறக்கணித்து செயல்பட மாட்டார் என்றும் புதுடில்லி வழங்கப்போகும் சிவப்பு கம்பள வரவேற்புக்கு மரியாதையளிக்கும் நபராகவே அநுர எதிர்காலத்தில் செயல்படுவார் என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் நிலையம், இருநாடுகளையும் இணைக்கும் கடல்வழி பாலம், கேபிள் முறையில் மின்சாரப் பரிமாற்ற திட்டம் மற்றும் கடந்த அரசாங்கம் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் அநுரவின் இந்தப் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பதுடன், இவை தொடர்பிலான ஆழமான பேச்சுகள் இடம்பெறும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரமணியம் நிஷாந்தன்

The post அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? appeared first on Oruvan.com.