ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி Archives - Oruvan.com

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குரிய ஏற்பாடு தீவிரம்
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைய அந்தக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரட்ணலிங்கத்துக்குக் கடிதம் மூலம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழினம் சார்ந்த பல பொது விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பாரிய விமர்சனங்கள் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆராய்ந்தது.

அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் முக்கியமான சகல பொது விடயங்களில் இணைக்கப்பாட்டுடன் இணைந்து செயற்படுவது காலத்தின் தேவை எனக் கருதி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் ஒரு பூர்வாங்கக் கலந்துரையாடலை நடத்துவற்கு உத்தேசித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், அந்தக் கடிதத்துக்குப் பதிலளித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர், “உங்கள் கடிதம் குறித்து கூட்டணிக்குள் ஆராய்ந்து இயன்றளவு விரைவாகப் பதிலளிக்க நடவடிக்கை எடுப்பேன்.” – தெரிவித்துள்ளார்.

The post தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குரிய ஏற்பாடு தீவிரம் appeared first on Oruvan.com.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – தமிழ்த் கட்சிகள் ஜனவரி 25இல் பேச்சு
புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில் நடந்த சந்திப்பில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

“இதுவரை நாங்கள் மூன்று தரப்பும் தனித்தனியாகச் சந்தித்து வந்த கட்டத்தில் இந்தத் தரப்புக்களை ஒன்றாகச் சந்தித்து இணக்கப்பாட்டை எட்ட எண்ணியுள்ளோம். இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு    எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் அந்தந்தக் கட்சிகள் இந்த முயற்சிக்கு யாரைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்றனவோ அவர்கள் அந்தத் தரப்புகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்தச் சந்திப்பு ஓர் ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைய வேண்டும். இந்த மூன்று தரப்புகளுக்கும் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய ஆணையை வழங்கியுள்ள நிலையில் அந்த ஆணையை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தேவைப்படும் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும் நோக்கோடுதான் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.” – என்றார்.

The post தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – தமிழ்த் கட்சிகள் ஜனவரி 25இல் பேச்சு appeared first on Oruvan.com.